பங்களாதேஷ் – இலங்கை அணிகள் இடையே நடைபெற்ற ஒருநாள் உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கை அணியினை பங்களாதேஷ் 3 விக்கெட்டுக்களால் வீழ்த்தியிருக்கின்றது.
மேலும் இந்த வெற்றியுடன் இலங்கை அணிக்கு எதிராக பங்களாதேஷ் முதன் முறையாக ஒருநாள் உலகக் கிண்ணப் போட்டியொன்றில் வெற்றியினையும் பதிவு செய்கின்றது.
முன்னதாக டெல்லியில் ஆரம்பமாகியிருந்த இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்திருந்தது.
இந்தப் போட்டியில் இலங்கை அணி இரண்டு மாற்றங்களை மேற்கொண்டு களமிறங்கியிருந்தது. அதன்படி இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் திமுத் கருணாரட்ன சுகயீனம் காரணமாக (வயிற்று வலி) இந்தப் போட்டியில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டிருக்க, சுழல் பந்துவீச்சாளர் துஷான் ஹேமந்தவும் அணியிலிருந்து நீக்கப்பட்டிருந்தார். இவர்கள் இருவருக்கும் பதிலாக தனன்ஜய டி சில்வா மற்றும் குசல் ஜனித் பெரேரா ஆகியோர் மீண்டும் அணிக்குள் அழைக்கப்பட்டிருந்தனர்.
>> இலங்கை கிரிக்கெட் சபைக்கான இடைக்கால குழு நியமனம்
இலங்கை அணி
தனன்ஜய டி சில்வா, பெதும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ் (தலைவர்), சதீர சமரவிக்ரம, சரித் அசலங்க, அஞ்செலோ மெதிவ்ஸ், குசல் பெரேரா, மஹீஷ் தீக்ஷன, துஷ்மந்த சமீர, கசுன் ராஜித, டில்சான் மதுசங்க
பங்களாதேஷ் அணி
தன்ஷிட் ஹஷன், லிடன் தாஸ், நஜ்முல் ஹசன் ஷன்டோ, முஷ்பிகுர் ரஹீம், மஹ்மதுல்லா, சகீப் அல் ஹஸன், தவ்ஹீத் ரிதோய், மெஹிதி ஹஸன் மிராஸ், தன்சிம் ஹஸன், தஸ்கின் அஹ்மட்
பின்னர் நாணய சுழற்சிக்கு அமைய துடுப்பாட்டத்தினை ஆரம்பித்த இலங்கை அணி தொடக்கத்திலேயே ஆரம்பவீரர்களில் ஒருவராக வந்த குசல் பெரேராவின் விக்கெட்டி இழந்தது. குசல் பெரேரா வெறும் 04 ஓட்டங்களுடன் சொரிபுல் இஸ்லாமின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
இதன் பின்னர் இலங்கை அணியின் இரண்டாம் விக்கெட் இணைப்பாட்டமாக 61 ஓட்டங்களை பெதும் நிஸ்ஸங்கவுடன் இணைந்து குசல் மெண்டிஸ் பகிர்ந்த போதிலும் அவர் வெறும் 19 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். மெண்டிஸின் பின்னர் பெதும் நிஸ்ஸங்கவின் விக்கெட்டும் பறிபோனது. பெதும் நிஸ்ஸங்க 36 பந்துகளில் 8 பௌண்டரிகள் அடங்கலாக 41 ஓட்டங்கள் பெற்றார்.
இதன் பின்னர் இலங்கை அணிக்கு சதீர சமரவிக்ரம அணியின் 4ஆம் விக்கெட் இணைப்பாட்டமாக 63 ஓட்டங்கள் பகிர்ந்து பெறுமதி சேர்த்து 41 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். சதீர சமரவிக்ரமவின் பின்னர் புதிய வீரராக களம் வந்த அஞ்செலோ மெதிவ்ஸ் மைதானத்திற்கு தாமதமாக வந்தார் என ஆட்டமிழப்பு வழங்கப்பட்டு ஓய்வறை நடந்தார்.
>>சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள அஞ்செலோ மெதிவ்ஸின் ஆட்டமிழப்பு
இதன் பின்னர் களத்தில் இருந்த சரித் அசலன்க பொறுப்பான முறையில் ஆடி சதம் பெற இலங்கை கிரிக்கெட் அணியானது 49.3 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 279 ஓட்டங்கள் எடுத்தது.
இலங்கை அணியின் துடுப்பாட்டம் சார்பில் சரித் அசலன்க தன்னுடைய இரண்டாவது ஒருநாள் சதத்தோடு 105 பந்துகளில் 5 சிக்ஸர்கள் மற்றும் 6 பௌண்டரிகள் அடங்கலாக 108 ஓட்டங்கள் எடுத்தார். இதேநேரம் தனன்ஞய டி சில்வா ஒரு சிக்ஸர் மற்றும் 4 பௌண்டரிகள் அடங்கலாக 34 ஓட்டங்கள் எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சில் தன்சிம் ஹஸன் சகீப் 3 விக்கெட்டுக்களைச் சாய்க்க, சொரிபுல் இஸ்லாம் மற்றும் சகீப் அல் ஹஸன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றியிருந்தனர்.
பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 280 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய பங்களாதேஷ் அணியானது போட்டியின் வெற்றி இலக்கை 41.1 ஓவர்களுக்கு 7 விக்கெட்டுக்களை இழந்து 282 ஒட்டங்களுடன் அடைந்தது.
பங்களாதேஷ் அணியின் துடுப்பாட்டம் சார்பில் அதன் வெற்றியினை உறுதி செய்த வீரர்களில் சகீப் அல் ஹசன் 82 ஓட்டங்கள் எடுக்க, நஜ்முல் ஹொசைன் ஷன்டோ 90 ஓட்டங்கள் பெற்றிருந்தார். அத்துடன் இந்த இரண்டு வீரர்களும் பங்களாதேஷ் அணியின் மூன்றாம் விக்கெட் இணைப்பாட்டமாக 169 ஓட்டங்கள் பகிர்ந்திருந்தனர்.
இலங்கை அணியின் பந்துவீச்சு சார்பில் டில்சான் மதுசங்க 3 விக்கெட்டுக்களையும், மகீஷ் தீக்ஸன மற்றும் அஞ்செலோ மெதிவ்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதமும் சாய்த்திருந்த போதும் அது வீணாகியது.
போட்டியின் ஆட்டநாயகனாக பங்களாதேஷ் அணியின் தலைவர் சகீப் அல் ஹசன் தெரிவாகினார். இப்போட்டியின் தோல்வியோடு இம்முறை உலகக் கிண்ணத் தொடரிலிருந்து வெளியேறும் மூன்றாவது அணியாக இலங்கை மாறுகின்றது.
போட்டியின் சுருக்கம்
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Pathum Nissanka | b Tanzim Hasan | 41 | 36 | 8 | 0 | 113.89 |
Kusal Perera | c Mushfiqur Rahim b Shaiful Islam | 4 | 5 | 1 | 0 | 80.00 |
Kusal Mendis | c Shaiful Islam b Shakib Al Hasan | 19 | 30 | 1 | 1 | 63.33 |
Sadeera Samarawickrama | c Mahmudullah b Shakib Al Hasan | 41 | 42 | 4 | 0 | 97.62 |
Charith Asalanka | c Liton Das b Tanzim Hasan | 108 | 105 | 6 | 5 | 102.86 |
Angelo Mathews | timed-out b | 0 | 0 | 0 | 0 | 0.00 |
Dhananjaya de Silva | st Mushfiqur Rahim b Mehidy Hasan Miraz | 34 | 36 | 4 | 1 | 94.44 |
Mahesh Theekshana | c Nasum Ahmed b Shaiful Islam | 21 | 31 | 3 | 0 | 67.74 |
Dushmantha Chameera | run out (Mushfiqur Rahim) | 4 | 9 | 0 | 0 | 44.44 |
Kasun Rajitha | c Liton Das b Tanzim Hasan | 0 | 2 | 0 | 0 | 0.00 |
Dilshan Madushanka | not out | 0 | 1 | 0 | 0 | 0.00 |
Extras | 7 (b 0 , lb 3 , nb 0, w 4, pen 0) |
Total | 279/10 (49.3 Overs, RR: 5.64) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Shaiful Islam | 9.3 | 0 | 51 | 2 | 5.48 | |
Taskin Ahmed | 10 | 1 | 39 | 0 | 3.90 | |
Tanzim Hasan | 10 | 0 | 80 | 3 | 8.00 | |
Shakib Al Hasan | 10 | 0 | 57 | 2 | 5.70 | |
Mehidy Hasan Miraz | 10 | 0 | 49 | 1 | 4.90 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Tanzid Hasan | c Pathum Nissanka b Dilshan Madushanka | 9 | 5 | 2 | 0 | 180.00 |
Liton Das | lbw b Dilshan Madushanka | 23 | 22 | 2 | 2 | 104.55 |
Najmul Hossain Shanto | b Angelo Mathews | 90 | 101 | 12 | 0 | 89.11 |
Shakib Al Hasan | c Charith Asalanka b Angelo Mathews | 82 | 65 | 12 | 2 | 126.15 |
Mahmudullah | b Mahesh Theekshana | 22 | 23 | 3 | 1 | 95.65 |
Mushfiqur Rahim | b Dilshan Madushanka | 10 | 13 | 1 | 0 | 76.92 |
Towhid Hridoy | not out | 15 | 7 | 0 | 2 | 214.29 |
Mehidy Hasan Miraz | c Charith Asalanka b Mahesh Theekshana | 3 | 5 | 0 | 0 | 60.00 |
Tanzim Hasan | not out | 5 | 6 | 1 | 0 | 83.33 |
Extras | 23 (b 0 , lb 13 , nb 0, w 10, pen 0) |
Total | 282/7 (41.1 Overs, RR: 6.85) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Dilshan Madushanka | 10 | 1 | 69 | 3 | 6.90 | |
Mahesh Theekshana | 9 | 0 | 44 | 2 | 4.89 | |
Kasun Rajitha | 4 | 0 | 47 | 0 | 11.75 | |
Dushmantha Chameera | 8 | 0 | 54 | 0 | 6.75 | |
Angelo Mathews | 7.1 | 1 | 35 | 2 | 4.93 | |
Dhananjaya de Silva | 3 | 0 | 20 | 0 | 6.67 |
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<