பொலிஸ் விளையாட்டுக் கழகத்தை 3-0 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்தியிருக்கும் ஜாவா லேன் அணியினர் இந்தப் பருவகாலத்திற்கான டயலொக் சம்பியன்ஸ் லீக் தொடரில் தமது முதல் வெற்றியை பதிவு செய்து அதன் மூலம் மூன்று புள்ளிகளையும் சுவீகரித்துக் கொண்டுள்ளனர்.
இந்த ஆட்டத்தில் பங்குபற்றியிருந்த ஜாவா லேன் முன்னதாக கிரிஸ்டல் பெலஸ் அணியிடம் தோல்வியைத் தழுவி இருந்ததோடு, பொலிஸ் விளையாட்டுக் கழகமும் பெலிகன்ஸ் அணியினரால் வீழ்த்தப்பட்டிருந்தது.
பொலிஸ் பார்க் மைதானத்தில் ஆரம்பமாகியிருந்த இப்போட்டியில் ஆரம்ப விசில் ஊதப்பட்ட தருணத்தில் இருந்து மைதான சொந்தக்காரர்கள் ஆதிக்கத்தை வெளிக்காட்டியிருந்தனர்.
முன்னைய நிமிடங்களில் இலங்கை தேசிய கால்பந்து அணியின் முன்னாள் தலைவர் சத்துர குணரத்ன போட்டியை பொலிஸ் விளையாட்டுக் கழகத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தார்.
எனினும், நவீன் ஜூட் மற்றும் றிஸ்கான் பைசர் ஆகியோரின் துரிதமான செயற்பாட்டினால் எதிர் தாக்குதல்களை மேற்கொண்ட ஜாவா லேன் இளம் வீரர்கள் அதன் மூலம் பொலிஸ் விளையாட்டுக் கழகத்தை மிரட்டியிருந்தனர்.
போட்டியின் முதல் கோல் பொலிஸ் அணியின் கோல் காப்பாளர் மஹேந்திரன் தினேஷ் மேற்கொண்ட சிறு தவறு ஒன்றின் காரணமாக பெறப்பட்டது. இமானுவேல் உச்சேனா தனது அழகிய பாதவேலையோடு ஜாவா லேன் அணிக்காக முதல் கோலைப் பெற்றார்.
மீண்டும் ப்ரீ கிக் வாய்ப்பு ஒன்றின் மூலம் உச்சேனா கோல் ஒன்றைப் பெற முயற்சி செய்திருந்த போதும் அதனை எதிரணியின் கோல் காப்பாளர் மஹேந்திரன் தினேஷ் தடுத்திருந்தார். அதேபோன்று பொலிஸ் வீரர் குணரத்னவினாலும் நீண்ட தூரத்தில் இருந்தவாறு சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு ஜாவா லேன் கழகத்தின் கோல் காப்பாளர் சதீஷ் குமாரிற்கு அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டிருந்தது.
சொந்த மண்ணில் கிறிஸ்டல் பெலஸ் அணியிடம் வீழ்ந்த ஜாவா லேன்
சில மாதங்களுக்கு முன்பு நடந்து முடிந்த FA கிண்ணத்தின் இறுதிப் போட்டி வரை முன்னேறிய..
போட்டியின் 40 ஆவது நிமிடத்தில் ஜாவா லேன் வீரர் நவீன் ஜூட் மீது போட்டி விதிமுறைகளை மீறி முழங்கையினால் உரசிய குற்றத்திற்காக பொலிஸ் விளையாட்டுக் கழக வீரர் N.S. குமார மைதானத்தை விட்டு வெளியேற்றப்பட்டிருந்தார்.
முதல் பாதி: பொலிஸ் விளையாட்டுக் கழகம் 0 – 1 ஜாவா லேன் விளையாட்டு கழகம்
போட்டியின் இரண்டாம் பாதியை மிகவும் உற்சாகமான முறையில் ஜாவா லேன் வீரர்கள் ஆரம்பித்திருந்தனர். அணித் தலைவர் றிஸ்கான் பைசர் 47 ஆவது நிமிடத்தில் ஜாவா லேனிற்காக இரண்டாம் கோலைப் போட்டார்.
எனினும் வெறும் 10 பேர்களுடன் ஆடிய பொலிஸ் வீரர்களை தொடர்ந்தும் சமாளிப்பது ஜாவாலேனின் இளம் வீரர்களுக்கு கடினமாகவே காணப்பட்டிருந்தது.
ஜாவாலேன் விளையாட்டுக் கழக வீரர்களான சப்ராஸ் கைஸ், ஜானக்க சமிந்த மற்றும் நவீன் ஜூட் ஆகிய வீரர்கள் கிடைத்த வாய்ப்புக்களில் அபரிமிதமான ஆட்டத்தை வெளிக்காட்டினர்.
போட்டியின் எஞ்சிய நிமிடங்களில் பதில் வீரர்களில் ஒருவராக மைதானம் நுழைந்த மொஹமட் அப்துல்லாஹ் கோலொன்றைப் பெற்று பொலிஸ் விளையாட்டுக் கழகம் வெற்றி பெறும் வாய்ப்பை இல்லாமல் செய்திருந்தார்.
சப்ராஸ் கைஸ் தனது தலையால் முட்டி பொலிஸ் அணியின் கோல் கம்பங்களிற்குள் பந்தினை செலுத்தியிருந்தார். எனினும், போட்டி நடுவர் அதனை ஒப் சைட் என சைகை காட்டினார்.
முழு நேரம்: பொலிஸ் விளையாட்டுக் கழகம் 0 – 3 ஜாவா லேன் விளையாட்டுக் கழகம்
ThePapare.com இன் ஆட்ட நாயகன் – றிஸ்கான் பைசர் (ஜாவா லேன் விளையாட்டு கழகம்)
கோல் பெற்றவர்கள்
ஜாவா லேன் விளையாட்டு கழகம் – இம்மானுவேல் உச்சேன்னா 26’, றிஸ்கான் பைசர் 47’, மொஹமட் அப்துல்லாஹ் 85’
மஞ்சள் அட்டை
ஜாவா லேன் விளையாட்டு கழகம் – நவீன் ஜூட் 90+1’
சிவப்பு அட்டை
பொலிஸ் விளையாட்டுக் கழகம் – N.S. குமார 40’
Highlights – Renown SC v Saunders SC – DCL17 (Week 1)
Uploaded by ThePapare.com on 2017-09-08.