நான்காவது முறையாக CPL தொடரின் சம்பியனான ட்ரின்பாகோ நைட்ரைடர்ஸ்

328
Photo - Getty Images

எட்டாவது பருவகாலத்திற்கான கரீபியன் பிரிமியர் லீக் T20 (CPL T20) தொடரின், சம்பியனாக ட்ரின்பாகோ நைட்ரைடர்ஸ் அணியினர் தெரிவாகியிருக்கின்றனர்.

நியூசிலாந்து சுற்றுப் பயணத்துக்குத் தயாராகும் பாகிஸ்தான் அணி

இந்த வியாழக்கிழமை (10) நடைபெற்ற கரீபியன் பிரிமியர் லீக் T20 தொடரின் இறுதிப் போட்டியில் சென். லூசியா ஷூக்ஸ் அணியினை 8 விக்கெட்டுக்களால் வீழ்த்தி சம்பியனான ட்ரின்பாகோ நைட்ரைடர்ஸ் அணி நான்காவது முறையாக கரீபியன் பிரிமியர் லீக் தொடரில் சம்பியன் பட்டம் வென்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது. 

இந்த ஆண்டு கரீபியன் பிரிமியர் லீக் T20 தொடரில் எந்தவித தோல்விகளையும் சந்திக்காத ட்ரின்பாகோ நைட்ரைடர்ஸ் அணிக்கும், சென். லூசியா ஷூக்ஸ் அணிக்கும் இடையிலான இறுதிப் போட்டி ட்ரினிடாட் நகரில் நடைபெற்றது.  

போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற ட்ரின்பாகோ நைட்ரைடர்ஸ் அணியின் தலைவர் கீய்ரோன் பொலார்ட் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை சென். லுாசியா ஷூக்ஸ் அணிக்கு வழங்கினார். 

அதன்படி, போட்டியில் முதலில் துடுப்பாடிய சென்.லூசியா ஷூக்ஸ் அணி 19.1 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 154 ஓட்டங்கள் பெற்றது. 

சென். லூசியா ஷூக்ஸ் அணியின் துடுப்பாட்டம் சார்பாக அன்ட்ரூ ப்ளெச்சர் 27 பந்துகளில் 39 ஓட்டங்கள் எடுத்து தனது தரப்பில் அதிகபட்ச தனிநபர் ஓட்ட எண்ணிக்கையினை பதிவு செய்தார். 

அதேநேரம், ட்ரின்பாகோ நைட்ரைடர்ஸ் அணியின் பந்துவீச்சில் அதன் தலைவர் பொல்லார்ட் 4 விக்கெட்டுக்களைச் சாய்க்க, அலி கான் மற்றும் பவாட் அஹ்மட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சுருட்டினர். 

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 155 ஓட்டங்களை அடைவதற்கு பதிலுக்கு துடுப்பாடிய ட்ரின்பாகோ நைட்ரைடர்ஸ் அணியினர், போட்டியின் வெற்றி இலக்கினை 18.1 ஓவர்களில் வெறும் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 157 ஓட்டங்களுடன் அடைந்தனர். 

ஓய்வு முடிவை திரும்பப் பெறுகிறார் யுவ்ராஜ் சிங்

ட்ரின்பாகோ நைட்ரைடர்ஸ் அணியின் துடுப்பாட்டம் சார்பில், வெற்றி இலக்கினை அடைவதற்கு உதவியாக இருந்த லின்டல் சிம்மோன்ஸ் வெறும் 49 பந்துகளில் 4 சிக்ஸர்கள் மற்றும் 8 பௌண்டரிகள் அடங்கலாக ஆட்டமிழக்காமல் 84 ஓட்டங்களைப் பெற்றிருக்க, டர்ரன் ப்ராவோவும் ஆட்டமிழக்காமல் 6 சிக்ஸர்கள் மற்றும் 2 பௌண்டரிகள் அடங்கலாக 58 ஓட்டங்களை எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

ட்ரின்பாகோ நைட்ரைடர்ஸ் அணியின் பந்துவீச்சு சார்பில் ஸ்கொட் குக்கலேஜின் மற்றும் ரொஸ்டன் சேஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் சாய்த்திருந்தனர். 

போட்டியின் ஆட்டநாயகன் விருது லென்டல் சிம்மோன்ஸிற்கு வழங்கப்பட, கரீபியன் பிரிமியர் லீக் தொடரின் தொடர் நாயகனாக கீய்ரோன் பொல்லார்ட் தெரிவாகினார்.

போட்டியின் சுருக்கம்

சென். லூசியா ஷூக்ஸ் – 154 (19.1) அன்ட்ரூ ப்ளச்சர் 39, கீய்ரோன் பொல்லார்ட் 30/4, பவாட் அஹ்மட் 22/2, அலி கான் 25/2

ட்ரின்பாகோ நைட்ரைடர்ஸ் – 157/2 (18.1) லென்ட்ல் சிம்மோன்ஸ் 84*, டர்ரன் ப்ராவோ 58*, ரொஸ்டன் சேஸ் 13/1

முடிவு – ட்ரின்பாகோ நைட்ரைடர்ஸ் அணி 8 விக்கெட்டுக்களால் வெற்றி  

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<