கார்டிப் மருத்துவமனைக்கு மனைவியுடன் சேர்ந்து நிதி வழங்கிய க்ரேத் பேல்

181

கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் ரியல் மெட்ரிட் அணிக்காக விளையாடிவரும் நட்சத்திர கால்பந்து வீரரான க்ரேத் பேல் மற்றும் அவரது மனைவி எம்மா ஆகிய இருவரும் வேல்ஸில் உள்ள கார்டிப் மருத்துவமனைக்கு சுமார் 10 கோடி ரூபாய் நிதியை நன்கொடையாக வழங்கியுள்ளார்.  

வேல்ஸ் நாட்டின் கால்பந்து வீரரான 30 வயதுடைய க்ரேத் பேல், ஸ்பெயினின் ரியல் மெட்ரிட் அணிக்காக கடந்த 2013இல் இருந்து விளையாடி வருகிறார்.   

பிரமாண்டமாக புனரமைக்கப்படும் ரியல் மெட்ரிட் அரங்கு

புனரைக்கப்பட்டு வரும் ரியல் மெட்ரிட்……

இவர் அந்த அணிக்காக விளையாடிய காலம் முதல் தற்போது வரை நான்கு தடவைகள் ரியல் மெட்ரிட் கழகம் சம்பியன்ஸ் லீக்கை வென்றுள்ளது.

இவர் வேல்ஸ் நாட்டில் உள்ள கார்டிஃப் நகரில் பிறந்தார். தற்போது வேல்ஸ் நாடும் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து தப்பவில்லை. கொரோனாவினால்  அங்கு 8 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 624 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் க்ரேத் பேல் பிறந்த மருத்துவமனையான வேல்ஸில் உள்ள யுனிவர்சிட்டி மருத்துவமனைக்கு 5 இலட்சம் பவுண்டுகளை (சுமார் 10 கோடி ரூபாய்) நிதியாக வழங்கியுள்ளார்

இதுகுறித்து க்ரேத் பேல் கூறுகையில் கொரோனா வைரஸ் தொற்றின்போது கடுமையாக போராடும் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன்

யுனிவர்சிட்டி மருத்துவமனைக்கு எனது இதயத்தில் முக்கிய இடம் உள்ளது. நான் அங்குதான் பிறந்தேன். எனது நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சமூகத்திற்கு அதிகமான ஆதரவு வழங்கியுள்ளது

நானும் எனது குடும்பமும் ஆதரவு தெரிவிக்க விரும்புகிறோம். சிறப்பான வேலை செய்யும் அவர்களுக்கு மிக்க நன்றி” என்றார்.

க்ரேத் பேல் செய்துள்ள இந்த உதவி சமூகவலைத்தளங்களில் பாராட்டுகளைப் பெற்று வருகிறது

இதுஇவ்வாறிருக்க, கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 12ஆம் திகதி முதல் ஒத்திவைக்கப்பட்ட லா லீகா கால்பந்தாட்டத் தொடரை நிலைமைகள் சீராகும் வரை ஆரம்பிக்க வேண்டாம் என க்ரேத் பேல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.   

லா லீகா கால்பந்தாட்டத் தொடரின் தலைவர் ஜாவியர் டிபாஸ், அடுத்த மாதம் குறித்த போட்டித் தொடரை மீண்டும் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக கடந்த சில தினங்களுக்கு முன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<