முதலாம் சுற்றின் இறுதிப்போட்டியில் மோதிய CR & FC அணி 12 ட்ரைகளை வைத்து அபார வெற்றி பெற்றது. போட்டியில் சோபிக்கத்தவறிய CH & FC அணியினால் 2 ட்ரைகளை மட்டுமே வைக்க முடிந்தது.
ரேஸ் கோர்ஸ் சர்வதேச மைதானத்தில் ஆரம்பமான போட்டியில் ஆரம்பத்தில் இரு அணிகளும் கிடைத்த பெனால்டி வாய்ப்புகளை சரிவரப் பயன்படுத்தினர் (CR & FC அணி 3 – 3 CH & FC அணி).
அதன் பின்பு CR & FC அணி தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி புள்ளிகளை குவிக்கத்தொடங்கியது.
போட்டியின் முதலாவது ட்ரையினை தாரிக் சாலி வைத்து CR & FC அணியினை முன்னிலைப்படுத்தினார். மேலும் சிறப்பாக விளையாடிய CR & FC அணிக்காக குறுகிய நேர இடைவெளியில் கவிந்து டி கொஸ்டா, அனுராத ஹேரத் மற்றும் ஒமல்க குணரத்ன ஆகியோர் ட்ரை வைத்தனர் (CR & FC அணி 29 – 3 CH & FC அணி).
Photos: CR&FC v CH&FC – Dialog Rugby League 2016/17 | #Match 26
பல சிக்கல்களுக்குப் பிறகு CH & FC அணி தமது முதலாவது ட்ரையினை திவங்க பண்டாரவின் மூலம் வைத்தது (CR & FC அணி 29 – 8 CH & FC அணி).
அதன் பின்பு மீண்டும் சிறப்பாக விளையாடிய CR & FC அணிக்காக மீண்டும் ஒரு ட்ரையினை அனுராத ஹேரத் வைத்தார். தொடர்ந்து ஷாமல் வீரசேகர முதல்பாதியின் இறுதி ட்ரையினை வைத்து அணியை பாரிய புள்ளி வித்தியாசத்தில் முன்னிலைப்படுத்தினார்.
முதல் பாதி: CR & FC அணி 43 – 8 CH & FC அணி
இரண்டாவது பாதியிலும் CR & FC அணி 5 ட்ரைகளை வைத்து அணியின் வெற்றியை ஊர்ஜிதப்படுத்தியது.
மொஹமட் சஷான் இரண்டாவது பாதியின் முதலாவது ட்ரையினை வைத்து அணியின் போக்கை ஸ்திரப்படுத்தினார்.
CR & FC அணியின் தலைவர் ஷேன் மதுரப்பெரும தனது முதலாவது ட்ரையினை வைத்தார். தொடர்ந்து புதிதாக போட்டியில் அறிமுகப்படுத்தப்பட்ட நலின் குமார ஒரு ட்ரையினை வைத்தார் (CR & FC அணி 69 – 8 CH & FC அணி).
சமந்த லக்ஷான் அபாயகரமான செயற்பாடு காரணமாக வெளியேற்றப்பட்ட போதிலும் சளைக்காமல் விளையாடிய CR & FC அணிக்கு நலின் குமார மீண்டும் ட்ரையினை வைத்து CH & FC அணிக்கு சோதனை விளைவித்தார்.
இதற்கு பதிலளிக்கும் முகமாக CH & FC அணி மீண்டும் ஒரு ட்ரையினை வைத்து 13 புள்ளிகளுக்கு உயர்ந்தது. குறித்த ட்ரையினை கசுன் ஸ்ரீநாத் வைத்தார் (CR & FC அணி 76 – 13 CH & FC அணி).
போட்டியின் இறுதி ட்ரையினை CR & FC அணி சார்பாக சரண சேனநாயக்க வைத்தார்.
இரண்டாம் பாதி: CR & FC அணி 83 – 13 CH & FC அணி
ThePapare.com சிறப்பாட்டக்காரர்: தாரிக் சாலி (CR & FC அணி)
போட்டியின் முடிவில் தாரிக் சாலி கருத்துத் தெரிவிக்கையில்,
“அனுபவ வீரர்கள் பலர் இல்லாத சந்தர்ப்பத்தில் புதுமுக வீரர்கள் தமது வேலைகளை சிறப்பாக செய்து வெற்றிக்கு வழிவகுத்தனர்.”
இரண்டாவது சுற்றுக்கு செல்லும் முன் இப்படியான ஒரு வெற்றி எங்களுக்கு தேவைப்பட்டது” எனக் கூறினார்.
புள்ளி விபரம்
CR & FC அணி
ட்ரை – தாரிக் சாலி, கவிந்து டி கொஸ்டா, அனுராதா ஹேரத் 3, ஷமல் வீரசேகர, சஷான் மொஹமட், ஷேன் சம்மந்தப்பெரும, நலின் குமார 2, சரண சேனநாயக்க
பெனால்டி – ப்ரின்ஸ் சாமர
கன்வர்ஷன் – ப்ரின்ஸ் சாமர 7, கவிந்து டி கொஸ்டா, நலின் குமார, சமந்தா லக்ஷான்CH & FC அணி
ட்ரை – திவங்க பண்டார, கசுன் ஸ்ரீநாத்
பெனால்டி – விஷ்வ தெனெத்