Home Tamil ரசலின் மிரட்டல் அதிரடியோடு வெற்றி பெற்ற கொழும்பு கிங்ஸ்

ரசலின் மிரட்டல் அதிரடியோடு வெற்றி பெற்ற கொழும்பு கிங்ஸ்

Lanka Premier League 2020 – Coverage powered by My Cola

368
SLC

சனிக்கிழமை (28) நடைபெற்று முடிந்த லங்கா ப்ரீமியர் லீக் (LPL) தொடரின் நான்காவது போட்டியில், கொழும்பு கிங்ஸ் அணி கோல் கிளேடியேட்டர்ஸ் அணிக்கு எதிராக 34 ஓட்டங்களால் வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றது. 

இதேநேரம், கொழும்பு கிங்ஸ் அணிக்கு கிடைத்த இந்த வெற்றி அவர்களுக்கு LPL தொடரில் கிடைத்த இரண்டாவது தொடர் வெற்றியாகவும் மாறியிருக்கின்றது. 

மழையின் இடையூறினால் அணிக்கு 5 ஓவர்களாக நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற கோல் கிளேடியேட்டர்ஸ் அணியின் தலைவர் சஹீட் அப்ரிடி முதலில் களத்தடுப்பினை தெரிவு செய்து கொண்டார். 

வெற்றியுடன் LPL தொடரினை ஆரம்பித்த ஜப்னா ஸ்டாலியன்ஸ்

LPL தொடரின் தமது முதல் போட்டியில் ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியுடன் தோல்வியடைந்த கோல் கிளேடியேட்டர்ஸ் தமது குழாத்தில் விக்கெட்காப்பு துடுப்பாட்டவீரர் சட்விக் வால்டனுக்குப் பதிலாக  ஹஸ்ரத்துல்லா சஷாயினை இணைத்திருந்தது. அதேநேரம், மெதிவ்ஸ் தலைமையிலான கொழும்பு கிங்ஸ் அணி வேகப்பந்துவீச்சாளர் மன்பிரிட் சிங் கோனிக்குப் பதிலாக டேனியல் பெல்-ட்ரம்மன்ட் இணை உள்வாங்கியது.

கொழும்பு கிங்ஸ் –  லோரி எவன்ஸ், தினேஷ் சந்திமால் (WK), அஷான் ப்ரியன்ஜன், திக்ஷில டி சில்வா, அஞ்செலோ மெதிவ்ஸ் (C), அன்ரே ரசல், இசுரு உதான, கைஸ் அஹமட், துஷ்மந்த சமீர, டேனியல் பெல்-ட்ரம்மன்ட், அமில அபோன்சோ

கோல் கிளேடியேட்டர்ஸ் – தனுஷ்க குணத்திலக்க, ஹஸ்ரத்துலல்லா சஷாய், அசாம் கான் (WK), பானுக்க ராஜபக்ஷ, சஹிட் அப்ரிடி (C), அகில தனன்ஞய, மிலிந்த சிறிவர்தன, செஹான் ஜயசூரிய, மொஹமட் சிராஸ், மொஹமட் ஆமீர், அசித்த பெர்னாந்து

இதனையடுத்து போட்டியின் நாணய சுழற்சிக்கு அமைவாக முதலில் துடுப்பாடிய கொழும்பு கிங்ஸ் அணிக்கு ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக திக்ஷில டி சில்வா மற்றும் அன்ட்ரே ரசல் ஆகியோர் களம் வந்தனர். 

இதில் திக்ஷில டி சில்வா தான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே ஆட்டம் இழந்த போதும் அன்ட்ரே ரசல் கோல் கிளேடியேட்டர்ஸ் அணியின் பந்துவீச்சாளர்களை பதம் பார்க்கத் தொடங்கினார். 

தொடர்ந்து மைதானத்தின் அனைத்து எல்லைகளிலும் பௌண்டரிகளை விளாசி அன்ட்ரே ரசல் அதிரடி துடுப்பாட்டத்தினை வெளிப்படுத்த, நிர்ணயிக்கப்பட்ட 5 ஓவர்களில் கொழும்பு கிங்ஸ் அணி ஒரு விக்கெட்டினை மாத்திரம் இழந்து 96 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. 

கொழும்பு கிங்ஸ் அணியின் துடுப்பாட்டம் சார்பாக, T20 போட்டிகளில் பெறப்பட்ட 5ஆவது அதிவேகமான அரைச்சதத்தினை 14 பந்துகளில் எடுத்த அன்ட்ரே ரசல் ஆட்டமிழக்காமல் வெறும் 19 பந்துகளுக்கு 65 ஓட்டங்களைப் பெற்றிருந்தார். இதில் மொத்தமாக 9 பௌண்டரிகளும் 4 சிக்ஸர்களும் அடங்கும். அதேநேரம், ரசலின் துடுப்பாட்ட ஜோடியாக இருந்த லோரி எவான்ஸ் 10 பந்துகளுக்கு 21 ஓட்டங்களை குவித்திருந்தார். 

டக்வர்த் லூவிஸ் முறையில் வெற்றியை சுவைத்த தம்புள்ள வைகிங்

கோல் கிளேடியேட்டர்ஸ் அணியின் பந்துவீச்சில் அசித்த பெர்னாந்து, கொழும்பு கிங்ஸ் அணியில் பறிபோன திக்ஷில டி சில்வாவின் விக்கெட்டினை கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 97 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய கோல் கிளேடியேட்டர்ஸ் அணி, 5 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை இழந்து 62 ஓட்டங்களை மாத்திரம் பெற்று போட்டியில் தோல்வியடைந்தது.

கோல் கிளேடியேட்டர்ஸ் அணியின் துடுப்பாட்டத்தில் தனுஷ்க குணத்திலக்க ஆட்டமிழக்காமல் 30 ஓட்டங்கள் பெற்று அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கையினை பதிவு செய்தார். 

அதேநேரம், கொழும்பு கிங்ஸ் அணியின் பந்துவீச்சில் சிறப்பாக செயற்பட்ட அஷான் பிரியஞ்சன் மற்றும் கைஸ் அஹமட் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் கைப்பற்றியிருந்தனர். 

போட்டியின் ஆட்டநாயகன் விருது அதிரடி துடுப்பாட்டத்தினை வெளிப்படுத்திய அன்ட்ரே ரசலுக்கு வழங்கப்பட்டிருந்தது. 

இப்போட்டியில் தோல்வியடைந்து LPL தொடரில் இரண்டாவது தோல்வியினை தழுவியிருக்கும் கோல் கிளேடியேட்டர்ஸ் அணி எதிர்வரும் புதன்கிழமை (03) ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியுடனும், கொழும்பு கிங்ஸ் அணி எதிர்வரும் திங்கட்கிழமை (01) தம்புள்ள வைகிங் அணியுடனும் தமது அடுத்தடுத்த போட்டிகளில் விளையாடவிருக்கின்றன.

போட்டியின் சுருக்கம்

Result


Galle Gladiators
62/2 (5)

Colombo Stars
96/1 (5)

Batsmen R B 4s 6s SR
Andre Russell not out 65 19 9 4 342.11
Thikshila de silva c Milinda Siriwardane b Asitha Fernando 0 1 0 0 0.00
Laurie Evans not out 21 10 1 2 210.00


Extras 10 (b 0 , lb 0 , nb 0, w 10, pen 0)
Total 96/1 (5 Overs, RR: 19.2)
Did not bat Dinesh Chandimal, Angelo Mathews, Daniel Bell Drummond, Isuru Udana, Ashan Priyanjan, Qais Ahmed, Dushmantha Chameera, Amila Aponso,

Fall of Wickets 1-31 (3.1) Thikshila de silva,

Bowling O M R W Econ
Mohammad Amir 2 0 46 0 23.00
Asitha Fernando 1 0 26 0 26.00
Mohamed Shiraz 1 0 11 0 11.00
Shahid Afridi 1 0 13 0 13.00


Batsmen R B 4s 6s SR
Danushka Gunathilaka not out 30 15 2 2 200.00
Hazratullah Zazai c Thikshila de silva b Ashan Priyanjan 6 6 1 0 100.00
Shahid Afridi c Ashan Priyanjan b Qais Ahmed 12 6 3 0 200.00
Azam Khan not out 10 3 1 1 333.33


Extras 4 (b 0 , lb 1 , nb 0, w 3, pen 0)
Total 62/2 (5 Overs, RR: 12.4)
Did not bat Bhanuka Rajapakse, Shehan Jayasuriya, Dhananjaya Lakshan, Milinda Siriwardane, Mohammad Amir, Mohamed Shiraz, Asitha Fernando,

Fall of Wickets 1-37 (2.6) Hazratullah Zazai, 2-52 (4.3) Shahid Afridi,

Bowling O M R W Econ
Isuru Udana 2 0 33 0 16.50
Dushmantha Chameera 1 0 16 0 16.00
Ashan Priyanjan 1 0 1 1 1.00
Qais Ahmed 1 0 11 1 11.00



முடிவு – கொழும்பு கிங்ஸ் 34 ஓட்டங்களால் வெற்றி

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<