கொரோனா வைரஸ் எதிரொலியினால் வேலை இழந்துள்ள அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையின் ஊழியர்களுக்கு அந்நாட்டில் உள்ள சுப்பர் மார்கெட்களில் (சிறப்பு அங்காடி) தற்காலிக வேலை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. மீண்டும் நிலைமைகள் சீராகி கிரிக்கெட் போட்டிகள் எப்போது தொடங்கும் என்று கணிக்க முடியாத நிலை உள்ளது.
இந்தியாவில் கிரிக்கெட் மிகவும் அருகில் இருப்பதாக தெரியவில்லை – கங்குலி
கொரோனா வைரஸ் காரணமாக விளையாட்டுக்கள் அனைத்துமே முடங்கியிருக்கின்றன……….
இதனால், ஒவ்வொரு நாட்டின் கிரிக்கெட் சபையும் மிகக்பெரிய அளவில் நிதி நெருக்கடியை சந்தித்துள்ளன. ஏற்கனவே அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை சில தொடர்கள் இரத்தானதால் வருவாய் இழப்பை சந்தித்துள்ளது. இதனால் தங்கள் அணி வீரர்களுக்கு ஊதியத்தை குறைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டள்ளது.
அத்துடன், அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை ஊழியர்களின் சம்பளத்தை குறைத்ததுடன் 80 சதவீதமானவர்களை கட்டாய விடுமுறையில் அனுப்பியது. இதனால் அந்த ஊழியர்கள் வேலை இல்லாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுஇவ்வாறிருக்க, கொரோனா வைரஸ் காரணமாக அஸ்திரேலியாவிலும் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டிருப்பதால் மக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் மருந்தகங்கள், மருத்துவமனைகள், சுப்பர் மார்க்கெட்டுகள் போன்றவை மட்டுமே திறந்து இருக்கின்றன.
இதனால், வேலை இழந்துள்ள ஊழியர்களுக்கு அந்நாட்டில் உள்ள பிரதான சுப்பர் மார்கெட்டில் ஜூலை 30ஆம் திகதி வரை வேலை செய்யும் வகையில் அவுஸ்திரேலியா கிரிக்கெட் சபை ஏற்பாடு செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதுதொடர்பாக வூல்வேர்த்ஸ் (Woolworths) என்ற சுப்பர் மார்க்கெட் நிறுவனத்திற்கு அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையின் நிறைவேற்று அதிகாரி கெவின் ரொபர்ட்ஸ் எழுதியுள்ள கடிதத்தில்,
”உங்கள் நிறுவனத்திற்கு இதுபோன்ற தருணத்தில் அதிக அளவிலான பணியாளர்கள் தேவைப்படும். எங்களுடைய ஊழியர்கள் மற்றும் கலாசார குழு ஏற்கனவே இதுபோன்று தேவைப்படும் நிலையில் மற்ற அமைப்புகளுக்காக தற்காலிகமாக வேலை பார்த்துள்ளனர்” என்று குறிப்பிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், இரசிகர்கள் இன்றி கிரிக்கெட் போட்டிகளை ஆரம்பிப்பது எமக்கு மிகப் பெரிய நஷ்டத்தை கொடுக்கவுள்ளது. எமது டிக்கெட் விற்பனை மூலம் தான் அதிக வருவாய் கிடைக்கின்றன.
குறிப்பாக, 40 முதல் 50 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்களை நாங்கள் பெற்றுக் கொள்வோம். ஆனால் இந்தமுறை அனைத்தையும் நாங்கள் இழக்கவுள்ளோம்.
ஐசிசியின் தொடர்களில் பங்கேற்க ஜாவிட் உமருக்கு தடை
பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஜாவிட் உமர், ஐசிசி நடாத்தும் எந்தவொரு போட்டித் தொடரிலும் பங்களாதேஷ் கிரிக்கெட் …..
கொரோனா வைரஸ் காரணமாக வேலைகளை தற்காலிகமாக இழந்துள்ள எமது ஊழியர்களுக்கு மாற்று வழிகளை செய்துகொடுக்க நிச்சயம் நடவடிக்கை எடுப்போம் எனவும் அவர் தெரிவித்தார்.
கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக அவுஸ்திரேலியாவில் இதுவரை 6,649 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 71 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில், எதிர்வரும் செப்டம்பர் 30ஆம் திகதி வரை தன்னுடைய எல்லைகளை மூடியுள்ள அவுஸ்திரேலியா அரசு, அதுவரை வெளிநாட்டினர் தம்முடைய நாட்டிற்குள் நுழைய தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<