ஜுவன்டஸ் அணியின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ மீண்டும் மன்செஸ்டர் யுனைடட் அணியுடன் இணைந்துள்ளதாக அவ்வணி வெள்ளிக்கிழமை (27) அறிவித்தது.
ஏற்கனேவே பல்வேறு முன்னணி வீரர்களின் அதிர்ச்சி மாற்றங்களைக் கண்ட கால்பந்து ரசிகர்களுக்கு இது மேலும் ஒரு அதிர்ச்சியாக அமைந்துள்ளது.
சம்பியன்ஸ் லீக் தொடருக்கான குழுக்கள் அறிவிப்பு
கடந்த ஞாற்றுக்கிழமை ஜுவன்டஸ் அணி விளையாடிய சீரி A போட்டியில், தானாகவே முதல் பதினொருவர் அணியிலிருந்து விலகினார் ரொனால்டோ. இதற்கு காரணமாக இந்த பருவகாலத்தில் வேறு கழகத்தை ரொனால்டோ தேடுவதாக செய்திகள் வெளியாகின.
இதற்கு பின்னரே தற்போது இந்த தகவல் வெளியாகியுள்ளது. 2018 இல் ரியல் மட்ரிட் அணியிடமிருந்து இத்தாலியின் ஜுவன்டஸ் அணியால் வாங்கப்பட்ட ரொனால்டோ அவ்வணிக்காக 98 போட்டிகளில் 81 கோல்களை அடித்திருக்கிறார்.
இந்த நிலையில் சென்ற வாரம் ஜுவன்டஸை தொடர்ந்து அவர் வேறு புதிய கழகத்தை தேடி கொண்டு இருக்கும் போது மன்செஸ்டர் சிட்டி அணி அவரை வாங்க முயற்சித்தது. 2 நாட்கள் சிட்டி அணி முயற்சித்த போதிலும், யுனைடட் அணியின் முன்னாள் ரொனால்டோவின் சக வீரர்களும், ரொனால்டோவினால் மதிக்கப்படும் முகாமையாளர் என கூறப்படும் யுனைடட் அணியின் முன்னாள் முகாமையாளர் சேர் அலெக்ஸ் பெர்குசன் ஆகியோர் ரொனால்டோவை யுனைடட்டில் இணைந்துகொள்ளுமாறு கேட்டதிற்கு இணங்க ரொனால்டோ மன்செஸ்டர் யுனைடட் அணியில் இணைய சம்மதித்தாக வெளிநாட்டு ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
Video – புதிய கழகத்தை தேடும் ரொனால்டோ!| FOOTBALL ULAGAM
36 வயதான கிறிஸ்டினாரோ ரொனால்டோ, 2003 இலிருந்து 2009 வரை மன்செஸ்டர் யுனைடட் அணிக்காக 196 பிரீமியர் லீக் போட்டிகளில் விளையாடி, 84 கோல்கள் 34 கோலுக்கான பந்துப் பரிமாற்றங்களை பெற்றுக் கொடுத்துள்ளார்.
அதேபோன்று, ஒரு தங்க பாதணி விருது, 2 பருவக்காலத்தின் சிறந்த வீரர் விருது மற்றும் 3 பிரீமியர் லீக் கிண்ணங்களை வென்றெடுத்த சாதனை வீரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தற்போது 25 மில்லியன் பௌண்ட்டுகளுக்கு ரொனால்டோவை வாங்கியிருக்கும் மன்செஸ்டர் யுனைடட், அவரை எதிர் வரும் போட்டிகளில் களமிறக்கும் என எதிர்பார்க்கபடுகிறது. தற்போது இருக்கும் யுனைடட் அணியின் முகாமையாளருடன் ஒன்றாக விளையாடிய ரொனால்டோ தற்போது அவரின் அணியில் விளையாடவுள்ளமை மேலும் ஒரு சிறப்பம்சமாகும்.
2009ஆம் ஆண்டு யுனைடட் அணிக்காக ஒட்டுமொத்தமாக 292 போட்டிகளில் 118 கோல்களை அடித்து ஒரு கழக ஜாம்பவானாக ரியல் மட்ரிட்டுக்கு சென்ற ரொனால்டோ, 12 வருடங்கள் கழித்து மீண்டும் மன்செஸ்டர் யுனைடட்டுக்கு வந்துள்ளமை யுனைடட் ரசிகரகளை மேலும் மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
>> மேலும் கால்பந்து செய்திகளுக்கு <<