Home Tamil பாபரின் சதத்தோடு கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் அபார வெற்றி

பாபரின் சதத்தோடு கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் அபார வெற்றி

238
LPL @ Kandy (5th Aug 2023)

கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் மற்றும் கோல் டைடன்ஸ் அணிகள் இடையிலான லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரின் 10ஆவது போட்டியில் கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் அணியானது  7 விக்கெட்டுக்களால் வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றது.

>>உலகக் கிண்ணத்திற்கான அவுஸ்திரேலிய ஆரம்ப குழாம் அறிவிப்பு!

கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் மற்றும் கோல் டைடன்ஸ் அணிகள் மோதிய போட்டி முன்னதாக கண்டி பல்லேகல மைதானத்தில் ஆரம்பமாகியிருந்தது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் அணி முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை கோல் டைடன்ஸ் அணிக்கு வழங்கியிருந்தது.

இதன்படி போட்டியில் முதலில் துடுப்பாடிய கோல் டைடன்ஸ் அணியானது டிம் செய்பார்ட் மற்றும் ஷெவோன் டேனியல் ஆகியோரது அதிரடியான ஆட்டங்களோடு 20 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுக்களை இழந்து 188 ஓட்டங்கள் எடுத்தது.

இதில் அரைச்சதம் பூர்த்தி செய்த டிம் செய்பார்ட் 35 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 4 பெளண்டரிகள் அடங்கலாக 54 ஓட்டங்கள் பெற்றிருக்க, ஷெவோன் டேனியல் 31 பந்துகளில் 2 சிக்ஸர்கள் 5  அடங்கலாக 49 ஓட்டங்கள் பெற்றிருந்தார்.

கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் அணியின் பந்துவீச்சில் நஷீம் சாஹ், ரமேஷ் மெண்டிஸ் மற்றும் லக்ஷான் சந்தகன் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் சாய்த்திருந்தனர்.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 189 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் அணியானது போட்டியின் வெற்றி இலக்கை 19.5 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 189 ஓட்டங்களுடன் போட்டியின் வெற்றி இலக்கை அடைந்தது.

>>சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் அலெக்ஸ் ஹேல்ஸ்

கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் அணியின் வெற்றியை உறுதி செய்த வீரர்களில் பாபர் அசாம் சதம் விளாசியதோடு வெறும் 54 பந்துகளில் 8 பெளண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் அடங்கலாக 104 ஓட்டங்கள் பெற்றார். இதேநேரம் அணியின் வெற்றியை உறுதி செய்த மற்றுமொரு வீரர்களில் ஒருவரான பெதும் நிஸ்ஸங்க 40 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் 5 பெளண்டரிகள் அடங்கலாக 40 ஓட்டங்கள் எடுத்தார்.

கோல் டைடன்ஸ் அணியின் பந்துவீச்சில் தப்ரைஸ் சம்ஷி 02 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்த போதும் அவரது பந்துவீச்சு வீணாகியது.

போட்டியின் ஆட்டநாயகனாக பாபர் அசாம் தெரிவாகியிருந்தார்.

போட்டியின் சுருக்கம்

Result


Colombo Strikers
189/3 (19.5)

Galle Titans
188/3 (20)

Batsmen R B 4s 6s SR
Lasith Croospulle b Lakshan Sandakan 36 19 4 2 189.47
Shevon Daniel lbw b Ramesh Mendis 49 31 5 2 158.06
Bhanuka Rajapaksa b Naseem Shah 30 31 2 0 96.77
Tim Seifert not out 54 35 4 3 154.29
Dasun Shanaka not out 6 4 1 0 150.00


Extras 13 (b 7 , lb 1 , nb 0, w 5, pen 0)
Total 188/3 (20 Overs, RR: 9.4)
Bowling O M R W Econ
Naseem Shah 4 0 36 1 9.00
Ramesh Mendis 4 0 33 1 8.25
Mohammad Nawaz 2 0 21 0 10.50
Matheesha Pathirana 4 0 41 0 10.25
Chamika Karunaratne 2 0 20 0 10.00
Lakshan Sandakan 4 0 19 1 4.75


Batsmen R B 4s 6s SR
Pathum Nissanka c Shevon Daniel b Tabraiz Shamsi 54 40 5 1 135.00
Babar Azam c Shakib Al Hasan b Kasun Rajitha 104 59 8 5 176.27
Nuwanidu Fernando c Dasun Shanaka b Tabraiz Shamsi 8 13 0 0 61.54
Chamika Karunaratne not out 2 3 0 0 66.67
Mohammad Nawaz not out 14 4 1 1 350.00


Extras 7 (b 0 , lb 0 , nb 0, w 7, pen 0)
Total 189/3 (19.5 Overs, RR: 9.53)
Bowling O M R W Econ
Kasun Rajitha 2.5 0 42 1 16.80
Shakib Al Hasan 4 0 30 0 7.50
Richard Ngarava 4 0 40 0 10.00
Tabraiz Shamsi 4 0 27 2 6.75
Dasun Shanaka 2 0 15 0 7.50
Akila Dananjaya 3 0 35 0 11.67



முடிவு கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் 7 விக்கெட்டுக்களால் வெற்றி

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<