2019 உலகக் கிண்ணத்தில் கால்பதிக்கும் இளம் நட்சத்திரங்கள்

341
AFP

கிரிக்கெட் உலகின் வல்லரசைத் தீர்மானிக்கும் 12ஆவது உலகக் கிண்ணத் தொடர் இங்கிலாந்தில் இம்மாதம் 30ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளை இலக்காகக் கொண்டு அனைத்து நாடுகளும் தத்தமது ஆரம்பகட்ட பயிற்சிகளை ஆரம்பித்துள்ள இத்தருணத்தில் இம்முறை உலகக் கிண்ணத்தில் முதன்முறையாகக் களமிறங்கி பிரகாசிக்க காத்திருக்கின்ற இளம் வீரர்கள் தொடர்பில் ஆராயவுள்ளோம்.  

ஜஸ்பிரித் பும்ரா (இந்தியா)

கடந்த 2016ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான 25 வயதான ஜஸ்பிரித் பும்ரா, டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி-20 என அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் தனது பந்துவீச்சு திறமையை நிரூபித்து வருகின்றார்.

உலகக் கிண்ணத்தில் விளையாடும் சிரேஷ்ட வீரர்களைக் கொண்ட இலங்கை அணி

இம்முறை உலகக் கிண்ண கிரிக்கெட் ………….

.சி.சியின் ஒருநாள் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் முதலிடத்தில் உள்ள பும்ரா, கடந்த வருடம் மாத்திரம் 13 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 22 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். அத்துடன், 49 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அவர், இன்னும் 15 விக்கெட்டுகளை வீழ்த்தினால் ஒருநாள் அரங்கில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்களில் பட்டியலில் இணைந்துகொள்வார்.  

எனினும், அண்மைக்காலமாக மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்களைக் கொண்ட போட்டிகளில் பந்துவீச்சில் அதீத திறமைகளை வெளிப்படுத்தி வருகின்ற பும்ரா, கடைசி ஓவர்களின்போது வீசுகின்ற யோக்கர் பந்துகள் எதிரணி வீரர்களுக்கு சிம்ம சொப்பனமான இருக்கும் என்பதில் சந்தேகம் கிடையாது, எனவே தனது கன்னி உலகக் கிண்ணத்தில் களமிறங்குவதற்கு காத்திருக்கும் பும்ரா, நிச்சயம் வேகப் பந்துவீச்சில் மிரட்டுவார் என்பது அனைவரதும் எதிர்பார்ப்பாகும்.

ஷிம்ரன் ஹெட்மயர் (மேற்கிந்திய தீவுகள்)

கயானாவைச் சேர்ந்த 22 வயதுடைய இளம் வீரரான ஷிம்ரன் ஹெட்மயர், 2017ஆம் ஆண்டு நியூசிலாந்து அணியுடனான ஒருநாள் தொடரின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார்.

மேற்கிந்திய தீவுகள் அணிக்காக இதுவரை 25 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள இவர், இதுவரை 4 சதங்கள் உள்ளடங்கலாக 900 ஓட்டங்களைக் குவித்துள்ளார். அதேபோல, கடந்த வருடத்தில் மாத்திரம் 18 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள ஷிம்ரன், 727 ஓட்டங்களையும் குவித்தார்.

மேற்கிந்திய தீவுகள் அணிக்காக மத்திய வரிசையில் களமிறங்கி பிரகாசித்து வருகின்ற அவர், இறுதியாக கடந்த பெப்ரவரி மாதம் பார்படோஸில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் போட்டியில் 104 ஓட்டங்களை பெற்றிருந்தார்.  

வேகத்தால் மிரட்டிய மாலிங்கவின் இறுதி ஓவர் எவ்வாறு இருந்தது?

இலங்கை அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்கவின் அபாரமான இறுதி ஓவரின் மூலமாக மும்பை ……

இதேநேரம், 2016ஆம் ஆண்டு பங்களாதேஷில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ணத்தில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு சம்பியன் பட்டத்தை வென்று கொடுக்கவும் முக்கிய காரணமாக இவர் இருந்தார்.  

இம்முறை ஐ.பி.எல் தொடரில் கோஹ்லி தலைமையிலான ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடிய ஷிம்ரன் ஹெட்மயருக்கு எதிர்பார்த்தளவு பிரகாசிக்க முடியாமல் போனது. அதேபோல, தற்போது நடைபெற்றுவருகின்ற அயர்லாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகளுடனான முத்தரப்பு ஒருநாள் தொடரிலும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

எதுஎவ்வாறாயினும், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட மேற்கிந்திய தீவுகள் அணியின் 15 பேர் கொண்ட உலகக் கிண்ண குழாத்தில் ஷிம்ரன் ஹெட்மயர் இடம்பெற்றுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

வேகப் பந்துவீச்சில் மிரட்டி சாதித்துக் காட்டிய சமிந்த வாஸ்

உலகக் கிண்ண அரங்கில் தனது வேகப் பந்துவீச்சு ………….

பாபர் அசாம் (பாகிஸ்தான்)

கிரிக்கெட் உலகைப் பொறுத்தமட்டில் பந்துவீச்சாளர்களுக்கு பஞ்சமில்லாத நாடு பாகிஸ்தான் என்று சொல்லப்படுகின்றது. எனினும், கடந்த இரண்டு வருடங்களாக மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்களைக் கொண்ட போட்டிகளில் பாகிஸ்தான் அணியின் இளம் வீரரான பாபர் அசாம் துடுப்பாட்டத்தில் பிரகாசித்து வருகின்றார்.

24 வயதான வலதுகை துடுப்பாட்ட வீரரான அவர், கடந்த 2015ஆம் ஆண்டு ஜிம்பாப்வே அணியுடனான ஒருநாள் போட்டியில் அறிமுகமானார். இதுவரை 59 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 8 சதங்கள், 10 அரைச் சதங்கள் உள்ளடங்கலாக 2462 ஓட்டங்களை அவர் குவித்துள்ளார்.  

.சி.சியின் டி-20 துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் முதலிடத்தையும், ஒருநாள் தரவரிசையில் ஏழாவது இடத்தையும் பெற்றுக்கொண்டுள்ள அவர், தொடர்ந்து 3 ஒருநாள் போட்டிகளில் 3 சதங்களை விளாசி சாதனையும் படைத்தார். அத்துடன், 21 இன்னிங்ஸ்களில் விரைவாக 1000 ஓட்டங்களை எடுத்து புதிய வரலாறு படைத்த பாபர் அசாம், இம்முறை உலகக் கிண்ணத்தில் துடுப்பாட்டத்தில் முக்கிய பங்கு வகிப்பார் என தெரிவிக்கப்படுகின்றது.

உலகக் கிண்ணத்திலிருந்து தவறவிடப்பட்ட முன்னணி பதினொருவர்

கிரிக்கெட் வீரர்களின் மிகப் பெரிய கனவு தமது ……….

ஷித் கான் (ஆப்கானிஸ்தான்)

தனது 16ஆவது வயதில் ஜிம்பாப்வே அணிக்கெதிரான ஒருநாள் போட்டியில் சர்வதேச அறிமுகத்தைப் பெற்றுக்கொண்ட ஆப்கானிஸ்தானின் இளம் சுழல் பந்துவீச்சாளரான ஷித் கானின் வளர்ச்சியானது மெய்சிலிர்க்க வைக்கின்றது.  

உள்ளூர் யுத்தம், பயங்கரவாதத் தாக்குதலினால் பெரிதும் பாதிக்கப்பட்ட அவர், பாகிஸ்தானில் உள்ள அகதி முகாமில் இருந்த காலத்தில் சிறுவயது முதல் கிரிக்கெட்டில் ஈடுபட்டு இந்த நிலைக்கு வந்துள்ளார். இதுவரை 57 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள ஷித் கான், 123 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.  

பந்துவீச்சைப் போல துடுப்பாட்டத்திலும் பிரகாசிக்கின்ற திறமை கொண்ட ஷித் கான், .சி.சியின் ஒருநாள் பந்துவீச்சாளரருக்கான தரவரிசையில் 3ஆவது இடத்தையும், சகலதுறை வீரருக்கான தரவரிசையில் முதலிடத்தையும் பெற்றுக்கொண்டுள்ளார்.   

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<