பொதுநலவாய விளையாட்டு விழாவிற்குரிய கிரிக்கெட் தொடருக்கான அணிகளை தெரிவு செய்யும் தகுதிகாண் போட்டிகளில் இன்று (18) ஸ்கொட்லாந்தினை எதிர்கொண்ட இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி 109 ஓட்டங்களால் இலகு வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றது.
>> பொதுநலவாய விளையாட்டு விழாவின் கிரிக்கெட் தகுதிகாண் தொடர் மலேசியாவில்
இங்கிலாந்தின் பர்மிங்கமில் நடைபெறவுள்ள 2022ஆம் ஆண்டுக்கான பொதுநலவாய விளையாட்டு விழாவில் மகளிர் T20 கிரிக்கெட் தொடரும் உள்ளடக்கப்பட்டுள்ள நிலையில், இந்த T20 தொடரில் பங்கெடுக்கும் எஞ்சிய அணியினை தெரிவு செய்வதற்கான தகுதிகாண் போட்டிகள் மலேசியாவில் நடைபெறுகின்றன.
இந்த தகுதிகாண் போட்டிகளில் இரண்டாவது மோதலாக அமைந்த இலங்கை – ஸ்கொட்லாந்து மகளிர் கிரிக்கெட் அணிகள் இடையிலான போட்டி கின்ராரா ஓவல் மைதானத்தில் தொடங்கியிருந்தது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்தது. போட்டியில் முதலில் துடுப்பாடிய இலங்கை மகளிர் அணிக்கு அதன் தலைவி சமரி அத்தபத்து அதிரடியான ஆரம்பத்தினை வழங்கியிருந்தார்.
வெறும் 45 பந்துகளினை மாத்திரமே எதிர்கொண்ட சமரி அத்தபத்து 13 பௌண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கலாக 86 ஓட்டங்களைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து சமரியின் துடுப்பாட்ட உதவியுடன் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 182 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
>> அர்ஜுன ரணதுங்கவின் பயிற்றுவிப்பில் களமிறங்கும் ஆசிய லயன்ஸ் அணி
இதேநேரம் ஸ்கொட்லாந்து மகளிர் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு சார்பில் கேத்தரின் பிரேசர், அப்தஹா மக்சூத் மற்றும் கேட்டி மெக்கில் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் சாய்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 183 ஓட்டங்களை அடைவதற்கு பதிலுக்கு துடுப்பாடிய ஸ்கொட்லாந்து அணி, தொடக்கத்தில் சிறந்த ஆரம்பத்தினைக் காட்டிய போதும் பின்னர் சரிவடையத் தொடங்கியது.
அதன்படி ஒரு கட்டத்தில் 60 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்ட ஸ்கொட்லாந்து மகளிர் கிரிக்கெட் அணி, இலங்கை வீராங்கனைகளின் பந்துவீச்சுக்கு முகம் கொடுக்க முடியாமல் 12.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 73 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.
ஸ்கொட்லாந்து மகளிர் அணியின் துடுப்பாட்டம் சார்பில் எல்லன் வொட்சன் 30 ஓட்டங்கள் பெற்று அதிகபட்ச ஓட்டங்களைப் பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மறுமுனையில் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு சார்பில் உதேசிகா பிரபோதினி, அமா காஞ்சனா மற்றும் சச்சினி நிசன்சல ஆகியோர் தலா 2 விக்கெட் வீதம் சாய்த்து தமது தரப்பு வெற்றியினை உறுதி செய்தனர்.
இவ்வெற்றியுடன் இந்த தகுதிகாண் தொடரினை சிறப்பாக ஆரம்பித்துள்ள இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி, தமது அடுத்த போட்டியில் கென்ய அணியினை எதிர்வரும் வியாழக்கிழமை (20) எதிர்கொள்கின்றது.
போட்டியின் சுருக்கம்
இலங்கை மகளிர் – 182/4 (20) சமரி அத்தபத்து 86, கேத்தரின் பிரேசர் 27/1
ஸ்கொட்லாந்து மகளிர் – 73 (12.1) சச்சினி நிஸன்சல 10/2, அமா காஞ்சனா 20/2, உதேசிகா பிரபோதினி 25/2
முடிவு – இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி 109 ஓட்டங்களால் வெற்றி
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Takudzwanashe Kaitano | b Jeffery Vandersay | 26 | 28 | 2 | 1 | 92.86 |
Regis Chakabva | st Kusal Mendis b Jeffery Vandersay | 47 | 50 | 5 | 0 | 94.00 |
Craig Ervine | b Maheesh Theekshana | 91 | 98 | 10 | 0 | 92.86 |
Sean Williams | st Kusal Mendis b Jeffery Vandersay | 48 | 56 | 3 | 0 | 85.71 |
Wesly Madhevere | b Chamika Karunaratne | 1 | 7 | 0 | 0 | 14.29 |
Sikandar Raza | c Dimuth Karunaratne b Praveen Jayawickrama | 56 | 46 | 4 | 1 | 121.74 |
Ryan Burl | run out (Chamika Gunasekara) | 19 | 15 | 2 | 0 | 126.67 |
Wellington Masakadza | c Nuwan Pradeep b Dushmantha Chameera | 0 | 1 | 0 | 0 | 0.00 |
Blessing Muzarabani | not out | 0 | 1 | 0 | 0 | 0.00 |
Extras | 14 (b 3 , lb 6 , nb 2, w 3, pen 0) |
Total | 302/8 (50 Overs, RR: 6.04) |
Fall of Wickets | 1-59 (9.5) Takudzwanashe Kaitano, 2-90 (15.4) Regis Chakabva, 3-196 (32.6) Sean Williams, 4-205 (35.3) Wesly Madhevere, 5-256 (43.5) Craig Ervine, 6-297 (48.6) Ryan Burl, 7-298 (49.2) Wellington Masakadza, 8-302 (49.6) Sikandar Raza, |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Nuwan Pradeep | 10 | 0 | 74 | 2 | 7.40 | |
Dushmantha Chameera | 9 | 0 | 47 | 0 | 5.22 | |
Dasun Shanaka | 2 | 0 | 14 | 0 | 7.00 | |
Jeffery Vandersay | 9 | 0 | 51 | 3 | 5.67 | |
Maheesh Theekshana | 10 | 0 | 49 | 1 | 4.90 | |
Chamika Karunaratne | 6 | 0 | 24 | 1 | 4.00 | |
Kamindu Mendis | 2 | 0 | 19 | 0 | 9.50 | |
Charith Asalanka | 2 | 0 | 15 | 0 | 7.50 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Pathum Nissanka | c Regis Chakabva b Blessing Muzarabani | 16 | 24 | 3 | 0 | 66.67 |
Kusal Mendis | b Tendai Chatara | 7 | 9 | 1 | 0 | 77.78 |
Kamindu Mendis | c Craig Ervine b Richard Ngarava | 57 | 82 | 4 | 0 | 69.51 |
Dinesh Chandimal | c Sikandar Raza b Brian Mudzinganyama | 2 | 6 | 0 | 0 | 33.33 |
Charith Asalanka | b Wesly Madhevere | 23 | 21 | 2 | 1 | 109.52 |
Dasun Shanaka | c Sikandar Raza b Tendai Chatara | 102 | 94 | 7 | 4 | 108.51 |
Chamika Karunaratne | run out (Sean Williams) | 34 | 38 | 0 | 0 | 89.47 |
Dushmantha Chameera | c Wellington Masakadza b Tendai Chatara | 13 | 12 | 0 | 0 | 108.33 |
Jeffery Vandersay | c Regis Chakabva b Blessing Muzarabani | 4 | 7 | 0 | 0 | 57.14 |
Maheesh Theekshana | not out | 4 | 4 | 0 | 0 | 100.00 |
Nuwan Pradeep | not out | 5 | 2 | 1 | 0 | 250.00 |
Extras | 13 (b 0 , lb 5 , nb 1, w 7, pen 0) |
Total | 280/9 (50 Overs, RR: 5.6) |
Fall of Wickets | 1-20 (4.5) Kusal Mendis, 2-25 (5.5) Pathum Nissanka, 3-31 (7.5) Dinesh Chandimal, 4-63 (14.3) Charith Asalanka, 5-181 (34.3) Kamindu Mendis, 6-247 (44.4) Dasun Shanaka, 7-266 (47.1) Chamika Karunaratne, 8-268 (48.1) Dushmantha Chameera, 9-273 (49.2) Jeffery Vandersay, |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Tendai Chatara | 10 | 1 | 52 | 3 | 5.20 | |
Blessing Muzarabani | 10 | 0 | 56 | 3 | 5.60 | |
Wesly Madhevere | 4 | 0 | 30 | 1 | 7.50 | |
Richard Ngarava | 10 | 1 | 41 | 1 | 4.10 | |
Wellington Masakadza | 8 | 0 | 34 | 0 | 4.25 | |
Sean Williams | 6 | 0 | 48 | 0 | 8.00 | |
Ryan Burl | 2 | 0 | 14 | 0 | 7.00 |