கோபா அமெரிக்கா 2016 கால்பந்துத் தொடரில் நேற்று மூன்று லீக் போட்டிகள் நடைபெற்றன. அதில் பிரேசில்- ஈகுவடார் அணிகளுக்கு இடையிலான போட்டி சமநிலையில் முடிவுக்கு வந்தது.
கோபா அமெரிக்கா கால்பந்து தொடர் தொடங்கி நூறு ஆண்டுகள் ஆகிறது. ஆகவே, இதனை சிறப்பாகக் கொண்டாடும் வகையில் இந்த ஆண்டு “நூற்றாண்டு தொடர்” அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் பிரேசில்– ஈகுவடார் அணிகள் மோதின.
கோபா அமெரிக்கா கால்பந்தாட்டத் தொடர் 2016 இன்று ஆரம்பம்
ஆட்டம் முதலே இரண்டு அணிகளும் சிறப்பாக விளையாடின. இருந்தாலும் பிரேசில் வீரர்களின் ஆதிக்கமே ஓங்கியிருந்தது. இருந்தபோதிலும் இரண்டு அணிகளாலும் முதல் பாதி நேரத்தில் கோல் அடிக்க முடியவில்லை.
ஆட்டத்தின் 63ஆவது நிமிடத்தில் ஈகுவடார் அணியின் மில்லர் போலனோஸ் பிரேசில் அணி கோல்கீப்பர் நின்ற சைட் லைன் அருகில் இருந்து பந்தை அடித்தார். இந்தப் பந்தை பிரேசில் கோல் கீப்பர் பிடிக்க முயற்சி செய்கையில் பந்து கோல் லைனை தாண்டி உள்ளே சென்றது. ஆனால், நடுவர் கோல் கொடுக்க மறுத்துவிட்டார்.
ரீபிளேயில் மில்லர் சைட் லைனுக்கு வெளியில் சென்று பந்தை அடித்தது தெரியவந்தது. இதனால் ஈகுவடார் அணிக்கு கோல் வாய்ப்பு மறுக்கப்பட்டது. அதன்பின் இரண்டு அணிகளாலும் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் ஆட்டம் 0-0 என்ற அடிப்படையில் சமநிலையில் முடிவடைந்தது.
மற்றொரு ஆட்டத்தில் ஹெய்த்தி அணியை பேரு 1-0 என்ற ரீதியில் வென்றது. கொஸ்டாரிகா– பராகுவே அணிகளுக்கு இடையிலான போட்டியும் 0-0 என்ற அடிப்படையில் சமநிலையில் முடிவடைந்தது.
மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்