சென்னை வீரர் ருதுராஜ் IPL போட்டிகளில் பங்கேற்பதில் சிக்கல்?

221
CSK Twitter

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் இளம் துடுப்பாட்ட வீரர் ருதுராஜ் கெய்க்வாட் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மீண்டபோதிலும், இன்னும் இரண்டு PCR பரிசோதனைகள் நடத்தப்பட இருப்பதால், அவர் ஐ.பி.எல் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் பங்கேற்பது சந்தேகம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

அதேசமயம், அணியில் ஏனைய 11 வீரர்களுக்கு நடத்தப்பட்ட PCR பரிசோதனையில் அவர்களுக்கு கொவிட் – 19 வைரஸ் தொற்று இல்லை என உறுதியானதையடுத்து, அவர்கள் சென்னை அணியின் உயிர் பாதுகாப்பு வளையத்திற்குள் சென்றனர்

கொவிட்-19 தொற்றிலிருந்து மீண்டு சென்னை அணியுடன் இணைந்த தீபக் சஹார்

கிரிக்கெட் இரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்ற 13ஆவது இந்தியன் ப்ரீமியர் லீக் (.பி.எல்) தொடர் இம்மாதம் 19ஆம் திகதி ஐக்கிய அரபு இராச்சியத்தில் ஆரம்பமாகின்றது. 

கொவிட் – 19 வைரஸ் காலத்தில் .பி.எல் தொடர் நடப்பதால், பல்வேறு பாதுகாப்பு முறைமைகளுடன், இரசிகர்களுக்கு அனுமதியில்லாமல் போட்டி நடத்தப்பட உள்ளது. இந்தத் தொடருக்காக 8 அணிகளும் கடந்த மாதம் 20ம் திகதி ஐக்கிய அரபு இராச்சியத்துக்குச் சென்றுவிட்டன.  

அங்கு அனைத்து அணி வீரர்களும் 6 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு, PCR பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் சென்னை அணியில் 2 வீரர்கள் உட்பட 13 பேருக்கு கொவிட் – 19 வைரஸ் இருப்பது உறுதியானது

இதில் வேகப் பந்துவீச்சாளர் தீபக் சாஹர் கெரோனாவிலிருந்து குணமடைந்து பயிற்சியில் இணைந்து கொண்டார்.

எஞ்சிய 11 பேருக்கும் நடத்தப்பட்ட PCR பரிசோதனையில் அவர்களுக்கும் கொவிட் – 19 வைரஸ் தொற்று இல்லை எனத் தெரியவந்ததையடுத்து, அவர்களும் பாதுகாப்பு வளையத்திற்க்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

Video – கொரோனாவினால் மீண்டும் தள்ளிப் போகும் பங்களாதேஷ் தொடர்? |Sports RoundUp – Epi 132

ஆனால், சென்னை அணியில் இடம்பிடித்துள்ள இளம் துடுப்பாட்ட வீரரான ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு நடத்தப்பட்ட PCR பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்று தெரியவந்தாலும், அவருக்கு மேலதிகமாக இரண்டு PCR பரிசோதனைகள் நடத்தப்பட உள்ளன

இதுஇவ்வாறிருக்க, நாளை மறுதினம் (19) ஆரம்பமாகவுள்ள .பி.எல் தொடரின் முதல் போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோத உள்ள நிலையில், இந்த போட்டியில் இருந்து சென்னை அணியின் இளம் வீரரான ருதுராஜ் கெய்க்வாட் விலகியுள்ளதாக சென்னை நிர்வாகம் அறிவித்துள்ளது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு நேற்று முன்தினம் எடுக்கப்பட்ட PCR பரிசோதனையிலும் வைரஸ் தொற்று இல்லை என முடிவு வந்தது. எனினும், அவர் முதல் போட்டியில் விளையாட வாய்ப்புகள் இல்லை என சென்னை அணியின் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்

மீண்டும் கொல்கத்தா அணியுடன் இணையும் ப்ரவீன் தாம்பே

அத்துடன், ருதுராஜ் கெய்க்வாட் அணியில் இணைவாரா? அல்லது .பி.எல் தொடரில் இருந்து முழுமையாக விலகுவாரா? என்பது குறித்து அடுத்த இரு தினங்களில் தான் தெரியவரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் அளித்த பேட்டியில்

”ருதுராஜ் கெய்க்வாட் பயிற்சிக்கு திரும்பும் முன் இரண்டு PCR பரிசோதனைகள் நடத்தப்பட்டு அதில் நெகட்டிவ் என முடிவு வர வேண்டும்.

அந்த வகையில் அவருக்கு இரண்டு PCR பரிசோதனை நடத்தப்பட உள்ளன. இதில் இரண்டிலுமே நெகட்டிவ் என வந்தால் மட்டுமே உயிர் பாதுகாப்பு வளையத்திற்குள் சென்று அணியுடன் சேர்ந்து பயிற்சியில் ஈடுபடுவார்

அணியின் மற்ற ஊழியர்கள் 11 பேருக்கும் கொவிட் – 19 வைரஸ் தொற்று இல்லை எனத் தெரியவந்ததையடுத்து, அவர்கள் அணிக்குள் சென்றுவிட்டனர்” என தெரிவித்தார்

வங்கதேச வீரர் சயிப் ஹஸனுக்கு மீண்டும் கொவிட் – 19 வைரஸ்

சென்னை அணியில் இந்த முறை சுரேஷ் ரெய்னா விளையாடாததால், அவரின் இடத்தில் ருதுராஜ் கெய்க்வாட் களமிறங்க வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டு வருகிறது. கெய்க்வாட்டுக்கு இரண்டு PCR பரிசோதனைகள் முடிந்தபின், தொண்டை பரிசோதனையும், நுரையீரல் பரிசோதனையும் நடத்தப்பட உள்ளது

எனவே, இன்னும் ஒரு வாரத்துக்குப் பிறகு தான் அணிக்குள் தேர்வு செய்யப்பட ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு வாய்ப்புள்ளது. அதாவது, எதிர்வரும் 19ஆம் திகதி தொடங்கும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான முதல் ஆட்டம் அதற்கு அடுத்து வரும் சில ஆட்டங்களில் ருதுராஜ் கெய்க்வாட் பங்கேற்க முடியாது எனத் தெரிகிறது.

எனவே, இம்முறை .பி.எல் தொடரிலிருந்து சென்னை அணி வீரர்களான சுரேஷ் ரெய்னா மற்றும் ஹர்பஜன் சிங் உள்ளிட்ட வீரர்கள் தனிப்பட்ட காரணங்ளுக்காக விலகியுள்ள நிலையில், கொவிட் – 19 வைரஸ் காரணமாக ருதுராஜுக்கும் அந்த அணியுடன் விளையாட கிடைக்காமை மிகப் பெரிய பின்னடைவைக் கொடுக்கும் என கிரிக்கெட் விமர்சகர்கள கருத்து வெளியிட்டுள்ளனர்

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<