கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக வீடுகளில் முடங்கிப் போயுள்ள இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள், தத்தமது வீடுகளில் காய்கறி, பழங்கள் உள்ளிட்ட மரங்களை நட்டி அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற தேசிய ரீதியிலான வீட்டுத்தோட்ட சவாலுக்கு பங்களிப்பினை வழங்கியுள்ளனர்.
பொலிஸாருக்கு உதவி செய்து பிறந்த நாளைக் கொண்டாடிய அவிஷ்க பெர்னாண்டோ
கொரோனா வைரஸ் காரணமாக…………………
கொரானா பீதியால் கிரிக்கெட் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இதனால் விளையாட்டு வீரர்கள் பயிற்சி செய்ய முடியாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கின்றனர். வீட்டிலேயே உடற்பயிற்சிக் கூடங்களில் பயிற்சிகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மறுபுறத்தில், கொரோனாவினால் தொழில்களுக்குச் செல்ல முடியாமல் வீடுகளுக்குள் உள்ள அப்பாவி வறிய மக்களுக்கு இலங்கை கிரிக்கெட் அணியின் இன்னாள் மற்றும் முன்னாள் வீரர்கள் தங்களது சொந்த நிதியிலிருந்து உலர் உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியவசியப் பொருட்களை தொடர்ந்து வழங்கி வருகின்றனர்.
இந்த நிலையில், தற்போதைய பொருளாதார நிலையைக் கருத்தில் கொண்டு வீட்டுத் தோட்டங்களை அமைக்கும் திட்டத்தை (Home Garden Challenge) மக்கள் மத்தியில் ஊக்குவிக்க அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.
இதற்காக அரசாங்கம் பிரத்தியேகமாக (www.saubagya.lk) இணையத்தளமொன்றையும் அறிமுகம் செய்து அதனூடாக பொதுமக்களுக்கு பயிர்கள், விதைகள், உரம் மற்றும் வீட்டுத் தோட்டத்திற்குத் தேவையானவற்றை இலவசமாக விநியோகிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.
இதனிடையே, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட முக்கிய அரசியல் பிரபலங்கள் வீட்டுத்தோட்ட சவாலுக்காக தங்களது பங்களிப்பினை வழங்கி மக்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்திருந்தனர்.
இந்த நிலையில், இலங்கை றக்பி அணியின் முன்னாள் வீரரும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஹம்பாந்தோட்டை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, வீட்டுத்தோட்ட சவாலை இலங்கை டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணியின் தலைவரான திமுத் கருணாரத்னவுக்கு கடந்த 3ஆம் திகதி விடுத்திருந்தார்.
Thanks @RajapaksaNamal for the #homegardenchallenge nomination.
The love of gardening is a seed once sown that never dies.I would like to nominate @chaturaalwis @chandi_17 @MahelaJay
Join with us to be a part of #foodsustainability in #Sri lanka pic.twitter.com/wFPKf8lpZR— ?????? ???????????? (@IamDimuth) April 3, 2020
இந்த சவாலை ஏற்றுக்கொண்ட திமுத் கருணாரத்ன, தனது வீட்டுத்தோட்டத்தில் மர கன்றுகளை நட்டி குறித்த சவாலை வெற்றிகரமாக பூர்த்தி செய்தார்.
எனினும், மீண்டும் அந்த சவாலை தினேஷ் சந்திமால் மற்றும் மஹேல ஜயவர்தன ஆகியோருக்கு கொடுத்தார்.
To plant a garden is to believe in tomorrow !!! Thanks @IamDimuth for the #homegardenchallenge nomination.
I would like to nominate @KumarSanga2 @PereraThisara @kalinduderana @imDhammika @RexClementine
Join with us to be a part of #foodsustainability in Sri Lanka.. pic.twitter.com/k217k6ZMIt— dinesh chandimal (@chandi_17) April 3, 2020
அந்த சவாலை தினேஷ் சந்திமால் தனது வீட்டில் வெற்றிகரமாக பூர்த்தி செய்த பிறகு குமார் சங்கக்கார, திசர பெரேரா மற்றும் தம்மிக பிரசாத் ஆகிய வீரர்களுக்கு விடுத்தார்.
what you plant today, you will harvest tomorrow
Thanks @chandi_17 for the #homegardenchallenge nomination . I would like to nominate @upultharanga44 @jeevanmendis @dilshanSD24 @Angelo69Mathews
Join with us to be a part of #foodsustainability of Sri Lanka . pic.twitter.com/pWZFLSs2fD— Thisara perera (@PereraThisara) April 3, 2020
இவ்வாறு இலங்கை கிரிக்கெட் அணியின் இன்னாள் மற்றும் முன்னாள் வீரர்கள் ஒவ்வொருவருக்கும் மாறி மாறி வீட்டுத்தோட்ட சவால் கொடுக்கப்பட, அனைவரும் தங்களது வீடுகளில் மரக்கறி, பழங்கள் உள்ளிட்ட மரங்களை நட்டி, அதன் புகைப்பட்டங்களை தத்தமது அதிகாரபூர்வ பேஸ்புக் மற்றும் டுவிட்டர் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர்.
@chandi_17 chili plants, Naarang, Kadju (cashew), Kos (jackfruit ), Del (breadfruit) and Kurundu (cinnamon) trees among so many others that we have planted over the years. Produce for our home and for our neighbors. Nominate 5 on my behalf #HomeGardenChallenge #foodsustainability pic.twitter.com/8YStgHDJax
— Kumar Sangakkara (@KumarSanga2) April 5, 2020
இதன்படி, அரசாங்கத்தின் வீட்டுத்தோட்ட வேலைத்திட்டத்துக்கு இலங்கை அணியின் கிரிக்கெட் வீரர்களான திமுத் கருணாரத்ன, தினேஷ் சந்திமால், திசர பெரேரா, டில்ருவன் பெரேரா, ஜீவன் மெண்டிஸ், டில்ஷான் முனவிர, தம்மிக பிரசாத், அஞ்சலோ மெதிவ்ஸ் உள்ளிட்ட வீரர்கள் தத்தமது பங்களிப்பினை வழங்கியுள்ளமை பாராட்டத்தக்க விடயமாகும்.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<