Home Tamil கொழும்பு அணியை வீழ்த்தி பிளே-ஓஃப் சுற்றுக்கு முன்னேறியது கோல் டைட்டன்ஸ்!

கொழும்பு அணியை வீழ்த்தி பிளே-ஓஃப் சுற்றுக்கு முன்னேறியது கோல் டைட்டன்ஸ்!

Lanka Premier League 2023

327
Lanka Premier League 2023

கொழும்பு ஸ்ரைக்கர்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற LPL தொடரின் இறுதி லீக் போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவுசெய்த கோல் டைட்டன்ஸ் அணி பிளே-ஓஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற கோல் டைட்ட்ஸ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. குறிப்பாக பிளே-ஓஃப் சுற்றுக்கு முன்னேறும் நோக்குடன் இரண்டு அணிகளும் களமிறங்கின.

>>ஜூலை மாதத்துக்கான ஐசிசியின் சிறந்த வீரராக கிரிஸ் வோக்ஸ்

கோல் டைட்டன்ஸ் அணி கடைசியாக நடைபெற்ற தங்களுடைய லீக் போட்டியில் ஜப்னா கிங்ஸ் அணியை 89 ஓட்டங்களுக்கு கட்டுப்படுத்தி இந்தப் போட்டிக்கு திரும்பியிருந்ததுடன், இந்தப் போட்டியிலும் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்தியது.

அணியை பிளே-ஓஃப் சுற்றுக்கு அழைத்துச்செல்வதற்கான வாய்ப்பினை மொத்தமாக தவறவிடும் வகையில் கொழும்பு அணியின் துடுப்பாட்டம் அமைய, கோல் அணியின் பந்துவீச்சாளர்கள் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்தினர்.

பாபர் அஷாம் மற்றும் பெதும் நிஸ்ஸங்க ஆகியோரின் விக்கெட்டுகளை லஹிரு குமார வேகத்தால் சரிக்க, மறுமுனையில் டெப்ரைஷ் சம்ஷி மத்தியவரிசையை வலுவிழக்க செய்தார். தொடர்ச்சியாக விக்கெட்டுகளை பறிகொடுத்த கொழும்பு அணி LPL வரலாற்றில் இரண்டாவது குறைந்த ஓட்ட எண்ணிக்கையை பதிவுசெய்தது.

டெப்ரைஷ் சம்ஷி தன்னுடைய 4 ஓவர்களில் 20 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை சாய்க்க, மறுமுனையில் சீகுகே பிரசன்ன 3 ஓவர்களில் 14 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை சாய்த்தார். இவர்களின் இந்த பந்துவீச்சின் காரணமாக கொழும்பு அணி 74 ஓட்டங்களுக்கு தங்களுடைய சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

LPL வரலாற்றை பொருத்தவரை கடந்த 2021ம் ஆண்டு ஜப்னா கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தம்புள்ள அணி 69 ஓட்டங்களை பதிவுசெய்திருந்தது. அதற்கு அடுத்தப்படியாக இன்று கொழும்பு ஸ்ரைக்கர்ஸ் பெற்ற ஓட்ட எண்ணிக்கை குறைந்த ஓட்ட எண்ணிக்கையாக பதிவாகியுள்ளது.

பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய கோல் டைட்டன்ஸ் அணி ஆரம்பத்தில் 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பவர்-பிளே ஓவர்கள் இடையில் 19 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போதும், லசித் குரூஸ்புள்ளே அதிரடியாக ஆடி அணியை வெற்றிக்கு அழைத்துச்சென்றார்.

>>WATCH – பல மாற்றங்களுடன் பலமான கண்டி அணியை வீழ்த்திய தம்புள்ள ஓரா | LPL 2023

குறிப்பாக 11 ஓவர்களுக்குள் போட்டியை வெற்றிக்கொண்டால் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்துக்கு கோல் அணியால் தகுதிபெறமுடியும் என்ற நிலையில், 8.3 ஓவர்களில் கோல் அணி 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.

இதில் அதிகபட்சமாக லசித் குரூஸ்புள்ளே 25 பந்துகளில் 42 ஓட்டங்களை விளாசியதுடன், சகீப் அல் ஹஸன் 17 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். எனவே இரண்டாவது இடத்துக்கு முன்னேறி முதலாவது குவாலிபையர் போட்டியில் கோல் டைட்டன்ஸ் அணி, தம்புள்ள ஓரா அணியை எதிர்கொள்ளவுள்ளதுடன், பி லவ் கண்டி மற்றும் ஜப்னா கிங்ஸ் ஆகிய அணிகள் எலிமினேட்டர் போட்டியில் விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Result


Colombo Strikers
74/10 (15.4)

Galle Titans
75/2 (8.3)

Batsmen R B 4s 6s SR
Pathum Nissanka b Lahiru Kumara 2 4 0 0 50.00
Babar Azam b Lahiru Kumara 6 12 1 0 50.00
Lahiru Udara b Tabraiz Shamsi 14 16 2 0 87.50
Nipun Dhananjaya lbw b Tabraiz Shamsi 13 9 2 0 144.44
Nuwanidu Fernando b Tabraiz Shamsi 14 11 1 0 127.27
Mohammad Nawaz c Liton Das b Tabraiz Shamsi 11 15 1 0 73.33
Iftikhar Ahmed b Shakib Al Hasan 5 16 0 0 31.25
Chamika Karunaratne b Seekkuge Prasanna 2 7 0 0 28.57
Shoriful Islam b Seekkuge Prasanna 0 1 0 0 0.00
Jeffrey Vandersay  lbw b Seekkuge Prasanna 0 1 0 0 0.00
Matheesha Pathirana not out 0 2 0 0 0.00


Extras 7 (b 0 , lb 2 , nb 0, w 5, pen 0)
Total 74/10 (15.4 Overs, RR: 4.72)
Bowling O M R W Econ
Kasun Rajitha 2 0 10 0 5.00
Lahiru Kumara 2 1 9 2 4.50
Lahiru Samarakoon 1 0 11 0 11.00
Shakib Al Hasan 3.4 0 8 1 2.35
Tabraiz Shamsi 4 0 20 4 5.00
Seekkuge Prasanna 3 0 14 3 4.67


Batsmen R B 4s 6s SR
Bhanuka Rajapaksa st Lahiru Udara b Iftikhar Ahmed 6 7 1 0 85.71
Lasith Croospulle not out 42 25 4 3 168.00
Liton Das c Nuwanidu Fernando b Jeffrey Vandersay  1 4 0 0 25.00
Shakib Al Hasan not out 17 15 2 0 113.33


Extras 9 (b 0 , lb 0 , nb 0, w 9, pen 0)
Total 75/2 (8.3 Overs, RR: 8.82)
Bowling O M R W Econ
Shoriful Islam 1 0 7 0 7.00
Iftikhar Ahmed 3 0 26 1 8.67
Mohammad Nawaz 1 0 6 0 6.00
Jeffrey Vandersay  3 1 18 1 6.00
Matheesha Pathirana 0.3 0 18 0 60.00



>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<