தந்தையருக்கான கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் கொழும்பில் ஆரம்பம்

421

பாரம்பரிய கிரிக்கெட்டிலிருந்து நவீன கிரிக்கெட் அண்மைக்காலமாக பல முன்னேற்றங்களையும், மாற்றங்களையும் பெற்று வருகின்றது. அந்த வரிசையில் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஒரு நாள் போட்டிகளுக்கும், பின்னர் டி-20 போட்டிகளுக்கும் மாற்றம் பெற்ற கிரிக்கெட் தற்போது டி-10 போட்டிகளாகவும் நடைபெற்று வருகின்றது.

SLC T20 லீக் பணிப்பாளராக சஜித் பெர்னாண்டோ நியமனம்

இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் இம்மாத …

இந்த நிலையில், இலங்கையில் முதற்தடவையாக எனது தய்தையே எனது நாயகன் என்ற தொனிப்பொருளில் புதியவகை கிரிக்கெட் போட்டித் தொடரொன்று இலங்கை அணியின் முன்னாள் தலைவரும், 1996 உலகக் கிண்ண வெற்றி நாயகனுமான அர்ஜுன ரணதுங்கவின் தலைமையில் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1990 காலப்பகுதியில் இலங்கை அணிக்காக விளையாடிய வீரர்கள் மற்றும் 1996 உலகக் கிண்ண அணியில் இடம்பெற்ற வீரர்கள் ஆகியோரின் பங்களிப்புடன் இந்தப் போட்டித் தொடர் இடம்பெறவுள்ளமை சிறப்பம்சமாகும்.

இந்நிலையில், இந்த கிரிக்கெட் போட்டித் தொடர் குறித்த விசேட சந்திப்பும், ஒப்பந்தத்தில் வீரர்கள் கைச்சாத்திடலும் நேற்று (06) கொழும்பில் இடம்பெற்றது.

இதன்போது, முன்னாள் அணித் தலைவர் அர்ஜுன ரணதுங்க, சமிந்த வாஸ், பிரமோத்ய விக்ரமசிங்க, உபுல் சந்தன, லங்கா டி சில்வா, அவிஷ்க குணவரத்ன, ஹஷான் திலகரட்ன, அசங்க குருசிங்க, சனத் ஜயசூரிய, ரவிந்திர புஷ்பகுமார ஆகிய முன்னாள் வீரர்கள் பங்குபற்றியிருந்தனர்

சுமதிபாலவின் ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டை அர்ஜுன, அரவிந்த நிராகரிப்பு

எமது கிரிக்கெட் வாழ்க்கையில் ஆட்ட நிர்ணயத்தில் …

இதில் கலந்துகொண்டு உரையாற்றிய அர்ஜுன ரணதுங்க, ”இப்போட்டித் தொடரானது வெறுமனே கிரிக்கெட் களியாட்டமாக இருக்காது. மாறாக கிராமப் புறங்களில் கிரிக்கெட் விளையாட்டை அபிவிருத்தி செய்வதற்கான உதவிகளை பெற்றுக்கொடுப்பதே எமது முக்கிய நோக்கமாக அமைந்துள்ளது. எனவே, இந்த கிரிக்கெட் போட்டியை ஒரு சமூகசேவையாக தொடர்ந்து நடத்துவதற்கு எதிர்பார்த்துள்ளோம்” எனத் தெரிவித்தார்.

அதேபோல, ஒவ்வொரு வீரரினதும் வெற்றிக்கு அவர்களது தந்தையர் அளப்பெரிய தியாகம் செய்திருப்பதை யாரும் மறுக்க முடியாது. எனவே, கிரிக்கெட்டை விரும்புகின்ற தந்தையர்களுக்கு இந்தப் போட்டித் தொடரை நடத்துவதற்கு தீர்மானித்தோம். நாங்கள் விளையாடிய காலத்தில் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி விட்டு தேசிய அணிக்காக விளையாடாத பல வீரர்கள் தற்போது உள்ளனர். இவையனைத்தையும் கருத்திற்கொண்டுதான் எனது தந்தையே எனது நாயகன் என்ற தொனிப்பொருளில் கிரிக்கெட் தொடரை நடத்துவதற்கு திட்டமிட்டோம்.

இதன்படி, எனது தய்தையே எனது நாயகன் (மை டேட் மை சுப்பர் ஸ்டார்) கிரிக்கெட் தொடரின் ஆலோசகராக முன்னாள் அணித் தலைவரான அர்ஜுன ரணதுங்க செயற்படவுள்ளதுடன், ஏனைய வீரர்கள் அனைவரும் ஒவ்வொரு அணிகளினதும் தலைவர்களாக செயற்படவுள்ளனர்.

இந்த கிரிக்கெட் போட்டியானது தந்தையர்கள் மட்டுமே பங்குபற்றும் போட்டியாக அமையவுள்ளதுடன், இவர்களுக்கான ஆதரவினை ஒவ்வொரு தந்தைமார்களினதும் பிள்ளைகள் வழங்கவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

மீண்டும் இலங்கை அணியில் இணைய மாலிங்கவுக்கு வாய்ப்பு

இலங்கை அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான, …

இதன்படி, மொத்தம் 18 அணிகள் 4 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு விளையாடவுள்ள இந்த போட்டித் தொடரில் ஒவ்வொரு அணிகளினதும் பெயர்கள் தந்தைக்கு அன்பு என்ற தொனிப்பொருளில் பாடசாலைகளை அடிப்படையாகக் கொண்டு அறிவிக்கப்படவுள்ளன.

எனவே, இலங்கையில் முதலாவது தடவையாக நடைபெறவுள்ள இப்போட்டியானது எதிர்வரும் செப்டம்பர் மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ளது. டி-20 வடிவில் நடைபெறவுள்ள இப்போட்டிகள் என்.சி.சி, ப்ளூம்பீல்ட், பி.ஆர்.சி மற்றும் கோல்ட்ஸ் கழக மைதானங்களில் நடைபெறவுள்ளன. அத்துடன், இப்போட்டித் தொடரின் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் பகலிரவு ஆட்டங்களாக நடைபெறவுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

எனவே, குறித்த போட்டித் தொடர் குறித்த மேலதிக விபரங்களைப் பெற்றுக்கொள்ள 0765 36 37 37 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளும்படி ஏற்பாட்டுக் குழுவினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…