எதிரணி வீரர் கன்னி சதம் பெறுவதை தடுத்த பந்துவீச்சாளருக்கு 9 போட்டிகள் தடை

1048

இங்கிலாந்து உள்ளூர் லீக் கிரிக்கெட் போட்டியில் எதிரணி துடுப்பாட்ட வீரர் தனது கன்னி சதத்தை பெறுவதை தடுக்கும் வகையில் பந்தை தலைக்கு மேலால் பௌண்டரியை நோக்கி வீசிய பந்துவீச்சாளருக்கு ஒன்பது போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.  

டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களில் உலகின் முதலிடத்தில் கோஹ்லி

துடுப்பாட்ட வீரர்களுக்கான உலக டெஸ்ட் தரவரிசையில் ஸ்டீவ் ஸ்மித்தை பின்தள்ளி இந்திய கிரிக்கெட்…

மைன்ஹெட் அணியின் துடுப்பாட்ட வீரர் ஜேய் டர்ரல் ஆட்டமிழக்காது 98 ஓட்டங்களுடன் துடுப்பெடுத்தாடியபோது அவரது அணியின் வெற்றிக்கு மேலும் இரண்டு ஓட்டங்கள் பெற வேண்டி இருந்தது. அப்போது பந்து வீசிய புர்னல் அணி பந்துவீச்சாளர் அந்தப் பந்தை சதம் பெற காத்திருந்த டர்ரலின் தலைக்கு மேலால் நோபோலாக பௌண்டரியை நோக்கி வீசினார்.

இந்த சம்பவம், தமது கிரிக்கெட் லீக்கிற்கும், பொதுவாக கிரிக்கெட்டுக்கும் அவமானத்தை ஏற்படுத்தும் ஒரு செயல் எனக் குறிப்பிட்டிருக்கும் சமர்செட் கிரிக்கெட் லீக், இது விளையாட்டு உணர்வுக்கு எதிராக இருந்ததாகவும் தெரிவித்தது.

அந்த கிரிக்கெட் லீக் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், ‘இது பற்றி மறுபரிசீலனை செய்த பின் புர்னல் கிரிக்கெட் கழக வீரருக்கு இந்த லீக்கின் முழுமையான போட்டிகளான ஒன்பது ஆட்டங்களிலும் ஆட தடை விதிக்கப்படுகிறது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், அந்த பந்துவீச்சாளரின் பெயர் குறிப்பிடப்படவில்லை.

இந்த சம்பவத்திற்கு தனது பந்துவீச்சாளர் சார்பில் புர்னல் அணித் தலைவர் துடுப்பாட்ட வீரரிடம் மன்னிப்புக் கேட்டுள்ளார். ‘சில விடயங்களை தவிர்க்க முடியவில்லை’ என்று அவர் கூறியுள்ளார்.  எனினும், ‘இது நல்லதல்ல’ என்று மைன்ஹெட் அணி டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளது.

எனினும் தனது கன்னி சதத்தை பெற முடியாமல்போன டர்ரல் சற்று ராஜதந்திரமாக பதிலளித்துள்ளார். ‘வெட்ககரமான முறையில் முடிவடைந்தபோதும் அது நன்றாக அமைந்தது’ என்றுள்ளார்.

இந்த சம்பவத்திற்கு கடும் விமர்சனங்கள் வெளியாகி வரும் நிலையில், அதற்கு டுவிட்டர் ஊடாக பதிலளித்திருக்கும் புர்னல் கிரிக்கெட் கழகம், ‘போட்டியை முடிவுக்கு கொண்டுவந்த அதிர்ச்சி தரும் சம்பவத்தை மன்னிக்க முடியாது’ என்று தெரிவித்துள்ளது. இதற்காக அந்த பந்துவீச்சாளர் மற்றும் அணித் தலைவர் இருவரும் மன்னிப்புக் கேட்டுக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளது.

புதிய ஒப்பந்தத்தில் கைவிடப்பட்ட முன்னணி வீரர்கள்

பாகிஸ்தான் கிரிக்கெட் சபை, எதிர்வரும் மூன்று வருடங்களுக்கு தேசிய வீரர்களுக்கு வழங்கவுள்ள…

எவ்வாறாயினும் கிரிக்கெட் உலகில் இவ்வாறு நிகழ்வது இது முதல் முறையல்ல. 2017 கரீபியன் லீக் போட்டியில் துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த எவின் லுவிஸ் 33 பந்துகளில் 97 ஓட்டங்களை பெற்றிருந்தபோது மேற்கிந்திய தீவுகளின் நட்சத்திர சகலதுறை வீரர் கிரேன் பொல்லார்ட் நோ போல் வீசி எதிரணியின் வெற்றியை உறுதி செய்தார்.

அதேபோன்று, 2010 ஆம் ஆண்டு இந்தியாவின் விரேந்தர் ஷெவாக் 99 ஓட்டங்கள் பெற்றிருந்தபோது இலங்கையின் சுழற்பந்து வீச்சாளர் சுராஜ் ரன்திவ் நோ போல் வீசி போட்டியை முடிவுக்கு கொண்டுவந்தார்.

இதற்காக ரன்திவ் மற்றும் இலங்கை கிரிக்கெட் சபை ஷெவாக்கிடம் மன்னிப்புக் கோட்டுக் கொண்டதோடு ரன்திவ் ஒரு போட்டியில் இடைநிறுத்தப்பட்டமையும் நினைவுகூறத்தக்கது.