கோப்பா அமெரிக்கா கால்பந்து கிண்ணத் தொடரில் பிரேசில் அணியின் மூன்று கோல்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், அவ்வணி வெனிசுவேலாவுடனான போட்டியை சமநிலையில் முடித்துக் கொண்டதோடு பொலிவியாவுக்கு எதிரான போட்டியில் பெரு அணி 3-1 என வெற்றிபெற்றது.
கோப்பா அமெரிக்க கிண்ணத்தை வெற்றியுடன் ஆரம்பித்த பிரேசில்
பிலிப்பே கோட்டின்ஹோவின் இரட்டை …………
பிரேசில் எதிர் வெனிசுவேலா
கோப்பா அமெரிக்கா போட்டியை நடத்தும் பிரேசில் அணி மூன்று தடவைகள் பந்தை வலைக்குள் செலுத்தியபோதும் அவை நிராகரிக்கப்பட்ட நிலையில் A குழுவுக்காக இடம்பெற்ற வெனிசுவேலாவுக்கு எதிரான போட்டி 0-0 என சமநிலை பெற்றது.
முதல் பாதியின் கடைசி நேரத்தில் ரொபார்டோ பெர்மினொ பந்தை வலைக்குள் செலுத்தியபோதும் தவறிழைக்கப்பட்டதாக நடுவரால் அந்த கோல் நிராகரிக்கப்பட்டது. தொடர்ந்து மாற்று வீரர் காப்ரியல் ஜேசுஸ் வலைக்குள் செலுத்திய பந்து வீடியோ உதவி நடுவர் மூலம் ஓப் சைட் என உறுதி செய்யப்பட்டது.
கடைசியில், பிலிப்பே கோடின்ஹோ பிரேசிலுக்காக வெற்றி கோல் பெற்றதாக எதிர்பார்க்கப்பட்டபோது, மீண்டும் வீடியோ நடுவர் உதவியை பெற்றபோது அந்த கோலும் நிராகரிக்கப்பட்டது.
எவ்வாறாயினும் பிரேசில் அணி A குழுவில் ஒரு வெற்றி மற்றும் சமநிலையுடன் தொடர்ந்தும் முதலிடத்தில் உள்ளது.
இலங்கை வர மறுத்ததை எதிர்த்து கேலிக்கையாக கால்பந்து ஆடிய மக்காவு வீரர்கள்
இலங்கையில் நடைபெறவிருந்த பிஃபா உலகக் …….
பொலிவியா எதிர் பெரு
பொலிவியா அணி கடந்த ஐந்து போட்டிகளில் தனது முதல் கோலை பெற்றபோதும் கோப்பா அமெரிக்கா தொடரில் முதல் புள்ளியை பெறுவதற்கு அது போதுமாக அமையவில்லை. ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற A குழுவுக்கான இந்தப் போட்டியில் பின்னடைவில் இருந்து எழுச்சி பெற்ற பெரு அணி 3-1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றியீட்டியது.
கடைசியாக 1963 ஆம் ஆண்டு கோப்பா அமெரிக்கா கிண்ணத்தை வென்ற பொலிவியா, கடந்த மார்ச் மாதம் நிகரகுவா அணிக்கு எதிரான போட்டியை 2-2 என சமநிலை செய்தது தொடக்கம் கோல் பெறாத நிலையில் இந்த போட்டியின் 28 ஆவது நிமிடத்தில் கோல் புகுத்தி முன்னிலை பெற்றது.
வீடியோ தொழில்நுட்ப உதவியோடு கிடைத்த பெனால்டியை மார்சலஸ் மொரேனோ கோலாக மாற்றினார்.
ஜப்பானை வீழ்த்தி கோப்பா அமெரிக்க தொடரை வெற்றியுடன் ஆரம்பித்த சிலி
வரவேற்பு அணியான ஜப்பானை 4-0 என்ற கோல் ………..
பாதி நேரத்தின்போது போலோ குவேர்ரே பெரு அணி சார்பில் கோல் பெற்று கோல் எண்ணிக்கையை சமநிலை செய்ததோடு தொடர்ந்து இரண்டாவது பாதியின் 10 நிமிடங்கள் கடந்த நிலையில் ஜப்பர்சன் பார்பன் இரண்டாவது கோலை பெற்று பெருவை முன்னிலை பெறச் செய்தார்.
இரண்டாவது பாதி ஆட்டத்தில் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய பெரு அணிக்கு மேலும் கோல்கள் திருப்ப வாய்ப்பு இருந்தபோதும் பொலிவியா கோல்காப்பாளர் கார்லஸ் லாம்ப் அப்படியான பல சந்தர்ப்பங்களை தடுத்தார்.
எனினும், போட்டியின் மேலதிக நேரத்தில் மாற்று வீரர் எடிசன் பிளோரஸ் ஒரு பதில் தாக்குதல் ஆட்டத்தின் மூலம் பெருவுக்கு மூன்றாவது கோலை புகுத்தினார்.
கோல்பெற்றவர்கள்
பொலிவியா – மார்சலஸ் மொரேனோ 28’ (பெனால்டி)
பெரு – போலோ குவேர்ரே 45’, ஜப்பர்சன் பார்பன் 55’, எடிசன் பிளோரஸ் 90+6’
>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<