பங்களாதேஷ் கிரிக்கெட் சபை (BCB) தமது இலங்கை சுற்றுப்பயணத்தின் போது பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட ஆலோசகராக செயற்பட நியூசிலாந்து அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் கிரைக் மெக்மிலானை அழைக்க திட்டங்கள் வைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
தேசிய விளையாட்டு பேரவைக்கு சங்கா, மஹேலவுக்கு அழைப்பு
டெஸ்ட் போட்டிகளில் பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட ஆலோசகராக தென்னாபிரிக்காவினைச் சேர்ந்த நெயில் மெக்கென்சி செயற்படுகின்றார். ஆனால், பங்களாதேஷ் கிரிக்கெட் அணி ஒக்டோபர் மாதத்தில் நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்காக ஒரு மாதத்திற்கு முன்னரேயே (அதாவது செப்டம்பர் மாதத்திலேயே) இலங்கை வரவிருக்கின்றது.
இந்நிலையில் தென்னாபிரிக்க நாட்டினைச் சேர்ந்த மெக்கென்சி கொவிட்-19 வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தனது தாயகத்தில் இருந்து இலங்கை பயணிப்பது சிரமமாகின்ற ஒரு சந்தர்ப்பமும் காணப்படுகின்றது. எனவே, இந்த விடயத்தைக் கருத்திற்கொண்டே மெக்கென்சிக்கு பதிலாக கிரைக் மெக்மிலானை துடுப்பாட்ட ஆலோசகராக அழைக்கும் திட்டத்தினை பங்களாதேஷ் கிரிக்கெட் சபை கொண்டிருக்கின்றது.
கிரைக் மெக்மிலானை துடுப்பாட்ட ஆலோசகராக அழைக்கவிருக்கும் விடயத்தினை பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் கிரிக்கெட் விவகாரங்களுக்கு பொறுப்பாகவிருக்கும் நிர்வாகியான அக்ரம் கான் உறுதி செய்ததோடு, மெக்கென்சியினை இலங்கை அழைப்பதற்கு தேவையாக இருக்கும் முயற்சிகளையும் செய்யவிருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
இங்கிலாந்து பயிற்சியாளர் குழாத்தில் இணைந்த அசார் மஹ்மூத்
”அவர் (மெக்கென்சி) இலங்கை வருவதற்கான வாய்ப்பு 50 இற்கு 50 ஆக உள்ளது. நாங்கள் அவரை இலங்கைக்கு எடுப்பதற்கான முயற்சிகளை செய்யவிருக்கின்றோம். எனினும், அவர் இலங்கை வருவதற்கு விருப்பம் தெரிவிக்காத ஒரு சந்தர்ப்பத்தில் நாங்கள் பிரதியீடாக வேறு ஒருவரை தேட வேண்டியிருக்கின்றது.”
அதேநேரம், ஐ.சி.சி. இன் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பிற்காக நடைபெறவுள்ள இலங்கை – பங்களாதேஷ் அணிகள் பங்கேற்கும் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 27ஆம் திகதி ஆரம்பமாகவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல விளையாட்டுச் செய்திகளைப் படிக்க