ஈகுவடோர் அணிக்கு எதிரான போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற சிலி அணி, இம்முறை இடம்பெறும் கோப்பா அமெரிக்க கிண்ண கால்பந்து தொடரில் தொடர்ச்சியாக தமது இரண்டாவது வெற்றியைப் பெற்று C குழுவில் முதல் இடத்தில் உள்ளது.
நடப்புச் சம்பியன் சிலி, ஏற்கனவே இடம்பெற்ற தமது முதல் போட்டியில் ஜப்பானை 4-0 என வெற்றி கொண்ட நிலையில், இலங்கை நேரப்படி இன்று இடம்பெற்ற போட்டியில் ஈகுவடோரை சந்தித்தது.
கோப்பா அமெரிக்க தொடரில் ஆசிய சம்பியன் கட்டார் சாகசம்
கோப்பா அமெரிக்கா கிண்ண கால்பந்து தொடரின் வரவேற்பு அணியான ஆசிய…
போட்டி ஆரம்பமாகி 8ஆவது நிமிடத்தில் சிலி அணி வீரர்களுக்கு கிடைத்த கோணர் உதையின்போது உள்வந்த பந்து தடுக்கப்பட்டு மீண்டும் வர, ஜோஸ் பெட்ரோ வேகமாக கோல் நோக்கி உதைந்த பந்து இடது பக்க கம்பத்தில் பட்டு கோலுக்குள் செல்ல சிலி அணிக்கு முதல் கோல் பதிவாகியது.
போட்யின் 25ஆவது நிமிடத்தில் ஈகுவடோர் வீரர் ஜெக்சன் மென்டஸ், சிலி கோல் காப்பாளர் கேப்ரியல் எரியஸ் மூலம் பெனால்டி எல்லையில் வைத்து முறையற்ற விதத்தில் வீழ்த்தப்பட்டார். இதனால் கிடைத்த பெனால்டி உதையை வெலன்சியா கோலாக்க ஆட்டம் சமநிலையடைந்தது.
இரண்டாவது பாதி தலா ஒரு கோலுடன் சமநிலையில் ஆரம்பமாக, போட்டியின் 51ஆவது நிமிடத்தில் சிலி முன்கள வீரர் அலெக்சிஸ் சென்செஸ் மூலம் அவ்வணி வெற்றி கோலைப் பெற்றது.
இந்த தோல்வியினால் தொடர்ந்து இரண்டாவது தோல்வியை சந்தித்த ஈகுவடோர் C குழுவில் நான்காம் இடத்தைப் பெற்றுள்ள அதேவேளை, அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை இழந்துள்ளது.
முழு நேரம்: சிலி 2 – 1 ஈகுவடோர்
கோல் பெற்றவர்கள்
- சிலி: ஜோஸ் பெட்ரோ 8’, அலெக்சிஸ் சென்செஸ் 51’
- ஈகுவடோர்: E வெலன்சியா 26’ (பெனால்டி)
>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<