சென் ஜோன்ஸை வீழ்த்தி கிரிக்கெட் பாஷ் சம்பியனாகியது யாழ் மத்தி 

242

யாழ் மாவட்ட பாடசாலைகள் கிரிக்கெட் சங்கம் மற்றும் ஐக்கிய இராச்சிய  தமிழ் கிரிக்கெட் லீக் ஆகியன இணைந்து வருடா வருடம் நடத்தும் கிரிக்கெட் பாஷ் T-20 தொடரின் இந்த வருட சம்பியன்களாக, யாழ் மத்திய கல்லூரி அணி மகுடம் சூடியது. 

யாழ் மத்தி வீரர்கள் நேற்றையதினம் (8) தமது சொந்த மைதானத்தில் இடம்பெற்றிருந்த நடப்பாண்டிற்கான தொடரின் இறுதிப் போட்டியில் சென். ஜோன்ஸ் கல்லூரி அணியினை  45 ஓட்டங்களால்  வெற்றிகொண்டே கிண்ணத்தினை தமதாக்கினர்

Photos : Jaffna Central College vs St. John’s College | Cricket Bash 2019 | Finals

ThePapare.com | Murugaiah Saravanan | 09/09/2019 Editing and re-using images without permission…

வடக்கு, கிழக்கு மாகாண 19 வயதிட்குட்பட்ட பாடசாலை அணிகளுக்கு இடையில் நடத்தப்படும் இத்தொடர் இம்முறை யாழ், கிளிநொச்சி மாவட்டங்களை மாத்திரம் மட்டுப்படுத்தியதாக இருந்தது. இம்முறை போட்டிகள் இம்மாதம் 5ஆம் திகதி முதல் 9ஆம் திகதி வரை யாழ்ப்பாணத்தின் பல மைதானங்களில் இடம்பெற்றன. இம்முறை தொடரில் மொத்தமாக 16 அணிகள் மோதின

குழு A

கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலம் 

ஸ்கந்தவரோதயா கல்லூரி 

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி 

ஹார்ட்லி கல்லூரி 

குழு

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி 

கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம்

மகாஜன கல்லூரி

யாழ்ப்பாணக் கல்லூரி 

குழு B

மானிப்பாய் இந்துக் கல்லூரி 

யூனியன் கல்லூரி  

சென் ஜோன்ஸ் கல்லூரி  

கிளிநொச்சி இந்துக் கல்லூரி 

குழு D

கிளிநொச்சி மகா வித்தியாலயம் 

விக்டோரியா கல்லூரி 

புனித பத்திரிசியார் கல்லூரி

கொக்குவில் இந்துக் கல்லூரி 

இறுதிப் போட்டி 

இறுதிப் போட்டியில் முதலில் ஆடிய மத்திய கல்லூரி அணிக்காக முன் வரிசையில் இயலரசன் 16 ஓட்டங்களினை பெற்றுக்கொடுத்தார். சென். ஜோன்ஸ் வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுக்களை வீழ்த்தினர். மத்திய வரிசையில் நிதுசன் 22 ஓட்டங்களினையும், வியாஸ்காந்த் 27 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுக்க, மத்திய கல்லூரி அணியினர் 134 என்ற ஓரளவு பலமான ஓட்ட எண்ணிக்கையினை பெற்றுக்கொடுத்தனர்.  

பதிலிற்கு துடுப்பெடுத்தாடுவதற்கு களமிறங்கிய சென். ஜோன்ஸ் கல்லூரி அணிக்காக முன் வரிசையில் சௌமியன், சுகேதன் ஆகியோர் தலா 19 ஓட்டங்களினை பெற்றுக்கொடுத்த போதும் தொடர்ந்துவந்த வீரர்களை மத்தியின் பந்துவீச்சாளர்கள் தமது அபாரப் பந்துவீச்சு மூலம் ஒற்றையிலக்க ஓட்டத்துடன் ஆட்டமிழக்க செய்ய, சென். ஜோன்ஸ் வீரர்கள் 89 ஓட்டங்களிற்கு சகல விக்கெட்டுக்களையும் பறிகொடுத்தனர்.  

17 வயதின்கீழ் மாவட்ட சம்பியனாக முடிசூடிய சென் ஜோன்ஸ் கல்லூரி அணி

யாழ் மாவட்ட பாடசாலைகள் கிரிக்கெட் சங்கத்தின் ஏற்பாட்டில் 17 வயதுப் பிரிவு அணிகளிற்கிடையே நடத்தப்பட்ட…

நிறைவில், பந்துவீச்சு மற்றும் களத்தடுப்பில் பிரகாசித்த மத்தியின் மைந்தர்கள் 45 ஓட்டங்களால் போட்டியினை வெற்றிகொண்டு, 2019ஆம் ஆண்டிற்கான கிரிக்கெட் பாஷ் கிண்ணத்தினை தமதாக்கினர்.

போட்டிச்சுருக்கம் 

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி 134/8 (20) – வியாஸ்காந் 27, நிதுசன் 22, டினோசன் 2/28, சௌமியன் 2/36

சென். ஜோன்ஸ் கல்லூரி 89/10 (18.4) – சௌமியன் 19, சுகேதன் 19, நிதுசன் 2/15, பிரவீன்ராஜ் 2/16 

போட்டி முடிவு – 45  ஓட்டங்களால் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி வெற்றி 

ஆட்டநாயகன்நிதுசன் 

விருதுகள் 

சிறந்த துடுப்பாட்ட வீரர்வியாஸ்காந்த் 

சிறந்த பந்துவீச்சாளர்நிதுசன் 

சிறந்த சகலதுறை வீரர்வியாஸ்காந்த் 

சிறந்த களத்தடுப்பாட்ட வீரர்பிரணவன் 

அரையிறுதி போட்டிகள்

காலிறுதிப் போட்டிகளில் வெற்றிகளைப் பதிவுசெய்த புனித பத்திரிசியார் கல்லூரி, யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி, சென். ஜோன்ஸ் கல்லூரி மற்றும் கொக்குவில் இந்துக் கல்லூரி அணிகள் அரயிறுதி மோதலில் பலப்பரீட்சை நடத்தினர்


புனித பத்திரிசியார் கல்லூரி எதிர் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி

பந்துவீச்சாளர்களின் கை மேலோங்கியதாக அமைந்திருந்த இந்தப் போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய மத்திய கல்லூரியினர் 92 ஓட்டங்களினை மட்டுமே பெற்றுக்கொண்டனர். அதிகபட்சமாக பின்வரிசை வீரர் திவாகரன் 25 ஓட்டங்களினை பெற்றுக்கொடுத்தார்.

Photos: Cricket Bash – T20 Cricket Tournament-2019 | Day 2

ThePapare.com | Murugaiah Saravanan | 09/09/2019 Editing and re-using images without permission of ThePapare.com…

புனித பத்திரிசியார் கல்லூரி சார்பில் டெஸ்வின் 3 விக்கெட்டுகளையும், கஸ்ரோ 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தியிருந்தனர்.  

தொடர்ந்து இலகுவான வெற்றி இலக்கினை நோக்கி ஆடிய புனித பத்திரிசியார் அணியினருக்கு, மத்தியின் பந்துவீச்சாளர்கள் அதிர்ச்சி கொடுக்க, அவர்களால் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 87 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. எனவே, மத்திய கல்லூரி வீரர்களால் 5 விக்கெட்டுக்களினால் திரில் வெற்றி பெற்றனர்

அவ்வணிக்காக ரவிந்து மாத்திரம் 21 ஓட்டங்களைப் பெற, பந்துவீச்சில் நிதுசன் 3 விக்கெட்டுக்களையும் பிரவீன்ராஜ் 2 விக்கெட்டுக்களையும் பெற்றனர்

போட்டிச்சுருக்கம்

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி 92/10 (19.5) –  திவாகரன் 25, டெஸ்வின் 3/23, கஸ்ரோ 2/14

புனித பத்திரிசியார் கல்லூரி 87/10 (19.5) – ரவிந்து 21, நிதுசன் 3/19, பிரவீன்ராஜ் 2/23

போட்டி முடிவு –   5 ஓட்டங்களால் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி வெற்றி 

ஆட்டநாயகன்நிதுசன் 


சென். ஜோன்ஸ் கல்லூரி எதிர் கொக்குவில் இந்துக் கல்லூரி

முதலாவதாக துடுப்பெடுத்தாட தீர்மானித்த சென். ஜோன்ஸ் கல்லூரி ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான சௌமியன், தனுஜன் ஆகியோரது அரைச்சதம் மற்றும் டினோசன் பெற்றுக்கொடுத்த பெறுமதியான 29 ஓட்டங்களோடு 160 என்ற வெற்றியிலக்கினை நிர்ணயித்தனர்

பதிலிற்கு துடுப்பெடுத்தாடிய கொக்குவில் தரப்பிற்கு, ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் பிரவின் 25 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தபோதும் ஏனையோர் எதிர்பார்ப்பினை நிறைவேற்றத் தவற, 56 ஓட்டங்களால் போட்டியில் வெற்றி பெற்றது சென். ஜோன்ஸ் அணி.

போட்டிச்சுருக்கம்

சென். ஜோன்ஸ் கல்லூரி 159/3 (20) – சௌமியன் 58, தனுஜன்  56*, டினோசன் 29

கொக்குவில் இந்துக் கல்லூரி 105/10 (19.4) – பிரவின் 25, தமிழ்கதிர் 3/15, டினோசன் 2/15, சரண் 2/15, விதுசன் 2/23

போட்டி முடிவு– 5 6 ஓட்டங்களால் சென் ஜோன்ஸ் கல்லூரி அணி வெற்றி 

ஆட்டநாயகன்சௌமியன் 

காலிறுதிக்கு தகுதிபெற்ற அணிகள் 

குழு A

ஸ்கந்தவரோதயா கல்லூரி 

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி 

குழு

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி 

மகாஜன கல்லூரி 

குழு B

சென் ஜோன்ஸ் கல்லூரி 

கிளிநொச்சி இந்துக் கல்லூரி 

குழு D

சென். பற்றிக்ஸ் கல்லூரி 

கொக்குவில் இந்துக் கல்லூரி 

 மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க