இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் தனுஷ்க குணதிலக்க மற்றும் சகலதுறை வீரர் தனன்ஜய டி சில்வா ஆகியோருக்கான உடற்தகுதி பரிசோதனை எதிர்வரும் வெள்ளிக்கிழமை (04) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்கள், அடுத்துவரும் தொடர்களுக்கு தகுதிபெற வேண்டுமானல், இலங்கை கிரிக்கெட் சபை முன்வைத்துள்ள 2 கிலோமீற்றர் தூரத்தை 2.35 நிமிடங்களில் கடக்கவேண்டும்.
இலங்கை மகளிர் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராகும் ஹசான் திலகரட்ன
அந்தவகையில், இங்கிலாந்து தொடருக்கான வீரர்களை தெரிவுசெய்யும் முகமாக, பங்களாதேஷில் வைத்து இலங்கை வீரர்களுக்கு உடற்தகுதி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. குறித்த இந்த உடற்தகுதி பரிசோதனையில், தனுஷ்க குணதிலக்க மற்றும் தனன்ஜய டி சில்வா ஆகியோர் சித்தியடையவில்லை.
எனவே, குறித்த இருவருக்குமான உடற்தகுதி பரிசோதனையை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. பங்களாதேஷிலிருந்து நாடு திரும்பிய இவர்களின் தனிமைப்படுத்தல் காலம் நாளையுடன் (03) நிறைவுக்கு வரவுள்ளது. எனவே, நாளை மறுதினம் உடற்தகுதி பரிசோதனைக்கு இவர்கள் முகங்கொடுக்கவுள்ளனர்.
குறித்த இருவரும் இந்த உடற்தகுதி பரிசோதனையில் சித்தியடைந்தால் மாத்திரமே இங்கிலாந்து தொடருக்கான 24 பேர்கொண்ட குழாத்தில் இடம்பெறமுடியும்.
இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் அவிஷ்க பெர்னாண்டோ உடற்தகுதியின்மை காரணமாக மே.தீவுகள் மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு எதிரான தொடரிலிருந்து நீக்கப்பட்டிருந்த போதும், இறுதியாக நடைபெற்ற உடற்தகுதி பரிசோதனையில் சித்தியடைந்து இங்கிலாந்து தொடருக்கான உத்தேச குழாத்தில் இடம்பிடித்துள்ளார்.
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இலங்கை அணி மூன்று ஒருநாள் மற்றும் மூன்று T20I போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. குறித்த இந்த தொடர் இம்மாதம் 23ம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க…