இலங்கை அணிக்கு புதிய சுழல் பந்துவீச்சு பயிற்றுவிப்பாளர்!

Sri Lanka Cricket

326
Crig Howard

இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய சுழல் பந்துவீச்சு பயிற்றுவிப்பாளராக அவுஸ்திரேலியாவின் முதற்தர கிரிக்கெட் வீரர் கிரைக் ஹோவார்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.

கிரைக் ஹோவார்ட் இதற்கு முதல் நியூசிலாந்து மகளிர் அணி மற்றும் விக்டோரியா ஆடவர் முதற்தர அணிகளின் சுழல் பந்துவீச்சு பயிற்றுவிப்பாளராக செயற்பட்டுள்ளார்.

>>அமெரிக்காவின் உயரம் பாய்தல் சம்பியனாகிய உஷான்<<

கிரைக் ஹோவார்ட் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள ஒருநாள் தொடரிலிருந்து தேசிய அணியின் சுழல் பந்துவீச்சு பயிற்றுவிப்பாளராக செயற்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் அவுஸ்திரேலியாவில் 3ம் மட்ட பயிற்றுவிப்பாளர் தகுதியை பெற்றுள்ளதுடன் கடந்த 12 வருடங்களாக அவுஸ்திரேலியாவின் ஆலோசிப்பு பயிற்றுவிப்பாளராக செயற்பட்டுள்ளார்.

இதேவேளை இம்மாதம் முதலாம் திகதி முதல் இரண்டு வருட ஒப்பந்தத்தில் இலங்கை கிரிக்கெட் அணியின் சுழல் பந்துவீச்சு பயிற்றுவிப்பாளராக இவர் செயற்படவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<