அவுஸ்திரேலியாவின் குயின்ட்ஸ்லாந்து மாநிலத்தின் கோல்ட் கோஸ்ட் நகரில் நடைபெற்று வரும் 21ஆவது பொதுநலவாய விளையாட்டு விழாவில் நேற்று(11) நடைபெற்ற மெய்வல்லுனர் போட்டிகளில் இலங்கை வீரர்கள் இறுதிப் போட்டிகளில் பங்குபற்றியிருந்தனர். எனினும் எந்த ஒருவராலும் இந்தப் போட்டிகளில் பதக்கங்களை பெற்றுக்கொள்ள முடியாமல் போனது.
மைதான நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட பிரசாத் விமலசிறி மற்றும் தில்ஹானி லேகம்கே ஆகியோர் முதல் 8 இடங்களுக்குள் இடம்பெற்றிருந்தனர். இதில் முதல் நிகழ்ச்சியாக இடம்பெற்ற ஆண்களுக்கான உயரம் பாய்தல் இறுதிப் போட்டியில் கலந்துகொண்ட மஞ்சுள குமாரவுக்கு 8ஆவது இடத்தையே பெற்றுக்கொள்ள முடிந்தது.
அதிவேக வீரராக அக்கானியும், வீராங்கனையாக மிச்செலியும் முடிசூடினர்
நான்கு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறுகின்ற பொதுநலவாய விளையாட்டு விழாவின் 21ஆவது
குறித்த போட்டியில் 2.18 மீற்றர் உயரத்தைத் தாவுவதற்கு மேற்கொண்ட 3 முயற்சிகளிலும் தோல்வியைத் தழுவிய அவர், எதிர்பாராத விதமாக ஆரம்ப சுற்றுடன் வெளியேறினார். எனினும், முன்னதாக நடைபெற்ற தகுதிச் சுற்றில் 2.21 மீற்றர் உயரத்தைத் தாவி இறுதிப் போட்டிக்கு அவர் தகுதியைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இறுதிப் போட்டியில் மஞ்சுள குமாரவுடன், ஒலிம்பிக் மற்றும் பொதுநலவாய விளையாட்டு விழாக்களில் பதக்கங்களை வென்ற அனுபவமிக்க வீரர்களும் கலந்துகொண்டிருந்தனர்.
இதில், தங்கப் பதக்கத்தை அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்கின் சகோதரர், பிரண்டன் ஸ்டார்க் பெற்றுக்கொண்டார். 2.32 மீற்றர் உயரத்தைத் தாவிய அவர், தனது தனிப்பட்ட சிறந்த உயரத்தைப் பதிவுசெய்திருந்ததுடன், பொதுநலவாய விளையாட்டு விழாவில் முதலாவது தங்கப் பதக்கத்தையும் வென்றார்.
24 வயதான பிரண்டன், 2010ஆம் ஆண்டு நடைபெற்ற இளையோர் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கத்தை வென்றார். அத்துடன், 2015ஆம் ஆண்டு நடைபெற்ற உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டிகளில் முதற்தடவையாகக் கலந்துகொண்டு 12ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்ட அவர், இறுதியாக 2016 றியோ ஒலிம்பக்கில் கலந்துகொண்டு 2.20 மீற்றர் உயரத்தைத் தாவி 15ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டார்.
ருமேஷிக்காவுக்கு 6ஆவது இடம்
நேற்று நடைபெற்ற பெண்களுக்கான 200 மீற்றர் அரையிறுதிப் போட்டியில் கலந்துகொண்ட ருமேஷிகா ரத்னாயக்க, போட்டியை 23.60 செக்கன்களில் நிறைவுசெய்து 6ஆவது இடத்தைப் பெற்றுக் கொண்டார்.
குத்துச்சண்டையில் பதக்கம் வென்று வரலாறு படைத்தது இலங்கை
நான்கு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறுகின்ற.. அவுஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் நடைபெற்று
இதன்படி, 24 வீராங்கனைகள் பங்குபற்றிய அரையிறுதிப் போட்டியில் ஒட்டுமொத்தமாக 14ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்ட அவர், இறுதிப் போட்டியில் விளையாடும் வாய்ப்பை இழந்தார்.
எனினும், முன்னதாக நடைபெற்ற தகுதிச்சுற்றில் கலந்துகொண்ட ருமேஷிகா, போட்டியை 23.43 செக்கன்களில் நிறைவுசெய்து 2ஆவது இடத்தைப் பெற்று அரையிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பிரசாத்துக்கு 7ஆவது இடம்
12 வீரர்கள் பங்குபற்றிய ஆண்களுக்கான நீளம் பாய்தல் போட்டியின் இறுதிப் போட்டி நேற்று(11) மாலை நடைபெற்றது. இதில் இலங்கை சார்பாக போட்டியிட்ட பிரசாத் விமலசிறி, முறையே 7.52, 7.89 மற்றும் 7.50 மீற்றர் தூரங்களைப் பதிவுசெய்து 7ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.
7.91 மீற்றர் தூரத்தைப் பாய்ந்து தனது தனிப்பட்ட சிறந்த தூரத்தை முன்னதாக பதிவு செய்திருந்த பிரசாத், 0.3 மீற்றரினால் அதனை முறியடிக்க தவறிவிட்டார்.
இப்போட்டியில் உலக சம்பியனான தென்னாபிரிக்காவின் லுவோ மனியொங்கா, 8.41 மீற்றர் தூரத்தைப் பாய்ந்து பொதுநலவாய விளையாட்டு விழா சாதனையுடன் தங்கப் பதக்கத்தையும், அவுஸ்திரேலியாவின் ஹென்ரி பிரைனி வெள்ளிப் பதக்கத்தையும், மற்றுமொரு தென்னாபிரிக்க வீரரான ருஷ்வால் சமய் வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.
தில்ஹானிக்கு 5ஆவது இடம்
பெண்களுக்கான ஈட்டி எறிதலில் கலந்துகொண்ட இலங்கையின் தேசிய சம்பியனான தில்ஹானி லேகம்கே, 56.02 மீற்றர் தூரத்தை எறிந்து 5ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.
முன்னதாக கடந்த ஜனவரி மாதம் தியகமவில் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டு விழாவுக்கான தகுதிகாண் போட்டியில் கலந்துகொண்ட தில்ஹானி, 58.41 மீற்றர் தூரத்தை எறிந்து புதிய தேசிய சாதனை படைத்திருந்தார்.
பொதுநலவாய மெய்வல்லுனரில் இறுதிப் போட்டியில் 2 இலங்கையர்
அவுஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் நடைபெற்று வரும் 21ஆவது பொதுநலவாய … இதன்படி
எனினும் இப்போட்டியில், முறையே 51.13, 53.58 மற்றும் 56.02 மீற்றர் தூரங்களை அவர் பதிவுசெய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், 8 வீராங்கனைகள் பங்குபற்றிய இறுதிப் போட்டியில் 68.92 மீற்றர் தூரத்தை எறிந்து பொதுநலவாய விளையாட்டு விழா சாதனையுடன் அவுஸ்திரேலியாவின் கெத்ரின் மிட்சென் தங்கப் பதக்கத்தை வென்றார்.
நிமாலி, கயன்திகாவுக்கு ஏமாற்றம்
இலங்கையின் மத்திய தூர ஓட்ட வீராங்கனைகளான நிமாலி லியனாரச்சி மற்றும் கயன்திகா அபேரத்ன ஆகியோர் பெண்களுக்கான 800 மீற்றர் தகுதிச்சுற்றுப் போட்டியில் இன்று(12) களமிறங்கினர்.
இதன் முதலாவது தகுதிச் சுற்றில் கலந்துகொண்ட கயன்திகா அபேரத்ன, போட்டியை 2 நிமிடங்களும் 04.07 செக்கன்களில் நிறைவு செய்து 8ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.
எனினும், குறித்த போட்டியில் இலங்கையின் தேசிய சாதனைக்கு சொந்தக்காரியான கயன்திகாவினால், தனது தனிப்பட்ட சிறந்த காலத்தை(2 நிமிடங்களும் 02.55 செக்.) முறியடிக்க முடியாமல் போனது.
இப்போட்டியில் றியோ ஒலிம்பிக் மற்றும் உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டிகளில் தங்கப் பதக்கங்களை வென்ற தென்னாபிரிக்க வீராங்கனை கெஸ்டர் செமன்யா முதலிடத்தைப் பெற்று இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.
இதேவேளை, 3ஆவது தகுதிச்சுற்றில் கலந்துகொண்ட இலங்கையின் மற்றுமொரு வீராங்கனையான நிமாலி லியனாரச்சி, போட்டியை 2 நிமிடங்களும் 08.52 செக்கன்களில் நிறைவுசெய்து 7ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.
மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க