சுற்றுலா இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான போட்டி அட்டவணையை தென்னாபிரிக்க கிரிக்கெட் சபை இன்று (27) வெளியிட்டுள்ளது.
கொவிட்-19 வைரஸ் தொற்றையடுத்து, தென்னாபிரிக்க கிரிக்கெட் சபை மூன்று அணிகள், ஒரே போட்டியில் மோதும் கிரிக்கெட் தொடரொன்றை நடத்தியிருந்தது. எனினும், சர்வதேச கிரிக்கெட் திரும்புவதற்கான அறிவிப்பினை தென்னாபிரிக்க கிரிக்கெட் சபை அறிவித்திருக்கவில்லை.
திருத்தியமைக்கப்பட்ட LPL தொடரின் போட்டி அட்டவணை
இவ்வாறான நிலையில், தங்களுடைய சர்வதேச கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் முதல் ஆரம்பமாகவுள்ளதாக தென்னாபிரிக்க கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. அதன்படி, தங்களுடைய இந்த பருவகாலத்துக்கான போட்டித் தொடரை இங்கிலாந்து கிரிக்கெட் அணியுடன் தென்னாபிரிக்கா ஆரம்பிக்கவுள்ளது.
நவம்பர் மாதம் 27ம் திகதி, முதல் T20I போட்டியுடன் தொடரை ஆரம்பிக்கவுள்ள தென்னாபிரிக்க அணி மூன்று T20I போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளதுடன், தொடர்ந்து டிசம்பர் 9ம் திகதிவரை மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது.
குறித்த இந்த தொடரினையடுத்து இலங்கை அணி, தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளது. தென்னாபிரிக்கா செல்லும் இலங்கை அணி ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்கான 2 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.
Video – “அதிக விமர்சனங்களுக்கு முகங்கொடுப்பவர்கள் தேர்வளார்கள் மாத்திரமே” – பிரெண்டன் குருப்பு
தென்னாபிரிக்காவுக்கு எதிராக டிசம்பர் 26ம் திகதி வரலாற்று சிறப்புமிக்க பொக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ள இலங்கை அணி, ஜனவரி 3ம் திகதி இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளது. முதல் போட்டி சென்சூரியனில் நடைபெறவுள்ளதுடன், இரண்டாவது போட்டி ஜொஹன்னர்ஸ்பேர்க்கில் நடைபெறவுள்ளது.
இலங்கை மற்றும் இங்கிலாந்து தொடர்களையடுத்து, தென்னாபிரிக்காவுக்கு அவுஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
போட்டி அட்டவணை
முதல் டெஸ்ட் போட்டி – டிசம்பர் 26-30 (சென்சூரியன்)
இரண்டாவது டெஸ்ட் போட்டி – ஜனவரி 03-07 (ஜொஹன்னஸ்பேர்க்)
மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க…