தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் அனுபவ வேகப் பந்துவீச்சாளர் டேல் ஸ்டெய்ன் (36 வயது) சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். எனினும், தொடர்ந்தும் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டித் தொடர்களில் விளையாடுவார் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் அவுஸ்திரேலியாவுக்கு முதல் வெற்றி
இங்கிலாந்தின் எஜ்பெஸ்டனில் நடைபெற்ற ……..
தென்னாபிரிக்க அணியின் முன்னணி வேகப் பந்துவீச்சாளரான டேல் ஸ்டெய்ன் தொடர்ச்சியாக உபாதைகளால் அவதிப்பட்டு வருகின்றார். இறுதியாக, உபாதை காரணமாக உலகக் கிண்ண குழாத்தில் இடம்பெற்றும், பின்னர் குழாத்திலிருந்து விலகினார்.
தற்போது அவரது உபாதைகளை கருத்திற்கொண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக ஸ்டெயின் அறிவித்துள்ளார். தனது ஓய்வு குறித்து அவர் குறிப்பிடுகையில்,
“இன்றைய தினம் கிரிக்கெட்டில் நான் அதிகம் விரும்பிய டெஸ்ட் போட்டிகளிலிருந்து விடைபெறுகிறேன். கிரிக்கெட்டில் மிகச்சிறந்தது டெஸ்ட் கிரிக்கெட் தான். டெஸ்ட் கிரிக்கெட்டானது உடல் மற்றும் மனதளவில் எம்மை பலப்படுத்தக்கூடியது. எனினும், தற்போது என்னால் டெஸ்ட் கிரிக்கெட்டின் மீது அவதானம் செலுத்துவதற்கு முடியாது. எனவே, ஒருநாள் மற்றும் T20I போட்டிகளில் மாத்திரம் விளையாடுவதற்கு தீர்மானித்துள்ளேன். எனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்விற்கு உதவிய அனைவருக்கும் நன்றிகளை தெரிவிக்கிறேன்” என்றார்.
டேல் ஸ்டெய்ன் கடந்த 2015ம் ஆண்டு டேர்பனில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது, தோற்பட்டை உபாதைக்கு முகங்கொடுத்தார். இதன் பின்னர், தொடர்ச்சியாக அவரால் போட்டிகளில் பங்கேற்க முடியவில்லை. பின்னர், 2016ம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட ஆரம்பித்த போதும், மீண்டும் உபாதைக்கு உள்ளானார்.
ஐசிசியின் எச்சரிக்கைக்குள்ளான இந்திய வீரர்
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டாவது …….
எனினும், 2018-19 பருவகாலங்களில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர்களில் வெற்றிகரமான முறையில் மீள்வருகை தந்திருந்த போதும், உலகக் கிண்ணத்துக்கு முன்னர், மீண்டும் தோற்பட்டை உபாதைக்கு டேல் ஸ்டெய்ன் முகங்கொடுத்திருந்தார்.
தென்னாபிரிக்க டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிகூடிய விக்கெட்டுகளை (439) கைப்பற்றியவர் என்ற சாதனையுடன் ஓய்வுபெறும் டேல் ஸ்டெய்ன், 2004ம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகியிருந்தார். அதேநேரம், இவர் பாகிஸ்தான் அணிக்கு எதிராக கடந்த 2013ம் ஆண்டு வொண்டரஸில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 60 ஓட்டங்களுக்கு 11 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். இதுவே அவரது டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகச்சிறந்த பந்துவீச்சு என்பதும் குறிப்பிடத்தக்கது.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<