லோர்ட்ஸ் கிரிக்கெட் கழகத்தை (MCC) தலைமையகமாகக் கொண்ட உலக கிரிக்கெட் சங்கத்தின் (MCC’s World Cricket committee) புதிய உறுப்பினராக அவுஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் ஷேர்ன் வோர்ன் இணைக்கப்பட்டுள்ளார்.
கிரிக்கெட் சட்டங்கள் மற்றும் கிரிக்கெட்டின் கன்னியத்தை காப்பதற்காக முன்னாள் வீரர்கள் மற்றும் நடுவர்களை உள்ளடக்கிய உலக கிரிக்கெட் சங்கம் கடந்த 2006ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டு, செயற்பட்டு வருகின்றது.
அவுஸ்திரேலியாவை இலகுவாக வீழ்த்தியது பாகிஸ்தான்
பாகிஸ்தான் மற்றும் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான முதலாவது ….
இந்தக் குழுவின் உறுப்பினராக கடந்த 2012ம் ஆண்டு இணைந்த அவுஸ்திரேலியாவின் 49 வயதான முன்னாள் வீரர் ரொட் மார்ஷ் பதவி விலகியதைத் தொடர்ந்து, அவரின் இடத்துக்கு ஷேர்ன் வோர்ன் நியமிக்கப்பட்டுள்ளார்.
உலக கிரிக்கெட் சங்கத்தின் உறுப்பினராக இணைவது குறித்து ஷேர்ன் வோர்ன் கருத்து வெளியிடுகையில்,
“உலக கிரிக்கெட் சங்கத்தின் உறுப்பினராக செயற்படுவதற்கு என்னை அழைத்தமையை பெருமையாக கருதுகிறேன். இந்தக் காலப்பகுதியானது கிரிக்கெட்டில் எனக்கு கிடைத்த மிக உற்சாகமான காலப்பகுதியாகும். இந்த வாய்ப்பானது எனது கருத்துகளையும், விவாதங்களையும் முன்வைக்கக்கூடிய சிறந்த வாய்ப்பாகும். அதனால், எனது பங்களிப்பை வழங்குவதற்கு எதிர்பார்த்துள்ளேன்” என்றார்.
ஷேர்ன் வோர்ன் 1992-2007ம் ஆண்டு வரை சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடியுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 700 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் வீரர் இவராவார். அத்துடன் 145 டெஸ்ட் போட்டிகளில் 708 விக்கெட்டுகளை வீழ்த்தி, உலகின் இரண்டாவது அதிகூடிய டெஸ்ட் விக்கெட்டுகளை கைப்பற்றியவர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் அரங்கிற்கு திடீர் ஓய்வை அறிவித்த பிராவோ
மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரும் ….
இதேவேளை, MCC உலக கிரிக்கெட் சங்கத்தின் தலைவரான மைக் கெட்டிங், ஷேர்ன் வோர்னின் வருகை தொடர்பில் குறிப்பிடுகையில்,
“சர்வதேச கிரிக்கெட்டில் ஷேர்ன் வோர்ன் மிகச் சிறந்த வீரர் என்பதுடன், அதிக அனுபவம் வாய்ந்த வீரரும் ஆவார். கிரிக்கெட்டின் தனித்துவத்தை பேணுவதற்கும், புதிய மாற்றங்களை ஏற்படுத்துவதற்கும் அவரது உள்ளார்ந்த சிந்தனைகள் எமக்கு உதவியாக இருக்கும்” என தெரிவித்தார்.
MCC உலக கிரிக்கெட் சங்கம் வருடத்துக்கு இரண்டு முறை கூடும் என்பதுடன், இறுதியாக புதிய சிந்தனையாக பகலிரவு டெஸ்ட் மற்றும் துடுப்பாட்ட மட்டையின் அளவு கட்டுப்பாடு என்ற மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. உலக கிரிக்கெட் சங்கத்தில் இலங்கையைச் சேர்ந்த முன்னாள் வீரர் குமார் சங்கக்கார மற்றும் நடுவர் குமார் தர்மசேன ஆகியோர் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<