விளையாட்டு வீரர்களில் அதிக வருமானம் ஈட்டும் வீரர்களின் பட்டியலைப் போர்பஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது. இதில் கோல்ப் வீரர் டைகர் வுட்ஸை முந்தி போர்த்துகல் நாட்டின் நட்சத்திர கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ முதல் இடத்தைப் பிடித்துள்ளார்.
அமெரிக்காவின் முன்னணி மெகஷின் பத்திரிகையான போர்பஸ், விளையாட்டு வீரர்களில் யார் அதிக அளவில் சம்பாதிக்கிறார்கள் என்ற பட்டியலை வெளியிட்டுள்ளது. கடந்த வருடத்தில் இருந்து கடந்த வாரம் வரை எடுக்கப்பட்ட கணக்கின்படி ரியல் மாட்ரிட் கால்பந்து அணிக்காக விளையாடும் போர்த்துகல் நாட்டின் கிறிஸ்டியானோ ரொனால்டோ முதல் இடத்தைப் பிடித்துள்ளார்.
ரொனால்டோ 88 மில்லியன் டொலர் சம்பாதித்து முதல் இடத்தைப் பிடித்துள்ளார். இதில் சம்பளம் மூலம் 56 மில்லியனும், 32 மில்லியன் வரை விளம்பரங்கள் மூலமும் சம்பாதித்துள்ளார்.
பார்சிலோனா அணியின் மெஸ்சி, 81.4 மில்லியன் டொலர் வருமானம் பெற்று 2ஆவது இடத்தில் உள்ளார். இதில் 28 மில்லியன் டொலர் விளம்பரம் மூலம் சம்பாதித்துள்ளார்.
டெனிஸ் வீரர் ரொஜர் பெடரர் 67.8 மில்லியன் டொலர்ச ம்பாதித்துள்ளார். கடந்த வருடம் முதல் இடத்தை பிடித்த மேவெதர் 44 மில்லியன் டொலருடன் 16ஆவது இடத்திற்கு பின் தள்ளப்பட்டுள்ளார். அத்தோடு 45.3 மில்லியன் டொலருடன் டைகர் வுட்ஸ் 12ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.
மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்