Home Tamil மூன்றாவது தொடர் வெற்றியினைப் பதிவு செய்த இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி

மூன்றாவது தொடர் வெற்றியினைப் பதிவு செய்த இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி

372
Sri Lanka Women's

2022ஆம் ஆண்டுக்கான பொதுநலவாய விளையாட்டு விழாவில் இடம்பெறவுள்ள மகளிர் T20 தொடரில் பங்கெடுக்கும் எஞ்சிய அணியினை தெரிவு செய்வதற்காக, ஒழுங்கு செய்யப்பட்டுள்ள தகுதிகாண் கிரிக்கெட் தொடரில் இன்று (22) மலேசியாவினை எதிர்கொண்ட இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி அதில் 93 ஓட்டங்களால் இலகு வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றது.

>> கென்ய மகளிர் கிரிக்கெட் அணியினை இலகுவாக வீழ்த்திய இலங்கை

மேலும் இந்த வெற்றி இலங்கை மகளிர் அணிக்கு இந்த தகுதிகாண் தொடரில் கிடைத்த மூன்றாவது தொடர்ச்சியான வெற்றியாக அமைவதுடன், இந்த வெற்றியுடன் இலங்கை பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளுக்கு தெரிவாகுவதற்கான தமது வாய்ப்பினையும் அதிகரித்திருக்கின்றது.

இலங்கை – மலேசியா மகளிர் கிரிக்கெட் அணிகள் மோதியிருந்த போட்டியானது கோலாலம்பூரில் ஆரம்பமாகியது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மலேசிய வீராங்கனைகள் முதலில் இலங்கையினை துடுப்பாடப் பணித்திருந்தனர்.

அதன்படி போட்டியில் முதலில் துடுப்பாடிய இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி ஹர்சித மாதவி மற்றும் நிலக்ஷி சில்வா ஆகியோரின் அதிரடியோடு 20 ஓவர்கள் நிறைவில், 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 175 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் துடுப்பாட்டம் சார்பில் அரைச்சதம் விளாசிய ஹர்சித மாதவி 42 பந்துகளில் 10 பௌண்டரிகள் அடங்கலாக 65 ஓட்டங்களைப் பெற்றிருக்க, நிலக்ஷி சில்வா 31 பந்துகளில் 7 பௌண்டரிகள் அடங்கலாக 49 ஓட்டங்களை எடுத்திருந்தார்.

>> கென்ய மகளிர் கிரிக்கெட் அணியினை இலகுவாக வீழ்த்திய இலங்கை

மறுமுனையில் மலேசிய அணியின் பந்துவீச்சில் அதன் தலைவி வினிபிரட் துரைசிங்கம், நிக் அடெய்லா மற்றும் நூர் டானியா சுஹாதா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் சாய்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்கினை அடைவதற்கு பதிலுக்கு துடுப்பாடிய மலேசிய மகளிர் கிரிக்கெட் அணி, மந்த கதியிலான துடுப்பாட்டத்தினை வெளிப்படுத்தியிருந்ததோடு 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 87 ஓட்டங்களை மாத்திரமே எடுத்து தோல்வியினைத் தழுவியது.

மலேசிய அணியின் துடுப்பாட்டத்தில் வினிபிரட் துரைசிங்கம் 42 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் நிற்க, இலங்கை வீராங்கனைகளில் அனுர ரணசிங்க மற்றும் சுகந்திகா குமாரி ஆகியோர் தலா 2 விக்கெட் வீதம் சாய்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இப்போட்டியின் வெற்றியினை அடுத்து இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி, இந்த தகுதிகாண் போட்டிகளில் இறுதியாக எதிர்வரும் திங்கட்கிழமை (24) பங்களாதேஷினை எதிர்கொள்ளவிருக்கின்றது.

போட்டியின் சுருக்கம்

இலங்கை மகளிர் – 175/5 (20) ஹர்சித மாதவி 65*, நிலக்ஷி சில்வா 49*, நூர் டானியா சுஹாதா 30/1

மலேசிய மகளிர் – 82/7 (20) வினிபிரட் துரைசிங்கம் 42, சுகந்திகா குமாரி 12/2, அனுர ரணசிங்க 14/2

முடிவு – இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி 93 ஓட்டங்களால் வெற்றி

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<


Result


Sri Lanka Women
175/3 (20)

Malaysia Women
82/7 (20)

Batsmen R B 4s 6s SR
Vishmi Rajapaksha c Mas Elysa Zulkifl b Winifred Duraisingam 9 10 1 0 90.00
Chamari Athapaththu c Mas Elysa Zulkifl b Nik Nur Atiela Nik Din 30 17 7 0 176.47
Hasini Perera lbw b N Abedul Samad 12 21 1 0 57.14
Harshitha Madavi not out 65 42 10 0 154.76
Nilakshi de Silva not out 49 31 7 0 158.06


Extras 10 (b 0 , lb 1 , nb 1, w 8, pen 0)
Total 175/3 (20 Overs, RR: 8.75)
Fall of Wickets 1-22 (2.4) Vishmi Rajapaksha, 2-40 (4.6) Chamari Athapaththu, 3-88 (12.2) Hasini Perera,

Bowling O M R W Econ
Winifred Duraisingam 4 0 30 1 7.50
Ainna Hamizah Hasim 1 0 13 0 13.00
Mas Elysa Zulkifl 4 0 30 0 7.50
Nik Nur Atiela Nik Din 2 0 21 1 10.50
Nur Dania Syuhada Abedul Samad 4 0 25 1 6.25
Arianna Natasya Benn Rakquidean 3 0 28 0 9.33
Wan Nor Zulaika Sofea Wan Mohd 2 0 27 0 13.50


Batsmen R B 4s 6s SR
Winifred Duraisingam not out 42 54 4 0 77.78
Wan Julia Wan Mhd Rosli b Sugandika Kumari 0 1 0 0 0.00
Mas Elysa Zulkifl c Ama Kanchana b Sugandika Kumari 4 5 1 0 80.00
Ainna Hamizah Hasim b Oshadi Ranasinghe 9 27 0 0 33.33
Arianna Natasya Benn Rakquidean c Sachini Nisansala b Oshadi Ranasinghe 10 15 1 0 66.67
Intan Jamahidayu Jaafar run out (Sachini Nisansala) 6 14 0 0 42.86
Wan Nor Zulaika Sofea Wan Mohd run out (Anushka Sanjeewani) 1 3 0 0 33.33
Dhanusri Muhunan run out (Chamari Athapaththu) 0 2 0 0 0.00
Shasa Azmi not out 0 0 0 0 0.00


Extras 10 (b 0 , lb 3 , nb 1, w 6, pen 0)
Total 82/7 (20 Overs, RR: 4.1)
Fall of Wickets 1-5 (1.1) Wan Julia Wan Mhd Rosli, 2-10 (1.6) Mas Elysa Zulkifl, 3-34 (9.5) Ainna Hamizah Hasim, 4-53 (13.4) Arianna Natasya Benn Rakquidean, 5-68 (17.4) Intan Jamahidayu Jaafar, 6-71 (18.6) Wan Nor Zulaika Sofea Wan Mohd, 7-78 (19.5) Dhanusri Muhunan,

Bowling O M R W Econ
Tharika Sewwandi 4 0 14 0 3.50
Sugandika Kumari 4 1 12 2 3.00
Ama Kanchana 4 0 25 0 6.25
Sachini Nisansala 4 0 14 0 3.50
Oshadi Ranasinghe 4 0 14 2 3.50