இங்கிலாந்து – இலங்கை டெஸ்ட்: தொலைக்காட்சி வர்ணனையாளர்கள், போட்டி அதிகாரிகள் விபரம்

557

இங்கிலாந்து – இலங்கை அணிகள் இடையிலான டெஸ்ட் தொடரின் போது கடமையாற்றவுள்ள தொலைக்காட்சி வர்ணனையாளர்கள் குழாம், போட்டி அதிகாரிகள் (நடுவர்கள், மத்தியஸ்தர்கள்) குழாம் என்பன அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

ஐ.சி.சி. இன் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பிற்காக இலங்கை – இங்கிலாந்து அணிகள் மோதும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் எதிர்வரும் வியாழக்கிழமை (14) ஆரம்பமாகின்றது.  

>> உபாதைகளால் தள்ளாடும் இலங்கை கிரிக்கெட் அணி

இந்த டெஸ்ட் தொடருக்காக இலங்கை – இங்கிலாந்து ஆகிய இரண்டு அணிகளும் உயிர் பாதுகாப்பு வலயத்தில் தயாராகி வருகின்ற நிலையிலேயே, இந்த தொடருக்கான தொலைக்காட்சி வர்ணனையாளர் குழாம், போட்டி அதிகாரிகள் குழாம் என்பன அறிவிக்கப்பட்டிருக்கின்றன. 

அதன்படி, தொலைக்காட்சி வர்ணனையாளர்கள் குழாத்தில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சகலதுறை வீரர்களில் ஒருவரான ரசல் அர்னோல்ட் இடம்பெற்றிருக்கின்றார். அர்னோல்ட் தவிர, இலங்கையின் பிரபல்யமிக்க கிரிக்கெட் வர்ணனையாளர்களில் ஒருவரான ரொஷான் அபேசிங்கவும் இலங்கை – இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் பணிபுரியவிருக்கின்றார்.   

அதேநேரம், நியூசிலாந்தின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சைமன் டோல் இங்கிலாந்தின் முன்னாள் வீரர்கள் மார்க் பௌச்சர் மற்றும் ஒவைஸ் சாஹ் ஆகியோரும் இந்த தொலைக்காட்சி வர்ணனையாளர் குழாத்திற்குள் அடங்குகின்றனர். 

>> இலங்கை 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணிக்கு புதிய பயிற்சியாளர்

அதேநேரம், போட்டி அதிகாரிகள் குழாத்தினை நோக்கும் போது சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பிரபல்யமான போட்டி நடுவராக இருக்கும்  குமார் தர்மசேன, போட்டி மத்தியஸ்தர் ரஞ்சன் மடுகல்ல ஆகியோர் இலங்கை – இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் கடமைபுரியவுள்ளனர்.

தொலைக்காட்சி வர்ணனையாளர்கள் குழாம் – ரசல் அர்னோல்ட், ரொஷான்  அபேசிங்க, சைமன் டோல், மார்க் பௌச்சர், ஒவைஸ் சாஹ்

போட்டி மத்தியஸ்தர் – ரஞ்சன் மடுகல்ல, கிரஹம் லப்ரோய் (மேலதிக போட்டி மத்தியஸ்தர்)

போட்டி நடுவர்கள் – குமார் தர்மசேன, ருச்சிர பல்லியகுருகே, லிண்டன் ஹனிபல் (தொலைக்காட்சி நடுவர்), 

மேலதிக போட்டி நடுவர்கள் – ரவிந்திர விமலசிறி, ப்ரகீத் ரம்புக்வெல

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<