டோனிக்காக 1.5 இலட்சத்தில் வீட்டை மஞ்சள் பூசி அழகுபடுத்திய ரசிகர்

232

அரங்கூர் கிராமத்தைச் சேர்ந்த ரசிகர் ஒருவர் சென்னை சுப்பர் கிங்ஸ் அணித் தலைவர் மகேந்திர சிங் டோனி மீது கொண்ட அன்பினால் தனது வீடு முழுவதையும் மஞ்சள் நிறமாக மாற்றி, ‘Home Of Dhoni Fan’ என எழுதியுள்ளார்.   

13ஆவது இந்தியன் ப்ரீமியர் லீக் (.பி.எல்) தொடர் தற்போது ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி இதுவரை 8 போட்டிகளில் விளையாடி 3 வெற்றியை மட்டுமே பதிவு செய்துள்ளது. இதனால் சென்னை ரசிகர்கள் சற்று உத்வேகம் இழந்து காணப்படுகின்றனர்.

இந்த நிலையில் டோனியின் மீது கொண்ட அன்பினால் ரசிகர் ஒருவர் தனது வீட்டை மஞ்சள் நிறத்தால் வண்ணம் பூசி அந்த வீட்டுக்கு டோனி ரசிகர் இல்லம் என பெயரிட்டு அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார்

சென்னையின் கடலூர் மாவட்டம் அரங்கூரைச் சேர்ந்த கோபால கிருஷ்ணன் என்பவர் தனது வீட்டிற்கு சென்னை அணியின் நிறத்தை பூசியுள்ளார். அத்துடன் தனது வீட்டின் மேல் டோனி படத்தையும் வரைந்து டோனி ரசிகர் இல்லம் என்ற வாசகத்தையும் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் இந்தியா டூடேவிற்கு அளித்தப் பேட்டியில், ”இம்முறை .பி.எல் போட்டிகளை நேரில் பார்க்க முடியவில்லை. அத்துடன் டோனியின் ஆட்டத்தையும் நேரில் காண முடியவில்லை

மேலும் மோசமாக விளையாடுவதால் பலர் டோனியை விமர்சிப்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தோற்றாலும் வெற்றி பெற்றாலும் நான் எப்போதும் டோனியின் ரசிகர் தான்” எனத் தெரிவித்துள்ளார்.

டுபாயில் உள்ளன்லைன் டிரேடிங் நிறுவனத்தில் பணியாற்றும் கோபால கிருஷ்ணன் ஒரு தீவிர கிரிக்கெட் ரசிகர். குறிப்பாக டோனி மீது அளவற்ற அன்பு கொண்டவர்

தற்போது விடுமுறைக்காக சொந்த கிராமத்துக்கு வந்தவர் டோனி மீது கொண்ட அன்பை வெளிப்படுத்தும் விதமாக தனது வீட்டின் தோற்றத்தை இவ்வாறு மாற்றுவதற்கு மொத்தமாக 1.5 இலட்சம் ரூபாய் செலவு செய்துள்ளார்

Video – Army லீக்கில் துடுப்பாட்டத்தில் கலக்கும் Chandimal..! |Sports RoundUp – Epi 135

அத்துடன், தனது வீட்டின் ஒரு பக்க சுவரில் அவர்விசில் போடுஎன்ற சென்னை அணியின் டேக் லைனையும் எழுதியுள்ளார்.  

கோபால கிருஷ்ணனின் இந்தச் செயலானது அனைவரையும் கவர்ந்துள்ளதுடன், இது சென்னை அணியின் டுவிட்டரிலும் பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

கிரிக்கெட் மற்றும் சினிமா மீது கொண்டுள்ள அதிக மோகத்தால் ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த வீரர்கள், நடிகர்களின் புகைப்படங்கள் மற்றும் பெயர் பொறித்த சட்டைகள், டீசர்ட்டுகள் அணிந்து வலம் வருவதை பார்த்திருப்பீர்கள்.

சிலர் தங்களுக்கு பிடித்தவர்களின் பெயர்களை உடலில் பச்சை குத்தியிருப்பதையும் பார்த்திருப்பீர்கள். ஆனால் தனக்கு பிடித்த கிரிக்கெட் வீரருக்காக, ரசிகர் ஒருவர் தனது வீட்டையே வர்ணம் பூசி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<