சர்ச்சை கோலுக்கு மத்தியில் உருகுவேவுக்கு சவால் கொடுத்த ஜப்பான்

258

கோப்பா அமெரிக்கா கால்பந்து கிண்ண தொடரின் நடப்புச் சம்பியன் உருகுவே அணிக்கு எதிராக அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய வரவேற்பு அணியான ஜப்பான் C குழுவுக்கான போட்டியை 2-2 என்ற கோல் வித்தியாசத்தில் சமநிலை செய்தது.   

மெஸ்ஸியின் பெனால்டி மூலம் தோல்வியை தவிர்த்த ஆர்ஜன்டீனா

கோப்பா அமெரிக்கா கிண்ண கால்பந்து ………

எனினும், நடுவரின் தீர்ப்பு ஒன்று ஜப்பான் அணிக்கு பாதமாக அமைந்ததன் மூலம் உருகுவே அணிக்கு கோல் ஒன்று கிடைத்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த தொடரில் தனது இளம் அணி ஒன்றை களமிறக்கியிருக்கும் ஜப்பான் போட்டியின் 25 ஆவது நிமிடத்தில் கோஜி மியோசி செலுத்திய கோல் மூலம் முன்னிலை பெற்றது. எனினும், ஏழு நிமிடங்கள் கழித்து லுவிஸ் சுவாரெஸ் பெனால்டி ஒன்றின் மூலம் பதில் கோல் திருப்பியபோதும் வீடியோ நடுவர் உதவியுடன் பெறப்பட்ட அந்த முடிவு சர்ச்சையை ஏற்படுத்தியது.

பெனால்டிப் பெட்டிக்குள் ஜப்பான் பின்கள வீரர் நோமிச்சி யுடே பந்தை தடுக்க முயன்றபோது, பின்னால் வந்த எடிசன் கவானி கீழே விழுந்தார். அதனைத் தொடர்ந்து வீடியோ நடுவரின் உதவி பெறப்பட்ட நிலையில் உருகுவே அணிக்கு பெனால்டி உதைக்கான வாய்ப்பு வழங்கப்பட்டது ஜப்பான் அணிக்கு புதிராக இருந்தது.

எனினும், உருகுவே கோல்காப்பாளர் பெர்னாண்டோ முஸ்லேராவின் தவறை பயன்படுத்தி 59 ஆவது நிமிடத்தில் மியோசி மற்றொரு கோலை புகுத்தினார்.       

ஜப்பானை வீழ்த்தி கோப்பா அமெரிக்க தொடரை வெற்றியுடன் ஆரம்பித்த சிலி

வரவேற்பு அணியான ஜப்பானை 4-0 என்ற கோல் ………

ஏழு நிமிடங்கள் கழித்து 15 தடவைகள் கோப்பா அமெரிக்கா கிண்ணத்தை வென்றிருக்கும் உருகுவே சார்பில் ஜோஸ் கிம்மனஸ் தலையால் முட்டி பந்தை வலைக்குள் செலுத்தினார். இதனால் போட்டி தலா இரண்டு கோல்களுடன் சமனிலையில் முடிவுற்றது.

C குழுவில் 4 புள்ளிகளுடன் உருகுவே முதலிடத்தில் இருந்தபோதும் இந்தப் போட்டி சமநிலை பெற்றதால் அந்த அணி காலிறுதிக்கு முன்னேறுவதை இன்னும் உறுதி செய்ய முடியாமல் போனதோடு முதல் போட்டியில் சிலியிடம் தோற்ற ஜப்பான் அணி காலிறுதிக்கு முன்னேறுவதை பெரும்பாலும் இழந்துள்ளது.   

கோல் பெற்றவர்கள்

ஜப்பான் – கோஜி மியோசி 25′ 59′

உருகுவே – லுவிஸ் சுவாரெஸ் 32′ (பெனால்டி), ஜோஸ் கிம்மனஸ் 66’

>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<