ஐரோப்பிய கால்பந்து போட்டியில் அதிக கோல் அடித்தவர் பிரான்சின் மிச்செல் பிளாட்டினி. 1984ஆம் ஆண்டு ஐரோப்பிய போட்டியில் அவர் 9 கோல் அடித்து இருந்தார். அவரது சாதனையை ரொனால்டோ சமன் செய்தார். நேற்று நடந்த வேல்ஸ் அணிக்கு எதிராக அடித்த ஒரு கோலையும் சேர்த்து ஐரோப்பிய போட்டியில் 9 கோல் அடித்துள்ளார்.
2004ஆம் ஆண்டு 2 கோலும், 2008-ல் ஒரு கோலும், 2012-ல் 3 கோலும், 2016-ல் இதுவரை 3 கோலும் அடித்துள்ளார். இறுதிப் போட்டியில் மேலும் ஒரு கோல் அடித்தால் பிளாட்டினி சாதனையை முறியடிப்பார்.
இதுவரை பல்வேறு சாதனைகளை முறியடித்திருப்பதாகக் கூறியுள்ள ரொனால்டோ, தனது சாதனை தொடரும் என்றும் இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடுவேன் என்பதாகவும் கூறியுள்ளார்.
ஐரோப்பிய சாம்பியன்ஷிப் தொடரில் மற்ற வீரர்களைவிட ரொனால்டோ அதிக போட்டிகளில் விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்