சம்பியன்ஸ் கிண்ணத்திற்காக, இலங்கை மற்றும் இந்திய அணிகள் மோதிக்கொண்ட குழு B இற்கான போட்டியில், அதி சிறப்பான துடுப்பாட்டத்தினை வெளிப்படுத்தியிருக்கும் இலங்கை அணியானது 7 விக்கெட்டுகளால் வெற்றி பெற்று சம்பியன்ஸ் கிண்ணத்தில் தமது முதல் வெற்றியினைப் பதிவு செய்துள்ளதுடன், தொடரின் அரையிறுதி வாய்ப்பினையும் தக்கவைத்துள்ளது.
சம்பியன்ஸ் கிண்ணத்திற்காக, இலங்கை மற்றும் இந்திய அணிகள் மோதிக்கொண்ட குழு B இற்கான போட்டியில், அதி சிறப்பான துடுப்பாட்டத்தினை வெளிப்படுத்தியிருக்கும் இலங்கை அணியானது 7 விக்கெட்டுகளால் வெற்றி பெற்று சம்பியன்ஸ் கிண்ணத்தில் தமது முதல் வெற்றியினைப் பதிவு செய்துள்ளதுடன், தொடரின் அரையிறுதி வாய்ப்பினையும் தக்கவைத்துள்ளது.
லண்டன் ஓவல் மைதானத்தில் ஆரம்பமாகியிருந்த இப்போட்டி சம்பியன்ஸ் கிண்ணத்தில் இலங்கை அணிக்கு அடுத்த சுற்று வாய்ப்பினை தீர்மானிக்கும் போட்டியாக இருந்த காரணத்தினால், இலங்கை அணி வீரர்கள் கட்டாயம் வெற்றிபெற வேண்டிய நிலையில் இப்போட்டிக்காக ஆயத்தமாகியிருந்தனர்.
அனைவரது விமர்சனத்திற்கும் சாட்டையடி கொடுத்த பாகிஸ்தான்
நாணய சுழற்சியில் வெற்றி பெற்றிருந்த இலங்கை அணித்தலைவர் அஞ்சலோ மெதிவ்ஸ், இந்திய அணியை துடுப்பாடப் பணித்திருந்த காரணத்தினால் இந்திய அணி சார்பாக ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக சிக்கர் தவான் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் களமிறங்கினர்.
[rev_slider ct17-dsccricket]
லசித் மாலிங்க வீசிய போட்டியின் முதல் பந்தினை பவுண்டரி எல்லைக்கு விரட்டியிருந்த இந்திய அணியின் தொடக்க வீரர்கள் நிதனமான ஆரம்பம் ஒன்றினை வெளிப்படுத்தியிருந்தனர்.
>> இலங்கை – இந்திய இடையிலான போட்டியின் ICCயின் வீடியோக்களைப் பார்வையிடுங்கள்
தொடர்ந்தும், இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர்களை சாமர்த்தியமாக எதிர்கொண்ட இந்திய அணியினர் சளைக்காத ஆட்டம் ஒன்றினை தொடர்ந்தும் வெளிப்படுத்தி முதலாவது விக்கெட்டிற்காக வலுவான 138 ஓட்டங்களைப் பகிர்ந்து கொண்டனர்.
இலங்கை அணிக்கு மிகவும் தேவையாக காணப்பட்டிருந்த இந்திய அணியின் முதல் விக்கெட்டினை நட்சத்திர பந்து வீச்சாளர் லசித் மாலிங்க கைப்பற்றியிருந்தார். இதனால், ஓய்வறை திரும்பியிருந்த வலதுகை துடுப்பாட்ட வீரர் ரோஹித் சர்மா 79 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 6 பவுண்டரிகள் அடங்கலாக 78 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.
தொடர்ந்து, துடுப்பாட வந்த இந்திய அணித்தலைவர் விராத் கோஹ்லி இலங்கை அணிக்கு அச்சுறுத்தல் தருவார் என எதிர்பார்க்கப்பட்டிருந்தும், ஓட்டம் ஏதுமின்றி நுவன் பிரதீப் மூலம் ஓய்வறை நோக்கி சென்றார். தொடர்ந்து, பாகிஸ்தான் அணியுடனான கடந்த போட்டியில் அதிரடி அரைச்சதம் கடந்திருந்த யுவராஜ் சிங்கையும் இலங்கை அணி குறைவான ஓட்டங்களுடன் (7) வீழ்த்தியது.
இவ்வாறனதொரு நிலையில் சற்று தடுமாற்றத்தினை இந்திய அணி எதிர்கொண்ட போது, ஆரம்ப துடுப்பாட்ட வீரராக வந்திருந்த சிக்கர் தவான் மற்றும், மஹேந்திர சிங் தோனி ஆகியோர் சிறப்பாட்டத்தினை வெளிப்படுத்தியிருந்தனர். இதன் மூலம் 50 ஓவர்கள் நிறைவில் இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 321 ஓட்டங்களைக் குவித்துக்கொண்டது.
இந்திய அணியின் துடுப்பாட்டத்தில், இடதுகை துடுப்பாட்ட வீரரான சிக்கர் தவான் தனது 10ஆவது சதத்தினை பூர்த்தி செய்ததோடு, மொத்தமாக 15 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 128 பந்துகளில் 125 ஓட்டங்களைக் குவித்து அசத்தியிருந்தார். அதே போன்று அரைச்சதம் விளாசியிருந்த மஹேந்திர சிங் தோனி 52 பந்துகளில் 63 ஓட்டங்களை விளாசியிருந்தார்.
இலங்கை அணியின் பந்து வீச்சில், லசித் மாலிங்க 70 ஓட்டங்களுக்கு இரண்டு விக்கெட்டுகளையும் சுரங்க லக்மால், நுவன் பிரதீப், அசேல குணரத்ன மற்றும் திசர பெரேரா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதமும் சாய்த்திருந்தனர்.
தொடர்ந்து, 322 என்ற இமாலய இலக்கினை 50 ஓவர்களில் பெறுவதற்கு பதிலுக்கு துடுப்பாட களமிறங்கிய இலங்கை அணி ஆரம்பத்தில் தொடக்க வீரராக வந்திருந்த நிரோஷன் திக்வெல்ல வெறும் 7 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்திருந்த காரணத்தினால் சற்று அழுத்தத்திற்கு உள்ளாகியிருந்தது.
எனினும், இதனால் தடுமாற்றமடையாத ஏனைய ஆரம்ப துடுப்பாட்ட வீரர் தனுஷ்க குணத்திலக்க மற்றும் குசல் மெண்டிஸ் ஆகியோர் மிகவும் நிதானமாக ஓட்டங்களை சேர்க்கத் தொடங்கினர். தொடர்ச்சியாக இந்திய பந்து வீச்சாளர்களை நுட்பமாக இரு வீரர்களும் எதிர்கொண்டிருந்த காரணத்தினால் இரண்டாம் விக்கெட்டிற்காக இருவராலும் அதி வலுவான 159 ஓட்டங்கள் இணைப்பாட்டமாகப் பகிரப்பட்டது.
இலங்கை அணியின் இரண்டாம் விக்கெட்டாக உமேஷ் யாதவ் மற்றும் மஹேந்திர சிங் தோனி இணைந்து ரன் அவுட் மூலம் அதிரடியாக ஆடியிருந்த தனுஷ்க குணதிலக்க ஆட்டமிழக்கச் செய்யப்பட்டிருந்தார். ஆட்டமிழக்கும் போது, குணதிலக்க மொத்தமாக 72 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கலாக 76 ஓட்டங்களைச் சேர்த்திருந்தார்.
குணதிலக்கவின் விக்கெட்டினை தொடர்ந்து சிறிது நேரத்தில் களத்தில் சதத்தினை எட்டும் நிலையில் சிறப்பாக செயற்பட்டிருந்த குசல் மெண்டிசும் ரன் அவுட் முறையில் ஆட்டமிழக்க, விரைவாக இரண்டு விக்கெட்டுகளை பறிகொடுத்திருந்த இலங்கை அணி ஒரு கட்டத்தில் 3 விக்கெட்டுகளிற்கு 196 ஓட்டங்கள் என்ற நிலையில் காணப்பட்டது. மூன்றாம், விக்கெட்டாக பறிபோயிருந்த குசல் மெண்டிஸ் 93 பந்துகளில் 11 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 89 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.
இவ்வாறனதொரு நிலையில், களத்திற்கு நுழைந்த இலங்கை அணித்தலைவர் அஞ்சலோ மெதிவ்ஸ், குசல் ஜனித் பெரேரா மற்றும் அசேல ஆகியோரின் உறுதியான ஓட்டக்குவிப்புக்கள் காரணமாக முடிவில், 48.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்த நிலையில் இலங்கை அணி 322 ஓட்டங்களைப் பெற்று வெற்றியிலக்கினை அடைந்தது.
இதில் இலங்கை அணித்தலைவர் அஞ்சலோ மெதிவ்ஸ் அரைச்சதம் கடந்து 45 பந்துகளுக்கு 6 பவுண்டரிகள் அடங்கலாக 52 ஓட்டங்களைப் பெற்று இறுதி வரை ஆட்டமிழக்காமல் நின்றிருந்தார். அத்தோடு, போட்டியின் இடைநடுவே உபாதை காரணமாக ஆட்டத்தினை இடைநிறுத்திக் கொண்ட குசல் ஜனித் பெரேரா 44 பந்துகளில் 47 ஓட்டங்களையும், இறுதி வரை ஆட்டமிழக்காமல் நின்றிருந்த மற்றைய துடுப்பாட்ட வீரரான அசேல குணரத்ன 21 பந்துகளில் 2 பிரமாண்டமான சிக்ஸர்கள் மற்றும் 2 பவுண்டரிகள் அடங்கலாக 34 ஓட்டங்களுடன் காணப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இந்திய அணியின் பந்து வீச்சில், புவ்னேஸ்வர் குமார் மாத்திரம் ஒரு விக்கெட்டினை கைப்பற்றியிருந்தார்.
இலங்கை அணியினால், இன்று தொடப்பட்டிருக்கும் இந்த 322 ஓட்டங்கள் என்கிற வெற்றியிலக்கானது, ஒரு நாள் போட்டிகளில் இலங்கை அணியினால் இரண்டாம் இன்னிங்சுக்காக துடுப்பாடி வெற்றி இலக்காகப் பெற்ற அதிகூடிய ஓட்டங்களாகும். அதே போன்று, இந்த வெற்றியிலக்கு லண்டன் ஓவல் மைதானத்தில் ஒருநாள் போட்டிகளில் விரட்டி அடிக்கப்பட்ட அதிகூடிய ஓட்டங்கள் என்பதோடு, சம்பியன் கிண்ணத்தொடரிலும் (விரட்டி அடிக்கப்பட்பட்ட) இதுவே அதிக ஓட்டங்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சம்பியன்ஸ் கிண்ணத்தில், அடுத்ததாக இலங்கை அணியானது எதிர்வரும் திங்கட்கிழமை (ஜூன் 12) பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கின்றது. இப்போட்டியில் வெற்றுபெறும் அணி அரையிறுதிப் போட்டிக்கு தகுதிபெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
SCORECARD
India - Batting | Toss: Sri Lanka | |
---|---|---|
Rohit Sharma | c Perera b Malinga | 78 (79) |
Shikhar Dhawan | c Mendis b Malinga | 125 (128) |
Virat Kohli | c Dickwella b Pradeep | 0 (5) |
Yuvraj Singh | b Gunarathne Prasanna | 7 (18) |
MS Dhoni | c Chandimal b Perera | 63 (52) |
Hardik Pandya | c K Perera b Lakmal | 9 (5) |
Kedhar Jadav | Not Out | 25 (13) |
Ravindra Jadeja | Not Out | 0 (0) |
Bhuvneshwar Kumar | ||
Umesh Yadav | ||
Jasprit Bumrah | ||
Total | Extras (14) | 321/6 (50 overs) |
Sri Lanka - Bowling | O | M | R | W |
---|---|---|---|---|
Lasith Malinga | 10 | 0 | 70 | 2 |
Suranga Lakmal | 10 | 1 | 72 | 1 |
Nuwan Pradeep | 10 | 0 | 73 | 1 |
Thisara Perera | 9 | 0 | 54 | 1 |
Danushka Gunathilaka | 8 | 0 | 41 | 0 |
Asela Gunarathne | 3 | 0 | 7 | 1 |
Sri Lanka - Batting | Toss: Sri Lanka | |
---|---|---|
Niroshan Dickwella | c Jadeja b Kumar | 7 (18) |
Danushka Gunathilaka | Run Out | 76 (72) |
Kusal Mendis | Run Out | 89 (93) |
Kusal Janith Perera | Retired Hurt | 47 (44) |
Angelo Mathews | Not Out | 52 (45) |
Asela Gunarathne | Not Out | 34 (21) |
Dinesh Chandimal | ||
Thisara Perera | ||
Suranga Lakmal | ||
Lasith Malinga | ||
Nuwan Pradeep | ||
Total | Extras (17) | 322/3 (48.4 overs) |
India - Bowling | O | M | R | W |
---|---|---|---|---|
Bhuvneshwar Kumar | 10 | 0 | 54 | 1 |
Umesh Yadav | 9.4 | 0 | 67 | 0 |
Jasprit Bumrah | 10 | 0 | 52 | 0 |
Hardik Pandya | 7 | 1 | 51 | 0 |
Ravindra Jadeja | 6 | 0 | 52 | 0 |
Kedhar Jadav | 3 | 0 | 18 | 0 |
Virat Kohli | 3 | 0 | 17 | 0 |
போட்டி முடிவு – இலங்கை அணி 7 விக்கெட்டுகளால் வெற்றி