நெருக்கடிக்கு மத்தியில் காலிறுதிக்கு முன்னேறிய ஆர்ஜன்டீனா

474

ஆசிய சம்பியன் கட்டாரை 2-0 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்திய ஆர்ஜன்டீன அணி நெருக்கடிக்குப் பின்னர் கோப்பா அமெரிக்கத் தொடரின் காலிறுதிச் சுற்றுக்கு முன்னெற்றம் கண்டதோடு, பரகுவே அணியை 1-0 என வீழ்த்திய கொலம்பியா தோல்வியுறாத அணியாக B குழுவில் முதலிடத்தைப் பிடித்தது.

கோப்பா அமெரிக்கா காலிறுதியில் பிரேசில், வெனிசுவேலா

பெரு அணிக்கு எதிராக 5-0 என கோல் மழை ….

ஆர்ஜன்டீனா எதிர் கட்டார்

கொலம்பியாவிடம் தோல்வி அடைந்து பரகுவே அணியுடனான போட்டியை சமநிலை செய்த ஆர்ஜன்டீனா வரவேற்பு அணியான கட்டாரை வீழ்த்த வேண்டிய கட்டாயத்துடனேயே களமிறங்கியது.

எனினும், போட்டியின் நான்காவது நிமிடத்தில் கட்டாரின் வலுவான பாதுகாப்பு அரணை முறியடித்த லோட்டாரோ மார்டினஸ் 15 மீற்றர் துரத்தில் இருந்து பந்தை வலைக்குள் செலுத்தி ஆர்ஜன்டீனாவை முன்னிலை பெறச் செய்தார்.

முதல் பாதி ஆட்டத்தில் மார்டினஸ் மற்றும் செர்ஜியோ அகுவேரோ பல பொன்னான சந்தர்ப்பங்களை தவறவிட்டனர். எனினும் லியோனல் மெஸ்ஸியின் ஆர்ஜன்டீன அணி கடந்த போட்டிகளை விடவும் வேகமான ஆட்டத்தை இந்தப் போட்டியில் வெளிப்படுத்தியது.  

இந்நிலையில் போட்டியில் எட்டு நிமிடங்கள் எஞ்சியிருந்தபோது வேகமாக பந்தைக் கடத்திச் சென்ற அகுவேரோ கட்டார் கோல்காப்பாளரை விஞ்சி கோல் புகுத்தினார்.

PSG அணியிலிருந்து வெளியேறுகிறார் அல்வேஸ்

பெரு அணிக்கு எதிரான கோப்பா அமெரிக்கா ……..

இந்த வெற்றியுடன் B குழுவில் இரண்டாவது இடத்தை பிடித்த ஆர்ஜன்டீனா வரும் வெள்ளிக்கிழமை ரியோ டி ஜெனிரோவில் நடைபெறும் காலிறுதிப் போட்டியில் வெனிசுவேலாவை எதிர்கொள்ளவுள்ளது.

கோல் பெற்றவர்கள்

ஆர்ஜன்டீனா – லோட்டாரோ மார்டினஸ் 4′, செர்ஜியோ அகுவேரோ 82′

கொலம்பியா எதிர் பரகுவே

ஏற்கனவே காலிறுதிக்கு முன்னேற்றம் கண்ட கொலம்பிய அணி தனது இரண்டாம் நிலை அணியுடன் களமிறங்கி முதல் பாதியிலேயே கோல் ஒன்றை பெற்றதன் மூலம் பராகுவே அணியை வீழ்த்த முடிந்தது.

ஈகுவடோரை வீழ்த்தி இரண்டாவது வெற்றியைப் பெற்ற சிலி

ஈகுவடோர் அணிக்கு எதிரான போட்டியில் …….

மத்திய கள வீரர் குஸ்டாவோ கியுலர் பந்தை பரகுவே கோல்காப்பாளர் ரொபார்டோ பெர்னாண்டஸின் கால்களுக்கு அருகால் செலுத்தி முதல் கோலை புகுத்தினார். தொடர்ந்து லுவிஸ் டயஸ் கொலம்பியாவுக்காக இரண்டாவது கோலை பெற்றபோதும் வீடியோ உதவி நடுவர் மூலம் அந்த கோல் நிராகரிக்கப்பட்டது.

போட்டியின் கடைசி நிமிடங்களில் கொலம்பியாவுக்கு வழங்கப்பட்ட பெனால்டி ஒன்றும் தொழில்நுட்பத்தின் உதவியை பெற்ற நிலையில் நிராகரிக்கப்பட்டது.

கோல் பெற்றவர்கள்

கொலம்பியா – குஸ்டாவோ கியுலர 31′

>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<