தென்னாபிரிக்க முன்னணி வேகப் பந்துவீச்சாளரான டேல் ஸ்டெய்ன், அனைத்துவகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக குறிப்பிட்டிருக்கின்றார்.
தென்னாபிரிக்க தொடர்களுக்கான இலங்கை கிரிக்கெட் குழாம்கள் அறிவிப்பு
கடந்த 2019ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் ஓய்வினை அறிவித்த டேல் ஸ்டெய்ன் அதனை அடுத்து, கடைசியாக 2020ஆம் ஆண்டின் பெப்ரவரி மாதம் அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்ற T20 போட்டியில் விளையாடியிருந்தார். எனினும், அதற்கு பின்னர் தொடர்ச்சியான உபாதைகள் காரணமாக ஸ்டெய்னிற்கு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவது சிரமமாக மாறியிருந்தது.
இவ்வாறு தொடர்ச்சியாக கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்காமல் இருந்த டேல் ஸ்டெய்ன், இன்று (31) தனது டுவிட்டர் கணக்கு மூலமாக தான் அனைத்துவகை கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்து ஓய்வு பெறுவதாக தெரிவிந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Announcement. pic.twitter.com/ZvOoeFkp8w
— Dale Steyn (@DaleSteyn62) August 31, 2021
தென்னாபிரிக்க அணிக்காக 99 டெஸ்ட் போட்டிகளில் ஆடியிருக்கும் டேல் ஸ்டெய்ன் 439 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருப்பதோடு, 125 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 196 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருக்கின்றார். இதேநேரம், தென்னாபிரிக்க அணிக்காக 47 T20I போட்டிகளில் ஆடியிருக்கும் அவர் 64 விக்கெட்டுக்களை சாய்த்திருப்பது குறிப்பிடத்தக்கது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<