பலம்கொண்ட சென்னையின் அணியுடன் போராடித் தோற்ற கொழும்பு

396

இந்தியாவின் அஹமதாபாத்தில் நடைபெற்ற AFC கிண்ண தகுதிகாண் போட்டிகளின் ப்ளே ஓப் சுற்றில் 2ஆவது கட்டப் போட்டியில் பலம்மிக்க சென்னையின் கால்பந்து கழகத்திற்கு கடும் போட்டி கொடுத்த கொழும்பு கால்பந்து கழகம் 1-0 என்ற மொத்த கோல் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்துள்ளது.

சென்னையின் கால்பந்து கழக அணியுடனான மோதலை சமநிலை செய்த கொழும்பு அணி

நேற்று (6) கொழும்பு ரேஸ் கோஸ் மைதானத்தில் ….

கொழும்பு கால்பந்து கழகம் மற்றும் சென்னையின் கால்பந்து கழகத்திற்கு இடையில் கடந்த வாரம் கொழும்பு, குதிரைப் பந்தயத் திடல் (ரேஸ்கோஸ்) அரங்கில் நடைபெற்ற முதல் கட்ட போட்டி கோலின்றி சமநிலையில் முடிந்தது. இந்நிலையில், இரண்டாவது கட்ட போட்டியில் இரு அணிகளும் AFC கிண்ண குழுநிலை போட்டிகளுக்கு தகுதிபெற சரிசமமான வாய்ப்புகளுடனேயே களமிறங்கின.

எதிர்பார்த்தது போன்று, சென்னையின் அணி தனது ஆரம்ப வரிசையில் மாற்றங்களை கொண்டுவந்து முதல் கட்ட போட்டியில் பதில் வீரர்களாக வந்த ஜேஜே லால்பெக்லு மற்றும் தோய் சிங்குடன் முன்களத்தில் கிறிஸ் ஹேர்ட், சி.கே. வினீத் அழைக்கப்பட்டனர். மறுபக்கம் கொழும்பு கால்பந்து கழகத்தில் உடல் தகுதி பெற்ற டக்சன் பியுஸ்லஸ் ஆரம்ப பதினொருவரில்
இடம்பெற்றார்.   

கொழும்பு அணி போட்டியில் ஆரம்ப உதையை பெற்றபோதும் உடனடியாக இந்திய கழகத்திடம் பந்தை பறிகொடுத்தது. கொழும்பு கால்பந்து கழக பின்கள வீரர்கள் தனது தற்காப்பு அரணை பலப்படுத்தி எதிரணியினர் ஊடுருவுவதை தடுத்தனர்.

ஷலன சமீர தவறிழைத்தபோது முதல் கோல் வாய்ப்பு கிட்டிய நிலையில் மெலிசன் அல்வேஸ் உயரப்பாய்ந்து தலையால் முட்டிய பந்து கோலை விட்டு வெளியே சென்றது.

சென்னையின் அணி அதிகம் பந்தை தன்வசம் வைத்திருந்ததோடு அதன் கோல்பெறும் முயற்சிகளை கொழும்பு அணியின் தற்காப்பு அரண் சிறப்பாக செயற்பட்டு தடுத்தது.

கொழும்பு அணிக்கு மிக அரிதான சந்தர்ப்பமாக சென்னையின் அணியினர் செலுத்திய பந்து ஐசாக் அத்தேவுவிடம் கிடைத்தது. அவர் அந்தப் பந்தை கோலை நோக்கி உதைத்தபோதும் கரன்ஜித் சிங் சிறப்பாக தடுத்தார். இதனைத் தொடர்ந்து கிடைத்த கோணர் வாய்ப்பிலும் கொழும்பு அணிக்கு கோல்பெற சந்தர்ப்பம் கிட்டியபோதும் ஐசாக் தலையால் முட்டிய பந்து வெளியே சென்றது.

இதனைத் தொடர்ந்து சென்னையின் அணிக்கு சவால் கொடுக்க ஆரம்பித்த கொழும்பு அணி அபாரமாக பந்தை கடத்தும் வாய்ப்புகளையும் உருவாக்கியது. முன்வரிசையில் மொஹமட் பஸால் வாய்ப்புகளை ஏற்படுத்தினார்.  

பெக்-பாஸ் மீறலுக்கான ப்ரீ கிக் உதை எதிரணி பெனால்டி எல்லைக்குள் சென்றபோது முதல் பாதியில் கொழும்பு அணிக்கு சிறந்த வாய்ப்பு கிடைத்தது. மொமாஸ் யாப்போ உதைத்த பந்து கோல் கம்பத்திற்கு வெளியால் சென்றது.

இதனைத் தொடர்ந்து கொழும்பு அணிக்கு அடுத்தடுத்து கோணர் வாய்ப்புகள் கிடைத்தது சென்னையின் கோல்காப்பாளருக்கு கடும் சவாலாக அமைந்தது.   

முதல் பாதி – சென்னையின் கா.க. 0 – 0 கொழும்பு கா.க.

சென்னையின் அணியின் ஆதிக்கத்துடனேயே இரண்டாவது பாதி ஆட்டம் ஆரம்பமானது. எனினும், அவர்கள் ஓர் அங்குலம் முன்னேறுவதற்கு கொழும்பு வாய்ப்புக் கொடுக்கவில்லை. உள்ளூர் அணி எதிரணி பின்கள வீரர்களை முறியடித்து முன்னேறியபோது அதற்கு கோல் பெறும் வாய்ப்புக் கிடைத்தபோதும் கொழும்பு அதற்கும் வாய்ப்பு அளிக்கவில்லை.

போட்டி ஒரு மணி நேரத்தை எட்டும்போது பின்களத்தை பலப்படுத்துவதற்காக பயிற்சியாளர் ரூமி, அபீல் மொஹமட்டுக்கு பதில் சிராஜ் ஜெயினை மாற்று வீரராக அழைத்தார்.   

நிரான் கனிஷ்க செய்த தவறால் இடைவெளியை பெற்ற சி.கே வினீத் கோல் முயற்சியில் ஈடுபட்டபோதும் கொழும்பு கோல் காப்பாளர் கவீஷ் பெர்னாண்டோ அபாரமாக பாய்ந்து தடுத்தார்.

ஆசிய மற்றும் சாப் கால்பந்து போட்டிகளுக்கான இலங்கை குழாம் அறிவிப்பு

இலங்கை தேசிய மகளிர் கால்பந்தாட்ட …..

இறுதியில் 68ஆவது நிமிடத்தில் கொழும்பு அணியின் தற்காப்பு அரண் முறியடிக்கப்பட்டது. ஷலன சமீர தவறவிட்ட பந்தை தாவிப்பெற்ற ஜேஜே லால்பெக்லுவா சென்னையின் அணிக்கு முக்கியமான கோலை புகுத்தினார்.

போட்டியை சமநிலை செய்து வெளி மைதானத்தில் கோல் ஒன்றை பெற்று முன்னேறுவதற்கு ஒரு கோல் தேவைப்படும் நிலையில் மொஹமட் ஆகிப்புக்கு பதில் சர்வான் ஜோஹர் மைதானத்திற்கு அனுப்பப்பட்டார். கொழும்பு அணி போட்டியை சமநிலை செய்ய போராடியபோது சென்னையின் வீரர்கள் தற்காப்பு ஆட்டத்திற்கு திரும்பினர்.

கடைசி நிமிடங்களை எட்டும்போது கொழும்பு போட்டியை சமன் செய்ய அனைத்து முயற்சிகளையும் செய்தது. இந்தத் தருணத்தில் சென்னையின் அணி 2019 AFC கிண்ண குழுநிலைக்கு முன்னேறுவதற்காக தனது பின்களத்தை பலப்படுத்தியதனால், ஆட்டம் நிறைவில் அவ்வணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. எனவே, மொத்த கோல் கணக்கலும் 1-0 என வெற்றி பெற்ற அவ்வணி முதல் முறை AFC கிண்ண குழுநிலைக்கு தகுதி பெற்றது.

கொழும்பு அணி இந்தத் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதோடு பலம்மிக்க எதிரணியை தோளுக்கு தோள் நின்று எதிர்கொண்டமை குறிப்பிடத்தக்கது.  

முழு நேரம் – சென்னையின் கா.க. 1 – 0 கொழும்பு கா.க.

கோல் பெற்றவர்
சென்னையின் கா.க. – ஜேஜே லால்பெக்லுவா 68′

மஞ்சள் அட்டை பெற்றவர்கள்
சென்னையின் கா.க. – கிறிஸ்டோபர் ஹார்ட் 12′
கொழும்பு கா.க. – ஷலன சமீர 5′

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<