LPL தொடரில் அனுசரணையாளராக இணையும் Cycle Pure Agarbathi

Lanka Premier League 2020 – Coverage powered by My Cola

284

இலங்கையில் தற்போது நடைபெற்று வருகின்ற அங்குரார்ப்பண லங்கா ப்ரீமியர் லீக் (LPL) T20 கிரிக்கெட் தொடரின் நடுவர்களுக்கான பிரதான அனுசரணையாளராக இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக உள்ள Cycle Pure Agarbathi நிறுவனம் செயற்படும் என இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. 

இந்தியா உள்ளிட்ட பல முன்னணி நாடுகளில் நடைபெறுகின்ற கிரிக்கெட் தொடர்களுக்கு அனுசரணை வழங்கி வருகின்ற இந்நிறுவனமானது முதல்தடவையாக லங்கா ப்ரீமியர் லீக் தொடரிலும் கைகோர்த்துள்ளது.

இதன்படி, இம்முறை போட்டித் தொடரில் நடுவர்களுக்கான பிரதான அனுசரணையாளராகவும், போட்டித் தொடரின் முடிவில் மதிப்புமிக்க அணிக்காக வழங்கப்படும் Fair Play Award  விருதுக்கு அனுசரணையாளராகவும் Cycle Pure Agarbathi செயற்படவுள்ளமை சிறப்பம்சமாகும்

LPL தொடரின் பிரதான அனுசரணையாளராக My11Circle

இம்முறை லங்கா ப்ரீமியர் லீக்கில் அனுசரணையாளராக செயற்படுவது குறித்து Cycle Pure Agarbathi நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் அர்ஜுன் ரங்க கருத்து வெளியிடுகையில்

”லங்கா ப்ரீமியர் லீக்கில் இணைந்து கொள்ள கிடைத்தமை தொடர்பில் பெருமையடைகிறோம். இந்த அடித்தளமானது எமது நிறுவனத்தை மேலும் வலுப்படுத்தவுள்ளது. இதனால், கிரிக்கெட் விளையாட்டில் மாத்திரமின்றி, இலங்கையில் உள்ள சந்தைகளிலும் பலமிக்க ஒரு நிறுவனமாக உருவெடுக்க முடியும்

எமது நிறுவனத்தின் பெயரை பிரபல்யப்படுத்துவதில் கிரிக்கெட் முக்கிய இடத்தை வகிக்கின்றது. அதை எமது நிறுவனம் ஆரம்பம் செய்த நாள் முதல் நாங்கள் பிரபல்பயப்படுத்தி வந்தோம்

எனவே, கிரிக்கெட்டானது எம் அனைவரையும் ஒன்றிணைக்கும் விளையாட்டாகும். அவ்வாறானதொரு விளையாட்டுடன் இணைந்து செயற்படுவதற்கு நாங்கள் எப்போதும் ஆர்வத்துடன் உள்ளோம். அது உண்மையில் எமக்கு ஒரு கௌரவமாகும்” என தெரிவித்தார்.

Video – LPL மகுடம் சூடப்போவது யார்? Kandy,Galle அணிகளின் நிலை என்ன?

இதனிடையே, லங்கா ப்ரீமியர் லீக்கின் ஒரு அனுசரணையாளராக Cycle Pure Agarbathi நிறுவனம் இணைந்து கொண்டமை தொடர்பில் .பி.ஜி நிறுவனத்தின் பணிப்பாளராக செயற்படும் சங்கீத் சிரோத்கர் கருத்து வெளியிடுகையில்

”கொவிட் – 19 வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் Cycle Pure Agarbathi நிறுவனம் லங்கா ப்ரீமியர் லீக் தொடருக்கு அனுசரணை வழங்க முன்வந்தமை இந்த தொடர் மீது வைத்துள்ள நம்பிக்கையை பிரதிபலிக்கின்றது” என தெரிவித்தார்

பல்வேறு சவால்களுக்கு மத்தியில் நடைபெற்று வருகின்ற லங்கா ப்ரீமியர் லீக் T20 தொடர் எதிர்வரும் டிசம்பர் மாதம் 16ஆம் திகதி நிறைவுக்கு வரவுள்ளது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<