கோப்பா அமெரிக்க நடப்புச் சம்பியன் சிலியை வீழ்த்திய உருகுவே

310
©Reuters

கோப்பா அமெரிக்க கிண்ண கால்பந்து தொடரின் நடப்புச் சம்பியன் சிலிக்கு எதிராக 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற உருகுவே அணி C குழுவில் முதலிடத்தைப் பிடித்ததோடு அந்தக் குழுவில் நடைபெற்ற ஜப்பான் – ஈகுவடோர் அணிகளுக்கு இடையிலான போட்டி சமநிலை பெற்றதால் இரு அணிகளும் காலிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தன. 

ශකීබ්ගේ තුන් ඉරියව් දස්කම් බංගලියන්ට ජය ගෙනෙයි!

මෙම වීඩියෝ පටය ශ්‍රී ලංකාව තුල දී පමණක් නැරඹීමට ………

பிரேசிலில் நடைபெற்று வரும் கோப்பா அமெரிக்க கிண்ண குழுநிலைப் போட்டிகள் இன்று (25) முடிவுற்றதோடு காலிறுதிப் போட்டிகள் வரும் வெள்ளிக்கிழமை (28) ஆரம்பமாகவுள்ளன. 

உருகுவே எதிர் சிலி

உருகுவே முன்கள வீரர் எடிசன் கவானி இழுபறியை முடிவுக்குக் கொண்டுவந்து கடைசி நேரத்தில் பெற்ற கோல் மூலமே கடந்த இரண்டு முறை தொடர்ச்சியாக கோப்பா அமெரிக்கா கிண்ணத்தை வென்ற சிலி அணியை உருகுவே வீரர்களால் வீழ்த்த முடிந்தது. 

போட்டியின் 82ஆவது நிமிடத்தில் ஜொனத்தன் ரொட்ரிகஸ் பரிமாற்றிய பந்தை பரிஸ் செயின்ட் ஜெர்மைனின் கவானி தலையால் முட்டி அபார கோல் பெற்றார்.   

எனினும், இந்த போட்டியில் சிறந்த ஆரம்பம் ஒன்றைப் பெற்ற சிலி அலெக்சிஸ் சான்செஸ் மற்றும் சார்லஸ் அரன்குவிஸ் மூலம் முதல் 10 நிமிடங்களில் கோல் முயற்சியில் ஈடுபட்டது. தொடர்ந்து சிலி முன்கள வீரர் எடவார்டோ வார்கஸ் தலையால் முட்டிய பந்தை கோல்காப்பாளர் பெர்னாண்டோ முஸ்லேரா நெருக்கடி இன்றி தடுத்தார்.  

ශකීබ්ගේ තුන් ඉරියව් දස්කම් බංගලියන්ට ජය ගෙනෙයි!

මෙම වීඩියෝ පටය ශ්‍රී ලංකාව තුල දී පමණක් නැරඹීමට ……….

இந்நிலையில் 19ஆவது நிமிடத்திலேயே உருகுவேவால் தனது முதல் கோல் முயற்சியில் ஈடுபட முடிந்தது. தொடர்ந்து லுயிஸ் சுவாரெஸ் மற்றும் டிகோ கோடினின் கோல் வாய்ப்புகள் பறிபோன நிலையில் முதல்பாதி ஆட்டம் இழுபறியுடன் முடிந்தது. 

இதன்படி உருகுவே அணி தனது காலிறுதியில் வரும் ஞாயிற்றுக்கிழமை பெருவை எதிர்கொள்ளவிருப்பதோடு C குழுவில் இரண்டாம் இடத்தைப் பிடித்த சிலி வரும் சனிக்கிழமை நடைபெறும் காலிறுதியில் கொலம்பியாவுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.       

கோல் பெற்றவர்கள் 

உருகுவே – எடிசன் கவானி 82′

ஜப்பான் எதிர் ஈகுவடோர்

காலிறுதிக்கு முன்னேறுவதற்கு கட்டாய வெற்றி ஒன்றை பெற வேண்டிய நெருக்கடியுடன் களமிறங்கிய ஜப்பான் மற்றும் ஈகுவடோர் அணிகள் போட்டியை சமநிலையை செய்து தம்மைத் தாமே தொடரில் இருந்து வெளியேற்றிக் கொண்டன. 

ශකීබ්ගේ තුන් ඉරියව් දස්කම් බංගලියන්ට ජය ගෙනෙයි!

මෙම වීඩියෝ පටය ශ්‍රී ලංකාව තුල දී පමණක් නැරඹීමට ………

இதனால் இன்றைய தினத்தில் போட்டியில் விளையாட முன்னரே பரகுவே அணிக்கு காலிறுதிக்கு முன்னேற முடிந்தது.   

போட்டியின் 15 ஆவது நிமிடத்தில் ஷோயா நகஜிமா கோல் புகுத்தி ஜப்பான் அணியை முன்னிலை பெறச் செய்தபோதும் முதல் பாதி முடிவுறுவதற்கு 10 நிமிடங்கள் இருக்கும்போது அன்ஜெல் மேனா ஈகுவடோர் சார்பில் பதில் கோல் திருப்பினார். 

போட்டி சமநிலையை நோக்கி நகரும் நிலையில் கடைசி நேரத்தில் ஜப்பானின் பதின்ம வயது வீரர் டகெபுசா குபோ பந்தை வலைக்குள் செலுத்தியபோதும் வீடியோ உதவி நடுவர் அதனை ஓப் சைட் என கண்டுபிடித்ததால் கோல் மறுக்கப்பட்டது.  

வரவேற்பு அணியாக கோப்பா அமெரிக்க தொடரில் பங்கேற்ற ஜப்பான் தனது இளம் வீரர்களையே இந்தத் தொடரில் கலந்துகொள்ளச் செய்தமை குறிப்பிடத்தக்கது.  

கோல் பெற்றவர்கள்

ஜப்பான் – ஷோயா நகஜிமா 15′

ஈகுவடோர் – அன்ஜெல் மேனா 35′

>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<