தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரரான கோர்பின் போஸ்ச் பாகிஸ்தான் சுப்பர் லீக் (PSL) தொடர் ஒப்பந்தத்தில் இருந்து விலகியமைக்காக, குறிப்பிட்ட தொடரில் பங்கெடுக்க ஒராண்டு தடையினைப் பெற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
>>சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் தலைவராக மீண்டும் டோனி<<
கோர்பின் போஸ்ச் 2025ஆம் ஆண்டுக்கான PSL தொடரில் பெசாவர் ஷல்மி அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். எனினும் தற்போது நடைபெற்று வரும் இந்திய பிரீமியர் லீக் (IPL) தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியானது அவரினை உபாதை பிரதியீட்டு வீரராக தமது குழாத்தில் இணைத்தது.
எனவே போஸ்ச் இந்தப் பருவத்திற்கான PSL தொடரில் இருந்து விலகி IPL தொடரில் ஆடுவதற்காக இந்தியாவிற்குச் சென்றார். இந்த விடயத்திற்கு தண்டனை வழங்கும் விதமாகவே பாகிஸ்தான் கிரிக்கெட் சபையானது (PCB) போஸ்ச்சிற்கு PSL தொடரில் பங்கெடுக்க ஓராண்டு தடை வழங்கியிருக்கின்றது.
இந்த தடை உத்தரவிற்கு அமைய போஸ்ச்சினால் அடுத்த ஆண்டு (2026) நடைபெறும் PSL தொடரில் பங்கெடுக்க முடியாத நிலை காணப்படுகின்றது. அதேநேரம் போஸ்ச் தான் PSL தொடரில் இருந்து விலகியமைக்காக பாகிஸ்தான் மக்களிடமும் பெசாவர் ஷல்மி இரசிகர்களிடமும் மன்னிப்பு கோருவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிட்டிருக்கின்றது.
அதேவேளை இந்தப் பருவத்திற்கான IPL தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியினால் போஸ்ச் உள்வாங்கப்பட்ட போதும் அவர் அந்த அணியினால் மேலதிக களத்தடுப்பாளர்களில் ஒருவராகவே இதுவரை பயன்படுத்தப்பட்டிருக்கின்றமை சுட்டிக்காட்டத்தக்க விடயமாகும்.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<