100 மீற்றர் ஓட்டப்பந்தயத்தின் அரையிறுதிக்கு முன்னேறினார் யுபுன்!

Commonwealth Games 2022

206

இங்கிலாந்தின் பேர்மிங்ஹமில் நடைபெற்றுவரும் பொதுநலவாய விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தின் முதல் சுற்றில் இலங்கை வீரர் யுபுன் அபேகோன் முதலிடத்தை பிடித்துள்ளார்.

இலங்கையின் சார்பில் அதீத எதிர்பார்ப்புமிக்க வீரராக இம்முறை பொதுநலவாய விளையாட்டு விழாவில் யுபுன் அபேகோன் பங்கேற்றுள்ளார்.

இறுதிப்போட்டி வாய்ப்பை தவறவிட்ட கங்கா!

இந்தநிலையில் இன்று (02) ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப்பந்தயத்தின் முதல் சுற்று 10 கட்டங்களாக நடைபெற்றது. இதில் முதல் சுற்றின் 6வது கட்டத்தில் போட்டியிட்ட யுபுன் அபேகோன் போட்டித்தூரத்தை 10.06 செக்கன்களில் நிறைவுசெய்து முதலிடத்தை பிடித்துக்கொண்டார்.

அதேநேரம் காற்றின் +1.1 கணிக்கப்பட்டிருந்த நிலையில், 10.06 செக்கன்களில் போட்டித்தூரத்தை நிறைவுசெய்த யுபுன் அபேகோன் ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப்பந்தயத்தின் அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ளார்.

இதேவேளை, ஒட்டுமொத்தமாக 70 வீரர்கள் முதல் சுற்றில் பங்கேற்றிருந்த நிலையில், குறைந்த நேரத்தில் போட்டித்தூரத்தை கடந்தவர்கள் பட்டியலில் முதலிடத்தையும் இவர் தக்கவைத்துள்ளார். எனவே, யுபுன் அபேகோன் 100 மீற்றர் ஓட்டப்பந்தயத்தில் இலங்கைக்கு பதக்கம் வென்றுக்கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

>> மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க <<