ஆர்ஜன்டீனாவை வீழ்த்திய பிரேசில் கோப்பா அமெரிக்க இறுதி மோதலில்

618
©Getty Images

காப்ரியல் ஜேசுஸ் மற்றும் ரொபர்டோ பெர்மினோவின் கோல்களால் கோப்பா அமெரிக்க கிண்ண கால்பந்து தொடரின் அரையிறுதியில் ஆர்ஜன்டீனாவை 2-0 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்திய பிரேசில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. 

கோப்பா அமெரிக்க கிண்ண அரையிறுதியில் பலப்பரீட்சை நடாத்தவுள்ள ஆர்ஜன்டீனா, பிரேசில்

கோப்பா அமெரிக்க கிண்ண காலிறுதிப் ……

மினாஸ் கிரைசில் இன்று (03) நடைபெற்ற அரையிறுதியில் தோற்றதன் மூலம் ஆர்ஜன்டீனாவின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி தனது சர்வதேச போட்டிகளில் மூன்று இறுதிப் போட்டிகளில் ஆடியும் தனது தேசிய அணிக்காக பிரதான கிண்ணங்களை வெல்லாமல் நீடிக்கிறார். 

இதுவரை தனது சொந்த நாட்டில் நடைபெற்றிருக்கும் எல்லா கோப்பா அமெரிக்கா கிண்ணத்தையும் வென்றிருக்கும் பிரேசில், நேர்த்தியாக பந்தை பரிமாற்றியதன் மூலம் 19 ஆவது நிமிடத்தில் பெர்மினோ தாழ்வாக கடத்திய பந்தை பெற்ற ஜேசுஸ் முதல் கோலை புகுத்தினார்.  

எனினும் பாதி நேரத்தில் மெஸ்ஸி உதைத்த ப்ரீ கிக்கை செர்கியோ அகுவேரா தலையால் முட்டியபோது ஆர்ஜன்டீனாவுக்கு பதில் கோல் புகுத்த வாய்ப்பு கிட்டிய நிலையில் அந்தப் பந்தை பிரேசில் கோல்காப்பாளர் அலிசன் வெளியே தட்டிவிட்டார். 

பிரேசில் அணி முன்னிலை பெற்று இரண்டாவது பாதி ஆட்டம் ஆரம்பமான நிலையில் ஆர்ஜன்டீனா முதல் பாதியை விடவும் தனது ஆட்டத்தில் வேகம் காட்டியது. 66 ஆவது நிமிடத்தில் மெஸ்ஸின் உதையை அலிசன் மீண்டும் சிறப்பாக தடுத்தார்.

இலங்கை இளையோர் கால்பந்து அணிக்கான வீரர்கள் தேர்வு ஜூலை 10 ஆரம்பம்

இலங்கை 18 மற்றும் 19 வயதுகளுக்கு ……

இந்நிலையில் மீண்டும் செயற்பட்ட பிரேசில் 71 ஆவது நிடத்தில் பெர்மினோ மூலம் இரண்டாவது கோலை புகுத்தியது. 

பிரேசில் கடைசியாக 2007 ஆம் ஆண்டு கோப்பா அமெரிக்க கிண்ணத்தை வென்றதோடு ஆர்ஜன்டீனா அந்தக் கிண்ணத்தை முத்தமிட்டு 26 ஆண்டுகள் (1993) ஆகின்றன.

பிரேசில் அணி நடப்புச் சம்பியன் சிலி மற்றும் பெரு அணிகளுக்கு இடையில் இலங்கை நேரப்படி நாளை (04) நடைபெறும் அரையிறுதியில் வெற்றி பெறும் அணியுடன் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தவுள்ளது. 

கோப்பா அமெரிக்க கிண்ண இறுதிப் போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை (07) நடைபெறும்.     

கோல் பெற்றவர்கள் 

பிரேசில் –  காப்ரியல் ஜேசுஸ் 19′, ரொபர்டோ பெர்மினோ 71′ 

>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<