தோற்பட்டை உபாதைக்கு ஆளாகிய தென்னாபிரிக்க நட்சத்திர வேகப் பந்துவீச்சாளரான டேல் ஸ்டெய்ன், தனது உபாதையிலிருந்து குணமாகாத காரணத்தினால் உலகக் கிண்ணத் தொடரிலிருந்து முழுமையாக வெளியேறியிருக்கின்றார்.
களத்தடுப்பில் செய்த தவறே தோல்விக்குக் காரணம் – இயென் மோர்கன்
பாகிஸ்தான் அணிக்கெதிரான போட்டியில் எமது வீரர்கள் களத்தடுப்பில் செய்த தவறுகள் காரணத்தால் அணி
ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை சாய்த்த பந்துவீச்சாளர்கள் வரிசையில் ஐந்தாம் இடத்தில் இருக்கும் டேல் ஸ்டெய்ன், தனது தோற்பட்டை உபாதை காரணமாக தென்னாபிரிக்க அணி, உலகக் கிண்ணத் தொடரில் பங்கேற்ற முதல் இரண்டு போட்டிகளிலும் விளையாடியிருக்கவில்லை. இதோடு, அவர் உலகக் கிண்ணப் பயிற்சிப் போட்டிகளிலும் பங்கேற்க தவறியிருந்தார்.
எனினும், டேல் ஸ்டெய்ன் தனது தோற்பட்டை உபாதையில் இருந்து குணமடைந்து தென்னாபிரிக்க அணி இந்த உலகக் கிண்ணத் தொடரில் விளையாடும் ஏனைய போட்டிகளில் பங்கேற்பார் என முன்னர் எதிர்பார்க்கப்பட்டிருந்தது.
இவ்வாறானதொரு நிலையிலேயே டேல் ஸ்டெய்ன் தனது உபாதையில் இருந்து குணமடைய தவறி, உலகக் கிண்ணத் தொடரில் இருந்து முழுமையாக வெளியேறியிருக்கின்றார்.
இதேநேரம், ஸ்டெயினின் இடத்தினை தென்னாபிரிக்க குழாத்தில் நிரப்புவதற்காக இடதுகை வேகப் பந்துவீச்சாளரான பீயுரன் ஹென்ரிக்ஸிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்திய அணிக்கெதிரான மோதலில் லுங்கி ன்கிடியினை இழக்கும் தென்னாபிரிக்கா
உலகக் கிண்ணத் தொடரில் பங்களாதேஷ் அணியுடனான போட்டியில் உபாதைக்கு ஆளாகிய தென்னாபிரிக்க அணியின்
பீயுரன் ஹென்ரிக்ஸ் இந்த ஆண்டு ஜனவரி மாதம் பாகிஸ்தான் அணிக்கு எதிரான தொடர் மூலம் ஒருநாள் போட்டிகளில் அறிமுகமாகியிருந்ததோடு, இரண்டு ஒருநாள் போட்டிகளில் மட்டுமே இதுவரையில் விளையாடியிருக்கின்றார்.
உலகக் கிண்ணத் தொடரில் தமது முதல் இரண்டு போட்டிகளிலும் தோல்வியினை சந்தித்திருக்கும் தென்னாபிரிக்க அணி, தமது வேகப் பந்துவீச்சாளர்களில் ஒருவரான லுங்கி ன்கிடியினையும் தசை உபாதை ஒன்றின் காரணமாக சில நாட்களுக்கு இழந்து தவிக்கின்றது. அதோடு, அனுபவம் கொண்ட டேல் ஸ்டெய்னும் இல்லாமல் போயிருப்பதால் தென்னாபிரிக்க அணிக்கு இந்த உலகக் கிண்ணத் தொடரில் பெரும் நெருக்கடி உருவாகியிருக்கின்றது.
தமது முக்கிய பந்துவீச்சாளர்களை இழந்திருக்கும் தென்னாபிரிக்க அணி, உலகக் கிண்ணத் தொடரில் பங்கெடுக்கும் அடுத்த போட்டி இந்திய அணியுடன் நாளை (05) செளத்எம்ப்டன் நகரில் இடம்பெறவுள்ளது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<