மேற்கிந்திய தீவுகள் அணியின் ஒருநாள் மற்றும் T20i போட்டிகளுக்கான புதிய தலைவர்களாக முறையே ஷேய் ஹோப் மற்றும் ரோவ்மன் பவெல் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு நடைபெற்று முடிந்த T20 உலகக் கிண்ணத் தொடரின் முதல் சுற்று தோல்வியை அடுத்து நிக்கோலஸ் பூரன் தலைவர் பதவியிலிருந்து விலகியிருந்தார்.
RCB அணியுடன் இணையும் சானியா மிர்ஷா!
இந்தநிலையில் ஒருநாள் மற்றும் T20i போட்டிகளுக்கென இரண்டு வெவ்வேறு தலைவர்களை மேற்கிந்திய தீவுகள் அணி நியமித்துள்ளது. அதன்படி ஒருநாள் போட்டிகளுக்கான தலைவராக ஷேய் ஹோப் மற்றும் T20i போட்டிகளுக்கான தலைவராக ரோவ்மன் பவெலும் செயற்படவுள்ளனர்.
ஷேய் ஹோப் மேற்கிந்திய தீவுகள் ஒருநாள் அணியின் உப தலைவராக ஏற்கனவே செயற்பட்டுவந்த நிலையில், ரோவ்மன் பவெல் T20i போட்டிகளுக்கான தலைவராக ஒருசில போட்டிகளில் செயற்பட்டுள்ளார்.
இவர்கள் இருவரும் அடுத்துவரும் தென்னாபிரிக்க அணிக்கு எதிரான தொடரில் தலைமை பொறுப்பை ஏற்று அணியை வழிநடத்தவுள்ளனர் என மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபை சுட்டிக்காட்டியுள்ளது.
தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு முதலில் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி மார்ச் 16ம் திகதி முதல் 28ம் திகதிவரை மூன்று ஒருநாள் மற்றும் மூன்று T20i போட்டிகளில் விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<