தென்னாபிரிக்க அணி சார்பாக அதிக டெஸ்ட் விக்கெட்டுக்களை வீழ்த்திய டேல் ஸ்டெய்ன்

451
Image - Sky Sports

தென்னாபிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளரான டேல் ஸ்டெய்ன் தென்னாபிரிக்க அணி சார்பாக அதிகூடிய டெஸ்ட் விக்கெட்டுக்களை வீழ்த்தியவர் என்ற பெருமையை இன்று (26) தனதாக்கியுள்ளார்.

தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி அங்கு தென்னாபிரிக்க அணியுடன் 3 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் 2 டி20 போட்டிகள் கொண்ட மூவகையான கிரிக்கெட் தொடர்களிலும் ஆடவுள்ளது.

சுற்றுப்பணயத்தின் முதல் தொடரான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இன்று (26) தென்னாபிரிக்காவின் செஞ்சூரியனில் ஆரம்பமாகி தற்சமயம் நடைபெற்று வருகின்றது.

பந்தை சேதப்படுத்துமாறு கூறியது யார்? ; உண்மையை வெளியிட்ட பென்கிரொப்ட்

அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையினால் பந்தை சேதப்படுத்திய விவகாரத்துக்காக…

இந்த போட்டி ஆரம்பமாகுவதற்கு முன்னார் தென்னாபிரிக்க அணி சார்பாக அதிக விக்கெட்டுக்களை வீழ்த்தியவர் என்ற ஷோன் பொல்லக்கின் சாதனையை டேல் ஸ்டெய்ன் சமன் செய்திருந்தார்.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கியது. அந்த வகையில் தென்னாபிரிக்க அணி பந்துவீச தயாராகியது.

6ஆவது ஓவரின் முதல் பந்தில் பாகிஸ்தான் அணியின் 2ஆவது விக்கெட்டாக பகர் ஸமான் 12 ஓட்டங்களுடன் இரண்டாவது ஸ்லிப் திசையில் டேல் ஸ்டைனின் பந்து வீச்சில் ஆட்டமிழக்கும் போது ஷோன் பொல்லக்கின் குறித்த சாதனையை முறியடித்தார்.

குறித்த சாதனையை முறியடிப்பதற்கு 5 விக்கெட்டுக்கள் மாத்திரம் தேவைப்பட்டிருந்த நிலையில் 2016ஆம் ஆண்டு ஆஸி. அணியுடன் டெஸ்ட் போட்டியொன்றில் விளையாடிக் கொண்டிருக்கும் போது ஸ்டைனுக்கு தோள் பட்டையில் பாரிய உபாதையொன்று ஏற்பட்டிருந்தது.

இதன் காரணமாக ஸ்டைனுக்கு போட்டிகளில் தொடர்ந்தும் விளையாடுவதில் சிக்கல் நிலைமை ஏற்பட்டது. பலரும் ஸ்டைனுடைய கிரிக்கெட் வாழ்க்கை இத்துடன் முடிந்து விட்டது. இனி அவரால் ஓடி வந்து பந்துவீசுவது கடினம் என குறிப்பிட்டிருந்தனர். ஆனால் இந்த கதைகள் அனைத்தையும் பொய்யாக்கி டேல் ஸ்டெய்ன் மீண்டெழுந்து 2 வருடங்களுக்கு பிறகு அந்த 5 விக்கெட்டுக்களையும் வீழ்த்தி தென்னாபிரிக்காவின் சாதனை மன்னனாக மாறியுள்ளார்.

35 வயதாகும் டேல் ஸ்டெய்ன் தற்போது 89 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி மொத்தமாக 422 டெஸ்ட் விக்கெட்டுக்களை வீழ்த்தி தென்னாபிரிக்க அணி சார்பாக அதிக டெஸ்ட் விக்கெட்டுக்களை வீழ்த்தியவர் என்ற பெருமையை தன்வசப்படுத்தியுள்ளார்.

ஷோன் பொல்லக் மூலமாக நிலைநாட்டப்பட்ட இந்த சாதனையானது 10 வருடங்களுக்கு முன்னர் நிகழ்த்தப்பட்டதாகும். இதனை முறியடிக்க அடுத்த தென்னாபிரிக்க பந்துவீச்சாளருக்கு 10 வருடங்கள் தேவைப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

2004 டிசம்பர் 17ஆம் திகதி டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கைக்குள் தடம் பதித்த டேல் ஸ்டெய்ன் கிட்டத்தட்ட 14 வருடங்களுக்கு பிறகு தனது கிரிக்கெட் வாழ்கையில் புதிய புரட்சி ஒன்றை ஏற்படுத்தியுள்ளார்.

சாதனை நிகழ்த்திய டேல் ஸ்டைனுக்கு பல்வேறு நாட்டை சேர்ந்த கிரிக்கெட் வீரர்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இலங்கை நாட்டை சேர்ந்த முன்னாள் அணித்தலைவர் குமார் சங்கக்கார மற்றும் கிரிக்கெட் வர்ணனையாளர் ரசல் ஆர்னோல்ட் ஆகியோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தென்னாபிரிக்க அணி சார்பாக அதிக விக்கெட்டுக்களை வீழ்த்திய வீரர்களின் பட்டியல் பின்வருமாறு,

  1. டேல் ஸ்டெய்ன் – 422 விக்கெட்டுக்கள் (89 போட்டிகள்)
  2. ஷோன் பொல்லக் – 421 விக்கெட்டுகள் (108 போட்டிகள்)
  3. மகாயா நிடினி – 390 விக்கெட்டுக்கள் (101 போட்டிகள்)
  4. எலன் டொனல்ட் – 330 விக்கெட்டுக்கள் (72 போட்டிகள்)
  5. மோர்னி மோர்கல் – 309 விக்கெட்டுக்கள் (86 போட்டிகள்)

சர்வதேச ரீதியில் அதிக டெஸ்ட் விக்கெட்டுக்களை வீழ்த்தியவர்கள் வரிசையில் முதலாமவராக எமது நாட்டை சேர்ந்த சுழல் ஜாம்பவான் முத்தையா முரளிதரன் திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது. அவர் 800 டெஸ்ட் விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆறு மாதங்களின் பின்னர் மீண்டும் இந்திய அணியில் டோனி

இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த மூன்று சுற்றுப் போட்டிகளுக்குமான…

சர்வதேச ரீதியில் அதிக டெஸ்ட் விக்கெட்டுக்களை வீழ்த்தியவர்களின் பட்டியல் பின்வருமாறு,

  1. முத்தையா முரளிதரன் (இலங்கை) – 800 விக்கெட்டுக்கள் (133 போட்டிகள்)
  2. ஷேன் வோர்ன் (அவுஸ்திரேலியா) – 708 விக்கெட்டுக்கள் (145 போட்டிகள்)
  3. அனில் கும்ப்ளே (இந்தியா) – 619 விக்கெட்டுக்கள் (132 போட்டிகள்)
  4. ஜேம்ஸ் அண்டர்சன் (இங்கிலாந்து) – 565 விக்கெட்டுக்கள் (145 போட்டிகள்)
  5. கிளேன் மெக்ராத் (அவுஸ்திரேலியா) – 563 விக்கெட்டுக்கள் (124 போட்டிகள்)

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க

Kumar Sangakkara on Twitter

Well deserved for a true champion. Lengend of a cricketer and a legend…

Russel Arnold on Twitter

Congratulations @DaleSteyn62 Great to watch…