Home Tamil முதல் வெற்றியை பதிவுசெய்தது கோல் க்ளேடியேட்டர்ஸ்!

முதல் வெற்றியை பதிவுசெய்தது கோல் க்ளேடியேட்டர்ஸ்!

Lanka Premier League 2020 – Coverage powered by My Cola

237
SLC

கொழும்பு கிங்ஸ் மற்றும் கோல் க்ளேடியேட்டர்ஸ் அணிகளுக்கு இடையிலான லங்கா ப்ரீமியர் லீக்கின் 14வது போட்டியில் கோல் க்ளேடியேட்டர்ஸ் அணி தங்களுடைய முதல் வெற்றியை பதிவுசெய்துள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை பெற்றுக்கொண்ட கொழும்பு கிங்ஸ் அணி 171 ஓட்டங்களை குவித்திருந்த நிலையில், பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கோல் க்ளேடியேட்டர்ஸ் அணி 17.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.

LPL தொடரில் தமது அரையிறுதி வாய்ப்பினை உறுதி செய்த கொழும்பு கிங்ஸ்

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அஞ்செலோ மெதிவ்ஸ், துஸ்மந்த சமீரவுக்கு ஓய்வளித்து, தம்மிக பிரசாத்தை அணியில் இணைத்திருந்ததுடன், கோல் க்ளேடியேட்டர்ஸ் அணியில் அசித பெர்னாண்டோ மற்றும் மிலிந்த சிறிவர்தன ஆகியோருக்கு பதிலாக செஹான் ஆராச்சிகே மற்றும் நுவான் துஷார ஆகியோர் அணியில் இணைக்கப்பட்டிருந்தனர்.

கோல் க்ளேடியேட்டர்ஸ்- தனுஷ்க குணதிலக்க, டேனியல் பெல்-ட்ரெமொண்ட், பானுக ராஜபக்ஷ (தலைவர்), தனன்ஜய லக்ஷான், அஷாம் கான், அஸான் அலி, செட்விக் வோல்டன், செஹான் ஜயசூரிய, லக்ஷான் சந்தகன், மொஹமட் ஆமிர், செஹான் ஆராச்சிகே, நுவான் துஷார

கொழும்பு கிங்ஸ் –  லோரி எவன்ஸ், தினேஸ் சந்திமால், அசான் ப்ரியன்ஜன், திக்ஷில டி சில்வா, அஞ்செலோ மெதிவ்ஸ் (தலைவர்), அன்ரே ரசல், இசுரு உதான, கைஸ் அஹமட்,, தம்மிக பிரசாத், தரிந்து கௌஷால்

கொழும்பு கிங்ஸ் அணிசார்பாக வழமைப்போன்று தினேஷ் சந்திமால் சிறப்பான ஆரம்பத்தை பெற்றுக்கொடுக்க, மத்தியவரிசையில் டேனியல் பெல்-ட்ரெமொண்ட் நிதானமாக ஆடினார். ஆனாலும், ஏனைய மத்தியவரிசை வீரர்கள் ஏமாற்றினர். எவ்வாறாயினும், திக்ஷில டி சில்வா மற்றும் இசுரு உதான ஆட்டத்தை சிறப்பாக நிறைவுசெய்ய, கொழும்பு கிங்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 171 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அதிகபட்சமாக டேனியல் பெல்-ட்ரெமொண்ட் 44 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, சந்திமால் 35 ஓட்டங்கள், திக்ஷில டி சில்வா 27 ஓட்டங்கள் மற்றும் இசுரு உதான 21 ஓட்டங்கள் என பெற்றுக்கொடுத்தனர். பந்துவீச்சில் மொஹமட் ஆமிர் 5 விக்கெட்டுகளையும், லக்ஷான் சந்தகன் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கோல் க்ளேடியேட்டர்ஸ் அணிக்கு தனுஷ்க குணதிலக்க மற்றும் அஹ்சான் அலி ஆகியோர் சிறந்த இணைப்பாட்டத்தை பெற்றுக்கொடுத்து 97 ஓட்டங்களை பகிர்ந்தனர். இந்த இணைப்பாட்டத்துடன், அஷாம் கான் மற்றும் பானுக ராஜபக்ஷ ஆகியோரின் பங்களிப்பு கோல் க்ளேடியேட்டர்ஸ் அணியை அவர்களது முதல் வெற்றிக்கு அழைத்துச்சென்றது.

கோல் க்ளேடியேட்டர்ஸ் சார்பாக அஹ்சான் அலி அதிகபட்சமாக 56 ஓட்டங்களையும், தனுஷ்க குணதிலக்க 38 ஓட்டங்களையும் பெற்றதுடன், ஆட்டமிழக்காமல் பானுக ராஜபக்ஷ 37 ஓட்டங்களையும், அஷாம் கான் 35 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். கொழும்பு கிங்ஸ் அணியின் பந்துவீச்சில் கைஸ் அஹ்மட் மற்றும் தம்மிக பிரசாத் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இந்த வெற்றியின் ஊடாக கோல் க்ளேடியேட்டர்ஸ் அணி தங்களுடைய முதல் வெற்றியை பதிவுசெய்து 2 புள்ளிகளை பெற்றுக்கொண்டுள்ளது. இதன்மூலம் கண்டி டஸ்கர்ஸ் மற்றும் கோல் க்ளேடியேட்டர்ஸ் அணிகளுக்கு இடையிலான அரையிறுதி சுற்றுக்கு தகுதிபெறும் போட்டி கடினமாகியுள்ளது. அத்துடன், புள்ளிப்பட்டியலில் கோல் க்ளேடியேட்டர்ஸ் அணி நான்காம் இடத்துக்கும் முன்னேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Result


Colombo Stars
171/10 (20)

Galle Gladiators
175/2 (17.3)

Batsmen R B 4s 6s SR
Dinesh Chandimal c Chadwick Walton b Mohammad Amir 35 20 4 2 175.00
Laurie Evans lbw b Dhananjaya Lakshan 7 10 1 0 70.00
Daniel Bell Drummond c Dhananjaya Lakshan b Mohammad Amir 44 36 3 1 122.22
Angelo Mathews c Chadwick Walton b Lakshan Sandakan 11 9 1 0 122.22
Ashan Priyanjan c Sahan Arachchige b Lakshan Sandakan 5 7 0 0 71.43
Andre Russell c & b Lakshan Sandakan 11 9 2 0 122.22
Thikshila de silva c Chadwick Walton b Mohammad Amir 27 17 3 1 158.82
Isuru Udana c & b 21 10 1 2 210.00
Qais Ahmed c Danushka Gunathilaka b Mohammad Amir 5 4 1 0 125.00
Tharindu Kaushal run out () 0 1 0 0 0.00
Dhammika Prasad not out 0 0 0 0 0.00


Extras 5 (b 0 , lb 0 , nb 0, w 5, pen 0)
Total 171/10 (20 Overs, RR: 8.55)
Bowling O M R W Econ
Mohammad Amir 4 0 26 5 6.50
Nuwan Thushara 4 0 31 0 7.75
Dhananjaya Lakshan 4 0 34 1 8.50
Lakshan Sandakan 4 0 33 3 8.25
Bhanuka Rajapakse 2 0 22 0 11.00
Shehan Jayasuriya 2 0 25 0 12.50


Batsmen R B 4s 6s SR
Danushka Gunathilaka lbw b Qais Ahmed 38 28 5 0 135.71
Ahsan Ali c Andre Russell b Dhammika Prasad 56 38 9 1 147.37
Bhanuka Rajapakse not out 37 24 6 1 154.17
Azam Khan not out 35 16 3 3 218.75


Extras 9 (b 4 , lb 0 , nb 1, w 4, pen 0)
Total 175/2 (17.3 Overs, RR: 10)
Did not bat Chadwick Walton, Dhananjaya Lakshan, Shehan Jayasuriya, Sahan Arachchige, Nuwan Thushara, Mohammad Amir, Lakshan Sandakan,

Bowling O M R W Econ
Angelo Mathews 1 0 10 0 10.00
Isuru Udana 4 0 32 0 8.00
Andre Russell 2 0 22 0 11.00
Ashan Priyanjan 2 0 22 0 11.00
Thikshila de silva 1 0 13 0 13.00
Qais Ahmed 4 0 23 1 5.75
Dhammika Prasad 2.3 0 33 1 14.35
Tharindu Kaushal 1 0 16 0 16.00



>>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<