கோப்பா அமெரிக்கா கால்பந்து கிண்ணத் தொடரின் குழுநிலை போட்டிகளில் லியோனல் மெஸ்ஸியின் ஆர்ஜன்டீன அணி கொலம்பியாவிடம் 2-0 என்ற கோல் வித்தியாசத்தில் தோற்றதோடு, வெனிசுவேலா மற்றும் பெரு அணிகளுக்கு இடையிலான போட்டி சமநிலையில் முடிவுற்றது.
ஆர்ஜன்டீனா எதிர் கொலம்பியா
பிரேசிலில் நடைபெற்று வரும் கோப்பா அமெரிக்க கிண்ணத்திற்காக B குழுவுக்காக இலங்கை நேரப்படி இன்று (16) நடைபெற்ற இந்தப் போட்டியின் கடைசி நிமிடங்கள் வரை இரு அணிகளும் கோல்பெற போராடிய நிலையில் ரொஜர் மார்டினஸ் 72ஆவது நிமிடத்தில் அபார கோல் ஒன்றை புகுத்தினர்.
கோப்பா அமெரிக்க கிண்ணத்தை வெற்றியுடன் ஆரம்பித்த பிரேசில்
பிலிப்பே கோட்டின்ஹோவின் இரட்டை கோல் மூலம் பொலிவிய அணிக்கு எதிரான கோப்பா…
இதனைத் தொடர்ந்து 15 நிமிடங்கள் கழித்து மாற்று வீரரான டுவான் சபாடா மற்றொரு கோலை புகுத்தி கொலம்பிய அணியின் வெற்றியை உறுதி செய்தார்
ஆர்ஜன்டீன அணியில், ஐந்து முறை பல்லொன் டொர் விருதை வென்ற மெஸ்ஸியுடன் செர்ஜியோ அகுவேரோ மற்றும் ஏன்ஜல் டி மாரியா ஆகியோர் இணைந்ததோடு கொலம்பியாவில் ஜேம்ஸ் ரொட்ரிகஸ், ரடமர் பல்கோ மற்றும் ஜுவான் குவாட்ரடோ ஆகியோர் ஆடினர்.
போட்டியின் ஆரம்பம் வேகமாக இருந்தபோதும் கொலம்பிய அணி அதிகம் ஆதிக்கம் செலுத்தியது. மெஸ்ஸியின் முயற்சிகளை தடுப்பதில் அந்த அணி அதிக அவதானம் செலுத்தியது. எனினும் முதல் பாதி கோலின்றி முடிவுற்றது.
கோல் பெற்றவர்கள்
கொலம்பியா – ரொஜர் மார்டினஸ் 72 ‘, டுவான் சபாடா 87 ‘
வெனிசுவேலா எதிர் பெரு
கோப்பா அமெரிக்கா தொடரின் இரண்டாவது நாளில் நடைபெற்ற மற்றொரு போட்டியில் வெனிசுவேலா அணிக்கு எதிராக பெரு அடித்த இரு கோல்களும் நிராகரிக்கப்பட்ட நிலையில் A குழுவுக்கான ஆட்டம் சமநிலையில் முடிவுற்றது.
மக்காவு – இலங்கை மோதல் ரத்து
இலங்கை மற்றும் மக்காவு அணிகளுக்கு இடையில் நாளை (11) சுகததாஸ அரங்கில்…
கிறிஸ்டோபர் கோன்சலஸ் 11ஆவது நிமிடத்தில் போட்ட கோல் ஓப் சைட்டாக இருந்ததோடு ஜெப்பர்சன் பார்பன் இரண்டாவது பாதியில் புகுத்திய கோலும் இதே நிலையில் மறுக்கப்பட்டதால் பெரு ரசியர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
எனினும், 75 ஆவது நிமிடத்தில் வெனிசுவேலாவின் லுவிஸ் மாகோ சிவப்பு அட்டை பெற்று வெளியேறியதால் போட்டி பரபரப்பு அடைந்தது.
இந்த சமநிலையோடு A குழுவில் இந்த இரு அணிகளும் இரண்டாவது இடத்தில் நீடிப்பதோடு பொலிவிய அணியை 3-0 என வீழ்த்திய பிரேசில் முதலிடத்தில் உள்ளது.
>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<