16 அணிகள் மோதும் கொழும்பு லீக்கின் இளையோருக்கான தொடர்

343

கொழும்பு கால்பந்து லீக் முதல் முறையாக ஏற்பாடு செய்து நடத்தும் 19 வயதின்கீழ் வீரர்களுக்கான கால்பந்து சுற்றுத்தொடர் செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

குறித்த தொடர் தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பொன்று கடந்த வாரம் இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது. இதன்போது இடம்பெற்ற அணிகளை குழுநிலைப்படுத்தும் நிகழ்வில் தொடரில் பங்கேற்கும் 16 அணிகளும் A, B, C மற்றும் D என 4 குழுக்களுக்கு வகைப்படுத்தப்பட்டன.

இதன்படி, லீக் முறையில் இடம்பெறும் முதல் சுற்றுப் போட்டிகளில் ஒவ்வொரு குழுக்களிலும் உள்ள 5 அணிகளும் தமது குழுவில் உள்ள ஏனைய அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். குழு நிலைப் போட்டிகளின் நிறைவில் ஒவ்வொரு குழுவிலும் தலா முதல் இரண்டு இடங்களையும் பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றான நொக் அவுட் சுற்றுக்கு தகுதி பெறும்.

தொடரின் போட்டிகள் அனைத்தும் கொழும்பு பொரளை கெம்பல் பார்க் மைதானத்தில் இடம்பெறும். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 2 மணிக்கு முதல் போட்டியும் 4 மணிக்கு இரண்டாவது போட்டியும் இடம்பெறும் வகையில் ஒரு வாரத்திற்கு 4 போட்டிகள் நடக்கும்.

சுற்றுத் தொடரில் சம்பியனாகும், இரண்டாம் இடம் பிடிக்கும் அணிகளுக்கு பணப்பரிசில், கிண்ணம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும் அதேவேளை, மூன்றாம் இடத்தினைப் பெறும் அணிக்கு கிண்ணம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும் என்று போட்டி ஏற்பாட்டளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த சுற்றுத்தொடரில் 2004ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி அல்லது அதற்குப் பின்னர் பிறந்த வீரர்களுக்கு பங்கேற்க முடியும் என்றும் போட்டி ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது.

அணிகளின் குழுநிலை

>> மேலும் கால்பந்து செய்திகளுக்கு <<