இலங்கை அணிக்கு எதிராக டேர்பனில் நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியில், அபார பந்து வீச்சால் மிரட்டிய டேல் ஸ்டெய்ன், டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியலில், இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கபில் தேவை பின்தள்ளியுள்ளார்.
வேகப்பந்து வீச்சாளர்களினால் இலங்கைக்கு பதிலடி தந்த தென்னாபிரிக்கா
சுற்றுலா இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு …
இலங்கை – தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி டேர்பனில் உள்ள கிங்ஸ்மீட் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகின்றது. இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 235 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் பின்னர் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணிக்கு டேல் ஸ்டெய்ன் தனது வேகத்தால் நெருக்கடியை ஏற்படுத்தியிருந்தர். இதன் மூலம் இலங்கை அணி 191 ஓட்டங்களுக்கு சுருண்டது.
டேல் ஸ்டெய்ன் இலங்கை அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர்களான லஹிரு திரிமான்னே, ஓசத பெர்னாண்டோ மற்றும் குசல் பெரேரா ஆகியோரின் விக்கெட்டுகள் உட்பட 48 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். இதில், லஹிரு திரிமான்னேவின் விக்கெட்டினை வீழ்த்திய இவர், கபில் தேவின் சாதனையை சமப்படுத்தியிருந்தார்.
இந்திய அணியின் வேகப்பந்து சகலதுறை வீரரான கபில் தேவ், டெஸ்ட் போட்டிகளில் 434 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இவர், இந்திய அணி சார்பாக டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய 2வது வீரர் என்ற பெருமையை பெற்றவர் என்பதுடன், சர்வதேசத்தில் 8வது வீரர் என்ற பெருமையையும் பெற்றிருந்தார். இந்த நிலையில், இலங்கை அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தின் போது, அறிமுக வீரர் ஓசத பெர்னாண்டோவின் விக்கெட்டினை சாய்த்த ஸ்டெய்ன், 435 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தி, கபில் தேவினை முந்தியுள்ளார்.
அத்துடன், நேற்றைய தினம் 4 விக்கெட்டுகளை கைப்பற்றிய டேல் ஸ்டெய்ன், மொத்தமாக டெஸ்ட் போட்டிகளில் 437 விக்கெட்டுகளை கைப்பற்றி, இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டுவர்ட் புரோட்டின் 437 (231 இன்னிங்ஸ்) விக்கெட்டுகளை சமப்படுத்தியுள்ளார். எனினும், இன்னிங்ஸ் அடிப்படையில் முன்னிலைப் பெற்றுள்ள ஸ்டெய்ன், (168 இன்னிங்ஸ்) டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் 7வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
விஷ்வ, ராஜிதவின் பந்து வீச்சை புகழ்ந்த குயிண்டன் டி கொக்
இலங்கை அணியில் விளையாடும் அறிமுகமற்ற புதிய வேகப்பந்து…
தென்னாபிரிக்க அணியில் விளையாடி வரும் அனுபவம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளரான டேல் ஸ்டெய்ன், உபாதை காரணமாக கடந்த 2 வருடங்களாக போட்டிகளில் தொடர்ந்தும் விளையாட முடியாத நிலை ஏற்பட்டிருந்தது. எனினும், இறுதியாக நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான தொடரில் விளையாடிய இவர், தென்னாபிரிக்க அணி சார்பாக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய ஷோர்ன் பொல்லொக்கின் (421 விக்கெட்டுகள்) சாதனையையும் முறியடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<