11 மாதங்களின் பின்னர் தென்னாபிரிக்க அணியில் இணைந்த டேல் ஸ்டெய்ன்

161

இங்கிலாந்து அணியுடன் நடைபெறவுள்ள டி20 சர்வதேச தொடருக்கான தென்னாபிரிக்க அணியின் தலைவராக விக்கெட் காப்பாளர் குயின்டன் டி கொக் நியமிக்கப்பட்டுள்ளதுடன், அணியின் வேகப்பந்துவீச்சாளரான டேல் ஸ்டெய்ன் நீண்ட இளைவெளியின் பின்னர் தென்னாபிரிக்க அணியில் இடம்பிடித்துள்ளார். 

தென்னாபிரிக்க கிரிக்கெட் அணி தற்சமயம் சொந்த மண்ணில் இங்கிலாந்து கிரிக்கெட் அணியுடன் மூவகையான கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடிவருகிறது. முதல் தொடரான உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரை தென்னாபிரிக்க மண்ணில் வைத்து இங்கிலாந்து அணி 3-1 என்ற அடிப்படையில் கைப்பற்றியிருந்த நிலையில் அடுத்த தொடரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச தொடர் தற்சமயம் நடைபெற்று வருகிறது. 

இலங்கையுடனான டெஸ்ட் தொடரிலிருந்து ஜொப்ரா ஆர்ச்சர் விலகல்

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முக்கிய வேகப் பந்துவீச்சாளரான ஜொப்ரா ஆர்ச்சர்…

இந்நிலையில் குறித்த இருதரப்பு தொடரின் இறுதியும், அடுத்த தொடருமான 3 போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச தொடர் எதிர்வரும் புதன்கிழமை (12) ஆரம்பமாகவுள்ள நிலையில் குறித்த தொடருக்கான தென்னாபிரிக்க அணியின் 16 பேர் கொண்ட குழாம் அந்நாட்டு கிரிக்கெட் சபையினால் இன்று (8) வெளியிடப்பட்டுள்ளது. 

தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் வழமையான அணித்தலைவராக செயற்படுவருபவர் பெப் டு பிளஸிஸ். இவரின் தலைமையில் தென்னாபிரிக்க அணி கடந்த காலங்களில் எதிர்பாராத விதமாக மிக மோசமான தோல்விகளை கண்டுவந்த நிலையில் தென்னாபிரிக்க கிரிக்கெட் சபையானது பெப் டு பிளஸிஸிற்கு மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு வழங்கியுள்ளது. 

அதன் அடிப்படையில் குறித்த இங்கிலாந்து தொடருக்கான ஒருநாள் அணியின் தலைவராக இளம் விக்கெட்காப்பு துடுப்பாட்ட வீரர் குயின்டன் டி கொக் நியமிக்கப்பட்டார். அதேபோன்று தொடர்ந்தும் டி20 சர்வதேச அணியின் தலைவராகவும் குயின்டன் டி கொக் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த வருட இறுதியில் இந்திய அணியுடனான டி20 சர்வதேச தொடரில் குயின்டன் டி கொக் முதல் முறையாக டி20 அணித்தலைவராக செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவி சஷிகலா சிறிவர்தன ஓய்வு

இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவியும், சிரேஷ்ட…

தொடர்ச்சியான உபாதை காரணமாக தென்னாபிரிக்க அணியில் இடம்பெறும் வாய்ப்பை இழந்துவந்த அவ்வணியின் முக்கிய அனுபவ வேகப்பந்துவீச்சாளரான டேல் ஸ்டெய்ன் உபாதையிலிருந்து மீண்டு அவுஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் பிக்பேஷ் லீக் தொடரில் விளையாடிவரும் நிலையில் தற்போது 11 மாதங்களின் பின்னர் டி20 சர்வதேச போட்டி மூலமாக தென்னாபிரிக்க அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார். 

36 வயதுடைய வேகப்பந்துவீச்சாளரான டேல் ஸ்டெய்ன் இறுதியாக கடந்த வருடம் மார்ச் மாதம் செஞ்சூரியனில் இலங்கை அணியுடன் நடைபெற்ற டி20 சர்வதேச போட்டியில் இறுதியாக சர்வதேச போட்டியொன்றில் விளையாடியிருந்தார். இதேவேளை இளம் வேகப்பந்துவீச்சாளரான ககிஸோ ரபாடா தனிப்பட்ட காரணங்களுக்காக ஓய்வில் சென்றுள்ளதன் காரணமாக குறித்த குழாமில் இடம்பெறவில்லை.

குறித்த டி20 சர்வதேச குழாமில் இரண்டு வீரர்கள் அறிமுக வீரர்களாக இணைக்கப்பட்டுள்ளனர். 66 டி20 போட்டிகளில் விளைடியுள்ள 33 வயதுடைய துடுப்பாட்ட வீரர் பைட் வென் பில்ஜொன் மற்றும் ஒருநாள் குழாமில் இடம்பெற்றும் உடற்தகுதி குறைவு காரணமாக ஒருநாள் குழாமிலிருந்து தவறவிடப்பட்ட வேகப்பந்துவீச்சாளர் சிஸண்டா மகலா ஆகியோர் இவ்வாறு முதல் முறையாக டி20 சர்வதேச குழாமிற்கு அழைக்கப்பட்டுள்ளனர். 

மகளிர் T20I உலகக் கிண்ணத்துக்கான இலங்கை குழாம் அறிவிப்பு

ஐசிசி மகளிர் T20I கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடருக்கான 15 பேர்கொண்ட இலங்கை…

கடந்த 2014 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டியினூடாக தென்னாபிரிக்க அணியில் இடம்பெற்று 5 வருடங்களின் பின்னர் கடந்த வருடம் இந்திய அணியுடான தொடரில் டி20 சர்வதேச அறிமுகம் பெற்றுக்கொண்ட துடுப்பாட்ட வீரர் டெம்பா பவுமா மற்றும் இந்திய அணியுடனான அதே தொடரில் டி20 சர்வதேச அறிமுகம் பெற்றுக்கொண்ட மற்றுமொரு வீரரான சுழல் பந்துவீச்சாளர் போர்ஜன் போர்ச்சன் ஆகியோர் 2 டி20 சர்வதேச போட்டிகளில் மாத்திரம் விளையாடிய நிலையில் தொடர்ந்தும் டி20 குழாமில் இடம்பெற்றுள்ளனர். 

அனுபவ வீரர்களான சகலதுறை வீரர் கிறிஸ் மொரிஸ் மற்றும் சுழல் பந்துவீச்சாளர் இம்ரான் தாஹீர் ஆகியோர் தொடர்ந்தும் தென்னாபிரிக்க டி20 அணியில் தவறவிடப்பட்டுள்ளனர். கிறிஸ் மொரிஸ் அவுஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் பிக்பேஷ் லீக் தொடரிலும், இம்ரான் தாஹிர் தென்னாபிரிக்காவில் நடைபெற்றும் மொமெண்டம் ஒருநாள் கிண்ண தொடரிலும் விளையாடி வருகின்றனர். 

இதேவேளை கடந்த 2017 இல் இலங்கை அணியுடன் நடைபெற்ற போட்டியில் டி20 சர்வதேச அறிமுகம் பெற்று இறுதியாக 2018 பெப்ரவரியில் டி20 சர்வதேச போட்டியில் விளையாடிய துடுப்பாட்ட சகலதுறை வீரர் ஜொன் ஜொன் ஸ்மட்ஸ் 2 வருடங்களின் பின்னர் மீண்டும் டி20 சர்வதேச போட்டியில் விளையாடும் அடிப்படையில் குழாமில் இடம்பெற்றுள்ளார்.  

சங்கக்காரவை உலகின் சமாதானத் தூதராக கௌரவித்த எஸ்.பி பாலசுப்ரமணியம்

இலங்கையில் நடத்தப்பட்டு வருகின்ற பாரம்பரிய கலாச்சார விழாக்களில்…

இங்கிலாந்து தொடருக்கான தென்னாபிரிக்க டி20 குழாம்

குயின்டன் டி கொக் (அணித்தலைவர்), ரீஸா ஹென்ட்ரிக்ஸ், டொம்பா பவுமா, ரைஸ் வென் டர் டைஸன், டேவிட் மில்லர், பைட் வென் பில்ஜொன், டுவைன் பிரிட்டோரியஸ், அண்டில் பெஹ்லுக்வாயோ, ஜொன் ஜொன் ஸ்மட்ஸ், பியூரன் ஹென்ட்ரிக்ஸ், தப்ரிஷ் ஷம்ஷி, லுங்கி ங்கிடி, சிஸண்டா மகலா, போர்ஜன் போர்ச்சன், டேல் ஸ்டைன், ஹென்ரிச் கிளாஸன்

டி20 சர்வதேச தொடர் போட்டி அட்டவணை

  • 12 மார்ச் – முதலாவது டி20 சர்வதேச போட்டி – ஈஸ்ட் லண்டன்
  • 14 மார்ச் – இரண்டாவது டி20 சர்வதேச போட்டி – டேர்பன்
  • 16 மார்ச் – மூன்றாவது டி20 சர்வதேச போட்டி – செஞ்சூரியன்  

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<